Friday 10 March 2017

554-558 Nagarasa vanga bhasma

554- 558
Nagarasa vanga bhasmam
Agatthiyar mentions that the adhara peeta is Brahma peetam.  This is the muladhara.  He tells a procedure with nagarasa vanga bhasmam. It involves rasam which is usually mercury and naga vangam which he says half measure.  This may be the half circle of kundalini which is said to exist as 3 ½ circles at muladhara. These two are mixed with sambalam juice so that it becomes a wax.  The nagarasam solid piece is powdered and added to it.  It is ground with fruit juice and thurisu, aridhara lingam, gendhi, veeram and pooram are added
All the nine moolam are added together and the water of nadha is added to it.  The veeram will abide.  The kamalarasam will flow. Add this to the mixture. Make it into a disc, dry it in ravi and then make it into a covering.  Make a covering with mud over it, pray to sathguru and burn it slowly.  Then recite the shatakshara or six letter mantra.  Pray to Ganapathi and see the essence. The nava moolam will become solid bhasma.
Store this bhasma in the attic, boil it in gold. Add one of the four.  Place it in fire or lock a coat on it, protect it so that the breath does not leave/ hit it. See the product processed by fire, for mukti.
Now let us see the philosophical explanation.  The nine products mentioned in this verse seem to be the nine chakra. The adhara or the substratum for these is Brahma kailasam.   If we take this as the locus of Brahma then it is muladhara.  If we take it as Brahman it is sahasrara.  As Agatthiyar calls this as kailasa it seems more like sahasrara.  Agatthiyar calls the chakra as nava moolam, nine origins as they are the starting and ending points of various principles.  These nine are processed with nadha then the divine nectar.  The veeram is the consciousness.  Saying that the breath will be contained he describes kumbaka.  The attic is ajna where sakti appears as a golden goddess.  The six letters may be om namasivaya.  Thus, these verses talk about processing the various principles with the help of kundalini. In the next few verses he will describe how the resultant product is brought down.

இப்பாடலில் அகத்தியர் மற்றுமொரு வழிமுறையைக் கூறுகிறார்.  ரசம் எனப்படும் பாதரசம், நாக வங்கம் (அரை அளவு) ஆகியவற்றை சம்பள நீரால் ஆட்டி மெழுக்காக்க வேண்டும். அத்துடன் நாகரசம், பழரசம், துருசு, அரிதார லிங்கம், கெந்தி, வீரம் மற்றும் பூரம் ஆகியவற்றை சேர்த்து நாத நீரால் ஆட்ட வேண்டும்.  அப்போது வீரம் ஒடுங்கும்.  அத்துடன் கமலா ரசம் சேர்த்து வட்டு செய்து அதை ரவியில் காய வைக்க வேண்டும்.  அதைக் கவசம் எய்து அத்துடன் மண் சீலை கவசம் செய்து, சத்குருவை வேண்டி ஆறு அட்சரங்களை உச்சரிக்க வேண்டும்.  கணபதியை அப்போது வேண்டினால் கரு தெரியும். நவ மூலம் அப்போது பற்பமாகும்.  அதை பரண்ணில் வைத்தி கனகத்துடன் வேக வைக்க வேண்டும்  நாளுக்கொன்று செலுத்தி, அங்கி பூட்டி மூச்சு புகாவண்ணம் வைக்க வேண்டும். இதனால் வரும் பொருளை முக்தி வேண்டும் என்றால் பார்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.
ஒன்பது பொருட்கள்- ஒன்பது சக்கரங்களாகவோ, தத்துவங்களாகவோ இருக்கலாம்.  அரை அளவு என்பது குண்டலினி மூன்றரை சுற்றுக்களாக இருப்பதைப் பிரிப்பதை குறிக்கலாம்.  நவமூலத்துடன் நாதம் சேர்ப்பது என்பது ஒன்பது சக்கரங்கள் குறிப்பவற்றை நாதத்துடன் சேர்க்கவேண்டும் என்பதையே.  வட்டு என்பது வட்டமான தட்டைப் போல உள்ள சக்கரங்கள். இவ்வாறு நவலோகம் என்பது ஒன்பது ஆதாரங்களையோ ஒன்பது தத்துவங்களையோ குறிக்கும்.  இவற்றிற்கு ஆதாரம் பிரம்மகைலாசம் என்கிறார். பிரம்மாவின் கைலாசம் என்றால் மூலாதாரத்தையும் பிரம்ம கைலாசம் என்றால் சகஸ்ராரத்தையும் குறிக்கும்.  இந்த ஒன்பது போருகளும் சேர்ந்ததை கவசம் செய்து மண் சீலை செய்து அத்துடன் கனகத் தாயைச் சேர்க்க வேண்டும்.  இங்கு கனகத் தாய் என்பது சக்தியைக் குறிக்கும். சத்குருவை வேண்டி உச்சரிக்கப்படும் ஆறு அட்சரங்கள் ஓம் நமசிவய என்பவை.  அதன் பின் கணபதியை வேண்டினால் சக்கர சித்தி ஏற்படும்.  அவற்றை பரண் எனப்படும் ஆக்னையில் வைத்து அத்துடன் மூச்சடக்கி கும்பகத்தில் சக்தித் தாயைச் சேர்க்க வேண்டும்.  இந்த முறையால் வரும் பொருள் முக்தியை அளிக்கும்.

