Friday 8 May 2015

58. Svadishtana

Verse 58
சுவாதிஷ்டானம்
சுத்தமுடன் ஆதார மூலஞ் சொன்னேன்
சுவாதிஷ்டானத்தினுட சுகத்தைக் கேளு
பதமுடன் நாற்கோணம் இதழ்தான் ஆறு
பதிவான பொன் நிறம்போல் இருக்கும் மைந்தா
சுத்தமுள்ள நாற்கோணம் நடுவிலே தான்
தெளிவான நகாரமென்ற தீபமேத்தி
நித்தமுமே நகாரமுடன் சிவறீங்கிட்டு
நிலையறிந்து உருச்செபிக்க நிசத்தைக் கேளே

Translation:
Svadishtanam
With purity I spoke about the primary support (muladhara)
Listen about the pleasure of svadishtanam
There are four angles and six petals
Son, it is of golden hue
In the middle of the pure, four angles (square)
Light the lamp of nakaara
Along with the nakaara add the siva reeng, daily,
Knowing its position, if chanted listen to the truth.

Commentary:
Even though this verse is titled svadishtana some of the descriptions differ from the traditional description of this cakra by the tantras. Agatthiyar mentions that the svadishtana is marked by nakaara within a square.    Usually the muladhara is drawn with a square in the middle. Agatthiyar says that the petals are six which typical of the svadishtana cakra.  However, instead of the central letter being vam it is nakaara with the siva reeng.
Books on yoga mention that the svadishtana is the locus of the soul and that the muladhara is the site where its karma are stored.  Thus, the muladhara and svadishtana cakra work together to manifest as a being with specific characteristics.

After mentioning about purification of jiva kala or the qualities of a soul, Agatthiyar is mentioning the experiences of such a pure soul at svadishtana.
An interesting observation is that Agatthiyar’s description is similar to that of Gorakanath.  Gopinath Kaviraja says that Gorakanath, one of the navanatha siddhas, explains the cakras differently.  Agatthiyar’s explanations also seem to be so.


இப்பாடல் சுவாதிஷ்டானம் என்று குறிப்பிட்டாலும் சில பகுதிகள் மூலாதார சக்கரத்தைப் போல உள்ளன.  தந்திரங்கள் மூலாதாரத்தை சதுரமாகக் குறிப்பிடுகின்றன.  இங்கு அகத்தியர் சுவாதிஷ்டானத்தை சதுரம் என்கிறார்.  அதன் உள்ளே இடவேண்டிய எழுத்து நகாரம் மற்றும் சிவ ரீங்காரம்.  தந்திரத்தில் குறிப்பிடப்படும் எழுத்து வம் என்பது.  அகத்தியர், அந்த சதுரத்தைச் சுற்றி ஆறு இதழ்கள் உள்ளதாகக் கூறுகிறார். தந்திரமும் சுவாதிஷ்டானத்தை ஆறு இதழ்களுடன் வரைகிறது. 
சுவாதிஷ்டானமே ஆத்மாவின் இருப்பிடம் என்றும் மூலாதாரத்தில் அதன் கர்மங்கள் உள்ளன என்றும் இந்த இரு சக்கரங்களும் சேர்ந்திசைந்து குறிப்பிட்ட குணங்களையுடைய ஒரு மனிதனாகப் பிறக்கின்றன.  மூலாதாரப் பயிற்சி மூலம் ஜீவகலையைத் தூய்மைப் படுத்திய பிறகு ஏற்படும் அனுபங்களை அகத்தியர் இதன்மூலம் குறிப்படுகின்றார் என்று நாம் கருதலாம்.    

கோபிநாத கவிராயர் என்பவர் நவநாத சித்தர்களில் ஒருவரான கோரக்கரின் சக்கரங்களைப் பற்றிய விளக்கங்கள் தந்திரத்தில் குறிப்பிடப்படும் விளக்கங்களிலிருந்து வேறுபட்டுள்ளன என்கிறார்.  அதேபோல் அகத்தியரின் விளக்கங்களும் வேறுபடுகின்றன. 

No comments:

Post a Comment