Thursday 28 May 2015

78. Mystical accomplishments attained by ravi dhyanam

Verse 78
தேக மென்ற தேகமடா தேவரூபந்
திருவான ரூபமதை பூசைபண்ணி
பாகமுடன் விபூதியை நீ தியானஞ்செய்து
பாருகளில் மானிடர்க்குக் கடாட்சித்தாக்கால்
ஆகமுடன் சகலசவு பாக்கியம் பெற்று
அருள் பெருக பூரணமாய் இருந்துவாழ்வார்
ஏகமென்ற பூரணத்தின் கிருபையாலே
என் மகனே சுடரினுட தியானங் கேளே

Translation:
The body, the form will be like the celestials
Worshipping the sacred form
After contemplating if you
Offer the sacred ash to people in the world
They will attain all riches and wellbeing
They will live a complete life with grace flowing
Due to the mercy of the singularity, the fully complete,
My Son!  Hear about the dhyana of the flame.

Commentary:
After describing the hue of the body following the ravidhyana Agatthiyar describes the accomplishment of a yogi who attains this state.  When he contemplates on the form with the golden hue, as he is now the embodiment of consciousness, if he offers sacred ash to people all their wishes will be fulfilled and they will live a happy and rich life.  Agatthiyar will be describing the dhyana for the flame in the next verse.  The flame described here is the atma jyothi which is experienced at the middle of the brow or ajna cakra.


ரவிதியானத்தை விளக்கிய அகத்தியர் இப்பாடலில் அதனால் பெறும் சித்தியைக் கூறுகிறார்.  தேகத்தின் மயிர்க்கால் எல்லாம் ஒளிர தண்டுவடம் ஒளிபெற்று அதன் உச்சியில் சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கண்ட யோகி அந்தக் காட்சியை, உருவத்தை பூசை பண்ணி உலகத்தோருக்கு விபூதி அளித்தால் அவர்கள் சகல சம்பத்துக்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்வர் என்கிறார் அகத்தியர்.  இதனை அடுத்து அவர் சுடர் தியானத்தை விளக்கப்போவதாகக் கூறுகிறார்.  இங்கு சுடர் எனப்படுவது ஆத்ம சோதி. அதை புருவமத்தியில் காணலாம்.

Wednesday 27 May 2015

77. Ravi dhyana

Verse 77
ரவிதியானம்
பாரப்பா மூலமத்தில் மனக்கண் சாற்றி
பதியான ரவியினிட தியானங் கேளு
நேரப்பா புருவநடு தீபம் பார்த்து
நிசமான அங்கிலி வங்கென்றாக்கால்
சாரப்பா பதினாறு உருவிலேதான்
தன்னகமாய் நின்றதொரு ரவிதான் மைந்தா
மேரப்பா தான் துலங்க ரவிதான் மைந்தா
மெய் நிறைந்த காந்தி வெகு தேகமாச்சு

Translation:
Ravi dhyana
See son, Placing the focus at muladhara
Listen about the ravi (sun) dhyana
Seeing the flame at the middle of the brow
If you ang kili vang is recite
Associate with the form of sixteen
The Sun will remain within self, Son
Meru will glow with the sun, Son
The body will become effulgent.

Commentary:
Agatthiyar is describing an experience which is similar to “anda aadhitthan, pinda aadhitthan” and other types of suns that Tirumular describes in tantiram 9 of his Tirumandiram.  In the previous verse Agatthiyar described the triple flame.  Here the flame within, the pinda aadhitthan is elaborated upon.  The practice for this experience is as follows:  the mind perception should be focused at the muladhara and the mantra ang, kili, vang should be recited.  The sixteen mentioned here are the sixteen kala.  There are different explanations for this kala which we will not go into here as we are not seeing a description by Agatthiyar.  The body which started to glisten, as mentioned in the previous verse, will become effulgent with the meru or the spinal chord glowing and the sun or the flame is experienced at its top.


