Saturday, 19 March 2016

353. She is tat tvam and asi

Verse 353
பூரணமாய்க் காரணமாய் புத்தியாகி
போக்காகி வரத்தாகி புகழ்ந்து எங்கும்
காரணமாய் நிர்குணமாய்க் கருணையாரக்
கண்ணடங்கா விண்ணாகி கருத்துமாகி
வாரணமாய் அதுவாகி இதுவுமாகி
மருவியபின் அதுவற்று இதுவுமற்று
தோரணமாய் அண்டமுதற் பதமுமாகிச்
சொல்லாகிக் குறியாகி நின்றாவாறே

Translation:
As fully complete, as the causality as intellect
As going away and coming back, as the praise worthy
Causality everywhere, as quality free, as mercy
As the space not contained by the eye, as the thought
As plantain, as that and this
After attaining- becoming free of that and this
As the threshold, as the first letter/locus of the universe
As the word, as the sign, the state of remaining so.

Commentary:
Sakthi is the poorna one replete in all respects.  She is the cause for everything.  She is the buddhi or intellect which reveals everything.  She the gunapoorani as well as nirguni- one displaying all the qualities as well as the one who remains as the locus where everything remains merged without distinction.  She is the one unlimited by sensual (inner as well as outer) perceptions.  She is beyond the perception of the eye, or the mind. She is the plaintain- the kundalini,  She is the current state of the soul as well as the state that it reaches ultimately.  That is, she is tat as well as tvam.  She is also the asi, the threshold crossing which the tvam becomes tat so that there is no distinction as tat and tvam.  She is the first space or veLi.  She is also the first letter, the expression of nadha.  She is the word that is born from nadha as well as the sign- an object is referred to by its name or its sign.  Sakthi is both, the word and the sign. 


சக்தியே காரணி, பூரணி.  அவளே அனைத்தையும் விளக்கும் புத்தி.  அவள் குணபூரணி மற்றும் நிர்குணி- அனைத்துக் குணங்களும் தமது தன்மை வெளிப்பட நிற்பவள் மற்றும் அனைத்து குணங்களும் ஒன்றாக இதுதான் என்று சுட்டிக்கூற முடியாததாக இருப்பவள்.  அவள் அனைத்துக்கும் இடமளிக்கும் விண்ணாவாள்.  அவளே போக்கும் வரவும் எனப்படும் இறப்பும் பிறப்புமாக இருப்பவள், ஏறி இறங்கும் குண்டலினியாக இருப்பவள்.  அவளே வாரணமாக- வாழை என்று குறிக்கப்படும் சக்கரங்களுடன் கூடிய சுழுமுனை நாடியாகவும் அதுவாகவும் இதுவாகவும், அதாவது தத் ஆகவும் த்வம் ஆகவும் இருப்பவள்.  த்வம் எனப்படும் ஜீவன் தத்தாக நுழையும் வாயிலாக, வழியாக, அசியாக இருப்பவள்.  அவளே த்வம் தத் ஆனபிறகு அவ்வித வேறுபாடுகள் இல்லாமல் இருப்பவள்.  அவளே வெளி, அவளே அண்டத்தின் முதலெழுத்து, அவளே எழுத்துக்கள் தரும் சொல், அவளே அந்தச் சொல் காட்டும் குறிக்கும் பொருள்.  ஒரு பொருள் அதன் பெயரால் அல்லது அதன் குறியால் சுட்டிக்காட்டப்படுகிறது.  சக்தியே சொல்லாகவும் குறியாகவும் இவ்வாறு இருக்கிறாள்.   

No comments:

Post a Comment