திருமூலர் தனது தந்திரம் ஒன்பதில் கூறியுள்ள அண்ட ஆதித்தன் பிண்ட ஆதித்தன் என்று பல விதமான சூரியன் அல்லது ஒளிகளைக் குறிப்பிட்டதை ஒத்து உள்ளது இப்பாடல்.  முந்தைய பாடலில் முத்தீ தியானம் பற்றிக் கூறிய அகத்தியர் இதில் பிண்ட ஆதித்தனை விளக்குகிறார்.  இப்பயிற்சிக்கு ஒருவர் மனக்கண்ணை மூலாதாரத்தில் வைக்க வேண்டும்.  அங் கிலி வங் என்று ஓத வேண்டும்.  அப்போது முத்தீ தியானத்தால் ஒளி பெறத் தொடங்கிய உடல் மேரு எனப்படும் தண்டுவடம் (அதனுள் சுழுமுனை நாடி ஓடுகிறது) ஒளிர அதன் உச்சியில் பிண்ட ஆதித்தன் காணப்பட்டு மிகக் காந்தியுடன் விளங்கும் என்கிறார் அகத்தியர்.

76. Ponnaar meni- golden body

Verse 76
ஆச்சப்பா சோதி வெகு காந்தியாகும்
மாகார வவ்வேளை யறிவாய் நின்று
மூச்சப்பா நிறைந்ததொரு வாசியாலே
முனையான சுழிமுனையில் வாசி நாட்டி
பேச்சப்பா தானிருத்தி மவுனமாக
பெருமையுடன் சிவயோகத் திருந்தாயாகில்
போச்சப்பா அபமிருத்தி அகன்றுபோகும்
பொன்னொளிவு தேக காந்தி ஆச்சு பாரே

Translation:
That effulgence will be brilliant
Remaining at that time as consciousness
The breath, Son, with a fully completel vaasi
Planting the vaasi at the tip of the whorl (ajna)
Stopping the talk and becoming silent
If you remain in Siva yoga
Death will go away
The body will glow with a golden hue.

Commentary:
Agatthiyar is talking a very important stage in kundalini yoga.  Several Siddhas including Ramalinga Adigal had their material body turn into body of light.  Agatthiyar’s this verse explains that state.  When the yogi’s consciousness crosses the gurupathi and when he remains as pure consciousness with the vaasi or the lifeforce planted firmly at the ajna in a state of silence, the state of Siva yoga, then his body will glow with a golden hue.  Siddhas such as Tirumular and Sivavaakiyar say that every hair follicle will shine with a golden hue.  The state described in this verse is not the ultimate state as the yogi does not take up a body of light.  His material body glows with the golden hue.  Siva is called ponnaar meniyan or one with golden body. 


இப்பாடலில் அகத்தியர் குண்டலினியின் ஒரு முக்கியமான நிலையைக் கூறுகிறார்.  சித்தர்களின், ராமலிங்க அடிகள் உட்பட, தமது பருவுடலை ஒளியுடலாக மாற்றுவதை முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.  அகத்தியரின் இப்பாடல் அந்த நிலையை அடைவதற்கான ஒரு முக்கியமான படியை விளக்குகிறது.  ஒரு யோகி அறிவு நிலையில், அதாவது விழிப்புணர்வாக இருந்து வாசியை சுழிமுனை எனப்படும் ஆக்னையில் பதித்து மௌன நிலையில், சிவ யோகத்தில் நின்றால் அவரது உடல் பொன்னொளி வீசும் என்கிறார் அகத்தியர்.  திருமூலரும் சிவவாக்கியரும் இதைக் குறித்து அந்த யோகியின் உடலில் ஒவ்வொரு மயிர்க்காலும் பொன்னொளி வீசும் என்று கூறியுள்ளனர்.  சிவபெருமான் பொன்னார் மேனியன் என்று அழைக்கப்படுவது இக்கருத்தில்தான், குண்டலினி யோகத்தின் ஒரு நிலையைக் குறிக்கத்தான்.

Monday 25 May 2015

75. Somappaal

Verse 75
போமப்பா சகலபிணி ரோகமெல்லாம்
பூரணச் சந்திரனுடைய பிறப்பைக் கண்டால்
காமப்பால் காணற்பால் கருணை தங்கும்
கலையான வாசியது கடக்காதப்பா
சோமப்பால் சொலிக்குமடா அந்தப்பாலை
அந்தமுடன் நித்தியமுங் கொண்டாயாகில்
தாமப்பா தன்னிலையே தான்தானாகுந்
தானான ஆதார மூலம் பாரே

Translation:
All the diseases and ailments will leave
When the birth of the fully complete moon’s birth is witnessed
When the desires elements are seein mercy will remain
The vaasi, the kala will not exceed
The essence of the moon will shine. 
If you consume that milk daily
The state of self will become the Self
See the origin of the adhara, the Self.

Commentary:
Agatthiyar is talking about three types of “paal”.  They are kaamappaal or the milk from the breast, kaaNarpaal the essence of desire or the worldly objects and somappaal the milk of the moon.  According to the Siddhas, if one gives up kaamappaal and kaanar paal then somappaal or the secretion from the lalata will ooze.  Here Agatthiyar is describing the same concept. He says that when one experiences the  emergence of the poorna Chandra then the desires towards worldly objects including physical pleasure will vanish and only mercy or love towards everything remains.  In this state the vaasi will remain within, life force will not be wasted and the milk from the moon will ooze.  The somappaal is also called “amudhappaal” or the nectar like milk, “maangaaippaal” or the milk of the mango (this is due to the structure from which the secretion occurs) and by several other names. This divine nectar is said to confer immortality.  Agatthiyar says that if one consumes this fluid daily then one will be free of physical limitations and attachments.  One will remain in the state of Self.  The limited self will become universal Self.


இப்பாடலில் அகத்தியர் மூவகையான பால்களைப் பற்றிப் பேசுகிறார்.  அவை காமப்பால், காணற்பால் மற்றும் சோமப்பால் என்பவை.  காமப்பால் என்பது முலைப்பால், காணற்பால் அல்லது கானற்பால் என்பது உலகப்பொருட்களில் ஆசை. சோமப்பால் என்பது லலாடத்திலிருந்து ஊறும் அமுதம்.  காமப்பாலையும் காணற்பாலையும் தவிர்த்தால் சோமப்பால் ஊறும், ஒருவர் அதைத் தினமும் பருகினால் தான் என்ற நிலையில் இருப்பார் என்கிறார் அகத்தியர்.  இந்த சோமப்பாலை சித்தர்கள் அமுதப்பால், மாங்காய்ப்பால் (அது சுரக்கும் இடத்தின் உருவை வைத்து) என்றுபல பெயர்களில் அழைக்கின்றனர்.  

Sunday 24 May 2015

74. Gurupathi

Verse 74
பாரப்பா பூரணச் சந்திரனைக் கானில்
பாதாதி கேசமுதல் பதிவாய் மைந்தா
நேரப்பா குளிர்ச்சி வெகு குளிர்ச்சியாகும்
நேமமுடன் அந்நேரம் நினைவாய் மைந்தா
தேரப்பா குருபதியில் திறமாய் நின்று
செகத்தோர்க்கு விபூதியை நீ கடாக்ஷி த்தாக்கால்
வீரப்பா கொண்டதொரு சுரமும் தீரும்

வினையான வல்வினையும் விட்டுப்போமே

Translation:
See son, when the fully complete moon is seen,
You will imprint it from head to foot
It will be cool, very cool
At that time, Son, in the proper way
If you remain in the gurupathi
And offer sacred ash to people
An intense fever will be cured
All the bad karma will leave them.

Commentary:
So far Agatthiyar described the personal experiences of a yogi who engages in cakra worship.  In this verse, for the first time, he is talking about the siddhis or mystical accomplishments that a yogi acquires through which he could help others. 
When the yogi crosses the lalata cakra and experiences the fully complete moon his entire body will become cool.  If he remains in the gurupathi, a cakra which is next to lalata, and offers sacred ash to those suffering from intense fever, they will be cured of their sickness.  Also, their evil karma will leave them. 
Thus, the yogi is slowly leaving his state where his consciousness is confined to the body and is becoming pervasive.  The coolness of his body is providing relief to the intense heat that the other is suffering due to fever.

இதுவரை தனிமனித அனுபவங்களை மட்டும் பேசிவந்த அகத்தியர் இப்பாடல் முதல் எவ்வாறு ஒரு யோகி பிறருக்கு உதவுகிறார் என்று கூறுகிறார்.  லலாட சக்கரத்தை அடைந்து பூரண சந்திரனை அனுபவித்த யோகியின் உடல் தலை முதல் கால் வரை குளுமையாகிறது.  இந்த அனுபவத்தைப் பெற்ற யோகி அடுத்த சக்கரமான குரு சக்கரம் அல்லது குருபதத்திற்கு உயர்ந்து அங்கு நின்று விபூதி கொடுத்தால் ஜுரத்தின் வெப்பத்தினால் வாடுபவர்கள் தமது சுரத்திலிருந்து விடுபடுவர் என்கிறார் அகத்தியர்.  அவர்களது வல்வினைகளும் அவர்களைவிட்டு நீங்கும் என்கிறார் அவர். 

உடல் எனும் எல்லைக்குள் கட்டுப்பட்டு அதில் மட்டும் பல அனுபவங்களைப் பெறும் யோகி குருபத்திற்கு உயரும்போது மெதுவாக தனது உடல் எல்லையைத் தகர்க்க ஆரம்பிக்கிறார். தான் இருக்கும் நிலையினால் பிறரிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பிக்கிறார் என்பதை நாம் இதிலிருந்து புரிந்துகொள்கிறோம்.  அவரது குளுமை பிறரது வெம்மையைக் குறைக்கிறது.

Saturday 23 May 2015

73. Lalata cakra

Verse 73
பண்ணப்ப ஆதார பூசைப் பண்ணி
பதியான முச்சுடரின் தியானங் கேளு
நண்ணப்பா புருவமத்தில் மனக்கண் சாற்றி
நாட்டமுடன் அங்கிலி நங்கென்றேதான்
உன்னாப்பா லலாட விழிக் கண்ணினின்று
உத்தமனே நூற்றெட்டு உருவே செய்தால்
கண்ணப்பா தான் குளிர மதிதானின்று
காணுமடா பூரணச் சந்திரனைப் பாரே

Translation:
After performing the adhara puja, Son,
Hear about the meditation for the triple flames, the locus/the lord
Seek it son in the middle of the brow, through the mind’s eye
Through ang, kili, nang, with interest
Seek it while remaining in the eye of the lalata
The Good One! If you recite it hundred and eight times
With the eyes becoming cool, the moon,
Will be seen.  See the fully complete Chandra.

Commentary:
The cakra next to ajna is the lalata cakra which is a little above the ajna.  Some say that this is the pineal gland from which secretions ooze out during yogic practices.  Just as how the ajna is marked with a dot (kumkum) this spot is marked with a halfmoon sign drawn with sandalwood paste to indicate that it is cooling in nature.  Agathiyar is describing the lalata cakra practice in this verse that involves the triple flames, the sun, the moon and the fire.  He does not mention a yantra here.  This may be because, beyond the ajna cakra the principles are perceived in their formless form.  The mantra for japa is ang kili nang.  When one recites this mantra 108 times, Agatthiyar says that the eyes will become cool and the purna Chandra will be seen.


ஆக்ஞைக்கு அடுத்த சக்கரம் லலாட சக்கரம்.  அது ஆக்ஞைக்கு சிறிது மேலே இருக்கிறது.  ஆக்ஞை எவ்வாறு குங்குமம் இட்டு நினைவில் நிருத்தப்படுகிறதோ அதே போல் லலாடம் சந்தனத்தால் பிறையைப் போல நெற்றியில் குறிக்கப்படுகிறது.  இதன் குளுமையை உணர்த்தவே சந்தனம் பயன்படுத்தப்படுகிறது.  இப்பாடலில் அகத்தியர் லலாட சக்கரம் முத்தீயின் தியானம் ஆகியவற்றை விளக்குகிறார்.  இதற்கான யந்திரம் குறிப்பிடப்படவில்லை.  ஆக்ஞைக்கு மேல் இறைவனின் அருவ உருவம் தியானிக்கப்படுவதால் எவ்வித யந்திரமும் கொடுக்கப்படவில்லையோ என்று தோன்றுகிறது.  இத்தியானத்துக்கான மந்திரம் அங் கிலி நங் என்று அகத்தியர் கூறுகிறார்.  இவ்வாறு நூற்றியெட்டு முறை செபித்தால் முத்தீக்கள் தென்படும் லலாடக் கண் திறக்கும்.  கண்கள் குளுமையடைந்து பூரண சந்திரன் தென்படும் என்கிறார் அவர். 

Friday 22 May 2015

72. Benefits of Sadasiva pooja

Verse 72
வரிசையுடன் ஆதாரஞ் செபித்து மைந்தா
மார்க்கமுடன் சதாசிவத்தை மகிழ்ந்து கொண்டால்
தெரிசனமாய் நின்றதொரு ஆறாதாரஞ்
சிவ சிவா அரூபமாய மாகத் தோணுங்
கரிசனமே நின்றதொரு ஆறாதாரங்
கண்ணடங்காத் தெரிசனங்கள் காண லாகும்
புரிச முடன் சதாசிவத்தில் மனதை வைத்து
புத்தியுடன் அனுதினமும் பூசை பண்ணே

Translation:
Reciting for the adhara in an orderly manner, Son
If you attain Sadasiva happily
The six adhara that are perceived
Siva Sivaa!  Will appear in a formless form
The six adhara are due to care
Visions that will fill the eyes and overflow will be seen
Keeping the mind in Sadasivam
Pray with discrimination (buddhi) daily.

Commentary:
This verse sums up the cakra worship. Agatthiyar says that the six adhara are present due to the Lord’s care, his wish to desire to liberate the souls.  If one places his mind in the Sadasiva principle Agatthiyar says that he will perceive the six adharas in their formless form.  In addition, he will see wonderful visions that his eyes cannot even contain.  There is an interesting concept in this verse.  Agatthiyar says that one should place his manas in the Sadasiva principle and pray with buddhi. Manas is the emotional part of the mind while buddhi helps the person discriminate between good and bad.  Prayer is an action.  Hence, discrimination between right and wrong is essential.  Manas, on the other hand, is emotional.  By placing it in the Sadasiva principles it will be prevented from getting distracted by external stimuli.


இப்பாடலுடன் அகத்தியர் சக்கரப் பூஜைகளை முடிக்கிறார்.  இக்கடைசி பாடலில் அவர் ஆறு ஆதாரங்கள் இறைவனின் கரிசனத்தால் நம் உடலில் உள்ளன என்று கூறுகிறார். ஆக்ஞை பயிற்சியில் ஒருவர் மனதை சதாசிவத்தில் வைத்தால் அரூபமான ஆறு ஆதாரங்களும் புலப்படும் என்றும் பல அற்புதக் காட்சிகள் தென்படும் என்றும் அவர் கூறுகிறார். இங்கு அவர் முக்கியமான கருத்து ஒன்றை விளக்குகிறார்.  இப்பாடலின் கடைசியில் அவர் மனத்தை சதாசிவத்தில் வைக்கவேண்டும் என்றும் புத்தியால் பூஜை செய்யவேண்டும் என்றும் கூறுகிறார்.  மனம் என்பது உணர்ச்சிகளை அனுபவிப்பது.  அதை சதாசிவத்தில் வைக்கும்போது பிற வெளிப்பொருட்களால் கவனச்சிதறல்கள் ஏற்படாமல் இருக்கிறது.  புத்தி என்பது நன்மை தீமைகளைப் பகுத்துணரும் மனத்தின் பகுதி.  பூஜை செய்யும்போது இறைவனே அழிவற்றவன் பிற பொருட்கள் அனைத்தும் அழிவுக்குட்பட்டவை என்பதை புத்திபூர்வமாக உணர்ந்து அவனை வழிபடவேண்டும்.  அப்போது வழிபாடு மனப்பூர்வமாக ஏற்படும்.   

Thursday 21 May 2015

71. Yantra and mantra for ajna

Verse 71
நாட்டவே ஓங்கார நடுவிலேதான்
நன்மையுடன் அகாரமுடன் உகாரஞ்சாற்றி
தேட்டமுடன் ரீங்காரம் நுகாரஞ்சாற்றி
திறமாகத் தானிருந்துப் புருவமேகி
கூட்டமன்றி தானாகத் தானே நின்று
குணமாக அங்ரீங் உம்மென்றேதான்
வாட்டமில்லா மனதாக தினம் நூறு மைந்தா

மார்க்கமுடன் தான் செபிக்க வரிசை கேளே

Translation:
Placing the Omkara in the middle
Adding the akaara and ukaara
And reenkaara and nukaara
Remaining firmly, going to the middle of the eyebrow
Remaining alone without a big group
Reciting ang, reeng, um
With a heart free from fatigue, hundred times, son!
When one does so, listen about the order.

Commentary:
Siddha method of cakra worship involves yantra and mantra.  The previous verse described the diagram or yantra to be drawn for the worship.  This verse mentions the letters that should be placed within the diagram and the mantra that should be recited. Agatthiyar mentions that the mantra ang, reeng, um should be recited hundred times.  In the next verse he will describes the effects of this practice.
The locus of this cakra is the middle of the brows.  There is an opinion that Rama’s kodhandam or the bow represents the brows and the arrow shot through them is the ascent of consciousness.  Beyond the brows the formless form of Divine is experienced.
Agatthiyar advises that one should practice the above mentioned austerity while remaining alone, not in a group. 

சித்தர்களின் சக்கர வழிபாட்டில் யந்திர மந்திரங்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.  முந்தைய பாடலில் ஆக்ஞா சக்கரத்தை விளக்கிய அகத்தியர் இப்பாடலில் அதில் இடப்படும் அட்சரங்களையும் செபிக்க வேண்டிய அட்சரங்களையும் குறிப்பிடுகிறார். அடுத்த பாடலில் இப்பயிற்சியின் பலன்களைக் கூறுவார்.

ஆக்ஞா சக்கரத்தின் இடம் புருவமத்தி.  ராமரின் கையில் இருக்கும் வில் புருவங்களைக் குறிக்கின்றன என்றும் அதன் ஊடே செலுத்தப்படும் அம்பு விழிப்புணர்வு அல்லது குண்டலினி சக்தி என்றும் சிலர் கூறுகின்றனர்.  ஆக்ஞைவரையில் தான் உருவத்தையுடைய இறைவன் காணப்படுகிறான்.  ஆக்ஞைக்கு மேல் அருவுருவமே பார்க்கப்படுகிறது.

Tuesday 19 May 2015

70. Ajna

Verse 70
ஆக்கினை
காணவே மயேஸ்வரத்தின் கடாக்ஷத்தாலே
கண்ணான சதாசிவத்தின் கருவைக் கேளு
தோணவே ஆக்கினையாம் விந்து வட்டம்
சொல் நிறைந்த வட்டமதில் இதழ்தான் ரெண்டு
பூணவே வட்டமத்தின் நிறந்தான் சொல்வேன்
புதுமை வெகு புதுமையடா ஆகாசந்தான்
பேணவே ஆகாச வட்டத்துள்ளே
பேர் பெரிய பிரணவத்தை நன்றாய் நாட்டே 

Translation:
Ajna:
To see due to grace of Maheswaram
Listen to the essence of Sadasivam
The circle of ajna
The circle that is filled with letters has two petals
I will tell you about the color of the circle
New, very uniques, the sky
Within the circle of akasha.
Establish the great Omkara

Commentary:
This verse begins to describe the ajna cakra.  This cakra represents the concept of Sadasiva.  It has a circle filled with letters.  It has two petals and has a unique hue.  This cakra represents the sky or space principle.  The bija mantra within this cakra is the omkara.


ஆக்ஞை சக்கரத்தை விளக்கும் இப்பாடல் அச்சக்கரம் சதாசிவ தத்துவத்தைக் குறிக்கிறது என்கிறது.  எழுத்துக்கள் நிறைந்த இது இரு இதழ்களைக் கொண்டது.  அதன் நிறம் புதுமையானது என்கிறார் அகத்தியர்.  இதனுள் இருக்கும் மந்திரம் ஓம்காரம்.

Monday 18 May 2015

69. Maheswaram and triple flames

Verse 69
ஆமப்பா யோகமென்று சிவயோகந்தான்
அருளான முச்சுடரின் அந்தத்தாலே
ஓமப்பா முச்சுடரின் அந்தம் பார்த்தால்
ஒளி விளக்காய் நின்றதொரு மூலத் தீதான்
வாமப்பா நிறைந்த தொரு மூலத்தீதான்
வளர்ந்துதடா அறுகோண வரையின் மேலே
நாமப்பா சொல்லுகிறோம் நன்றாய்ப் பாரு
நாதாந்த மயேஸ்வரத்தைக் காணலாமே

Translation:
Yes son, it is the Siva yogam
Due to the termination of the triple flames, the grace
Yes son, if the termination of the triple flames is seen
It is the fire of muladhara that stood as lighted lamp
It is the fire of muladhara the fully complete with vama
It grew on top of the peak of six angles
I am telling now, see well
The nadhantha Maheswaram can be seen

Commentary:
Vishuddhi cakra is the locus of Maheswara principle.  The five actors or pancha kartha, Sadasiva, Maheswara, Rudra, Vishnu and Brahma represent five different principles.  They are located at the five cakras of ajna, vishuddhi, anahata, manipuraka and svadhishtana.  They represent various principles.  Hence, when Agatthiyar says that Maheswaram will become visible it means the principles that Maheswaran represents will be realized by the yogi.  To name a few, the pancha kartha represent the five states of consciousness.  Brahma represents jagrit, Vishnu the svapna, Rudra the sushupti, Maheswara the turiya and Sadasiva the turiyatheetha.  They also represent the soul that has freed itself from the innate impurities one at a time.  They represent the five actions of creation, sustenance, dissolution, concealment and bestowal of grace.

Agatthiyar explains the triple fire of the sun, moon and agni as nothing but ramifications of the fire of kundalini in muladhara.  He says that if one looks at the terminus of the triple fires one will recognize that it is the fire of muladhara.  It increases in its stature and appears as the triple fires.

He calls the experience at the vishuddhi as sivayogam or joining with sivam or higher consciousness.

விசுத்தி சக்கரம் மகேச்வர தத்துவத்தின் இடம்.  அங்கு மகேச்வர தத்துவம் வெளிப்படுகிறது.  பஞ்ச கர்த்தாக்கள் எனப்படும் சதாசிவன், மகேஸ்வரன், ருத்திரன் விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் முறையே ஆக்ஞா, விசுத்தி, அனாஹதம், மணிபூரகம், சுவாதிஷ்டானம் என்ற சக்கரங்களில் தோற்றமளிக்கின்றனர்.  இதனால் அவர்கள் இந்த சக்கரங்களில் அமர்ந்திருக்கின்றனர் என்று பொருளல்ல.  இவர்கள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வின் ஒவ்வொரு நிலையைக் குறிக்கின்றனர்.  பிரம்மா சாக்ரத் எனப்படும் விழிப்புநிலையையும் விஷ்ணு சுவப்னம் எனப்படும் கனவு நிலையையும் ருத்திரன் சுஷுப்தி எனப்படும் ஆழ்உறக்க நிலையையும் மகேஸ்வரன் துரிய நிலையையும் சதாசிவன் துரியாதீத நிலையையும் குறிக்கின்றனர். இவர்கள் ஆத்மா தனது மலங்கள் ஐந்தை, ஒவ்வொன்றாக இழந்த நிலையைக் குறிக்கின்றனர்.  இவ்வாறு அவர்கள் பல்வேறு தத்துவங்களுக்கு நிலைகளுக்குக் குறியீடுகளாக இருக்கின்றனர்.

முச்சுடர் அல்லது முத்தீ என்பது சூரியன், சந்திரன், அக்னி என்ற மூன்றையும் குறிக்கும். 
இந்த மூன்றுவித ஒளிகளும் மூலாதாரத்தில் உள்ள அக்னியின் வெளிப்பாடுகளே என்கிறார் அகத்தியர்.  மூலாதாரத்தில் உள்ள ஒளி விளக்கே இவ்வாறு மூன்று தீக்களாக காணப்படுகிறது, இதை ஒருவர் அவற்றின் அந்தத்தைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம் என்கிறார் அவர்.

விசுத்தியில் பெரும் அனுபவம் சிவயோகம், உயர் விழிப்புணர்வுடன் சேர்க்கை என்கிறார் அகத்தியர்.

Sunday 17 May 2015

68. Lahiri due to vishuddhi practice..

Verse 68
போட்ட பின்பு மனதுகந்து மனக்கண் சாத்தி
பூரணமாய் வங்கிலி யங்கென்றிட்டு
நாட்டமுடன் தானிருந்து ஒரு நூறு மைந்தா
நன்மையுடன்தான் செபித்து நயனமேவி
தேட்டமுடன் குருபதியில் சென்று பாரு
சிவ சிவா வாய்வேக லகிரியுண்டாம்
வாட்டமில்லா லகிரியடா வாய்வேகமாகு
மகத்தான யோக சிவ போதமாமே

Translation:
After drawing, with happiness in the heart, adorning the mental eye
Add vang, kili, yang
Reciting with desire hundred times
Chanting so go to the eye (third eye)
Go to the Gurupathi and see
Siva sivaa!  Enchantment due to vayu
The undaunted vayu and enchantment will speed up
The glorious yoga siva bodham will occur.

Commentary:
Vishuddhi cakra practice places the yogin in a state of enchantment.  This occurs due to increase in the speed of vayu or prana.  One is able to perceive this mentally.  Gurupathi is a spot close to the ajna.  Some call the ajna as the gurupati. However, some Siddhas (Gorakshanath) call a spot above ajna as gurupathi.  Agatthiyar talks about a “laahiri” that this practice confers.  Amarakavi Siddheshwara calls this state as aanandha aaspadam.  He says that this enchantment will submerge a yogin and make him lose his way and that one should guard against this enchantment.

விசுத்தி சக்கரப் பயிற்சி யோகியை லகிரி நிலைக்கு இட்டுச் செல்லும் என்கிறார் அகத்தியர்.  இது வாயு எனப்படும் பிராணனால் ஏற்படுகிறது என்கிறார் அவர்.  இந்த நிலையை ஒருவர் மனக்கண்ணால் குருபதியில் பார்க்க முடியும் என்கிறார்.  குருபதி என்பது ஆக்ஞை என்று சிலர் கூறுகின்றனர்.  சில சித்தர்கள் (கோரகனாதர்)  இந்த சக்கரம் ஆக்ஞைக்கு சிறிது மேலே இருக்கிறது என்று கூறுகிறார். 

அமரகவி சித்தேஸ்வரர் இந்த நிலையை ஆனந்த ஆஸ்பதம் என்கிறார்.  இந்த நிலை கடல்போல எழுந்து ஒருவரை மூழ்கடித்துவிடும், அதனால் ஒருவர் இந்த நிலையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர். 

67. Vishuddhi

Verse 67
விசுத்தி
 மருவி நின்ற தலமதுதான் விசுத்தி வீடு
மகத்தான அறுகோணம் நன்றாய்ப் போட்டு
திருவிருந்த அறுகோணஞ் சுத்தி நல்ல
தீர்க்கமுடன் பதினாறு இதழ்தான் போட்டு
குருவிருந்த கோட்டை வெகு கருப்பாய் நிற்குங்
குணமான அக்கோட்டை நடுவிலேதான்
உருவரிந்து விந்திட்டு ஓங்காரஞ் சுத்தி
உத்தமனே வங்கிலி யங்கென்று போடே

Vishuddhi
Translation:
The site where it was remained associating so is the house of vishuddhi
Drawing the six pointed star well
Around the six pointed star where the sacred one resided
Draw sixteen petals
The fort where the guru resided is dark black
In the middle of that fort
Knowing the form draw the bindu and the omkara around it
The Supreme One! Add vang kili yang.

Commentary:
Agatthiyar is beginning to describe the vishuddhi cakra ritual.  It is a six point star around which sixteen petals are drawn. Agatthiyar calls this as the fort of the guru.  It is black in hue.  Siva’s black neck refers to this concept.  In the middle of the fort/cakra Agatthiyar instructs Pulatthiyar to draw the bindu and the omkara around it.  Then the bija akshara vang kili and yang are added to it.


விசுத்தி சக்கரத்தை விளக்கத் தொடங்குகிறார் அகத்தியர்.  அறுகோணம் அல்லது ஷட்கோணத்தைக் கொண்ட இந்த சக்கரத்தைச் சுற்றி பதினாறு இதழ்கள் போடவேண்டும் என்றும் அதன் மத்தியில் பிந்துவும் அதைச் சுற்றி ஓம்காரமும் போடவேண்டும் என்றும் அதனுடன் வங் கிலி யங் என்று எழுதவேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.  இந்த சக்கரத்தை குருவின் கோட்டை என்று அழைக்கும் அவர் அது கரிய நிறத்தில் இருக்கும் என்கிறார்.  சிவனின் கரிய கழுத்து இதைத்தான் குறிக்கிறது.