இவ்வாறு அகத்தியர் ஆதார சித்தியை விளக்குகிறார். இனி மேலிருந்து பிரபஞ்ச சக்தியை கீழே இறக்குவதை அடுத்த பாடல்களில் கூறுவார்.

Wednesday 8 March 2017

547-553 How to see the effulgence

547-553
Agatthiyar describes a procedure to see the jyothi mentioned in the previous section.  Camphor is placed on sacred ash which is formed as a heap with the left hand, burnt (with mind and consciousness) and the resultant ash is smeared on the forehead.  This gives the yogin the sight of the Jyothi. Philosophically this means the essence and ida nadi are involved.  They are burned with the fire of kundalini through mind and consciousness.  This results in an effulgence.

Adorning this sacred ash daily will give the benefit of performing siva puja and sakthi puja.  When this sacred ash is given to a patient he will recover quickly.
The japa mala is taken in the right hand, attention is placed at the middle of the brow and the mantra om reeng sim sivam, is recited 96 times and the sacred ash is adorned on the forehead.  The Jyothi will appear brightly.

The yogin sees his form as that of sivamayam or embodiment of consciousness.  The adhara will get purified, the pasa or attachment will leave.  The yogin will be called peranda sitthan or the siddha of the supreme space.
 
However, this procedure should be performed secretly, not in public view.  The kechari the thejas, the vasi and the adhara are perceived during yoga and merged with ravi or surya in the forehead.  The amrita rasa karpam will emerge.  Agatthiyar describes this procedure as the yogin realizing the state of bindu and going to the nadha.  The “karpam” or magical potion is creation which is none other than poornam or fully complete.  One should not consider this as insignificant.  Otherwise the deities of the adhara will go away.

முந்தைய பகுதியில் கூறிய ஜோதியை எவ்வாறு காண்பது என்று இப்பகுதியில் அகத்தியர் கூறுகிறார். இடது கையால் விபூதியைக் குவித்து வைத்து, அதன் மேல் கற்பூரத்தை ஏற்ற வேண்டும்.  அதை நெற்றியில் அணிந்துகொண்டால் ஜோதியில் தென்படும்.  தத்துவ ரீதியில், இது சாரத்தை குண்டலினி அக்னியில் மனம், உணர்வு ஆகியவற்றால் எரித்தால் ஜோதி தென்படும் என்கிறார் அவர்.
இந்த விபூதியை தினமும் அணிந்தால் அது சிவ பூஜை சக்தி பூஜை செய்ததை ஒக்கும்.  இந்த விபூதியை வியாதியஸ்தருக்குக் கொடுத்தால் அவர் குணமடைவார். ஜப மாலையைக் கையில் எடுத்து கவனத்தைப் புருவ மத்தியில் குவித்து ஓம் ரீங் சிம் சிவம் என்று 96 முறை சொல்ல வேண்டும்  அப்போது அந்த யோகி தனது உருவம் சிவமயமாக இருப்பதைப் பார்ப்பார்.  ஆதாரங்கள் தூய்மையடையும் பாசம் விலகிப்போகும்.  அந்த யோகி பேரண்ட சித்தர் என்று அழைக்கப்படுவார். 
ஆனால் இந்த செயலை அனைவரும் அறியும் விதத்தில் செய்யக்கூடாது, ரகசியமாகச் செய்ய வேண்டும்.  தேஜஸ் எனப்படும் கேசரியைப் பார்க்கவேண்டும், திருவாக நின்ற வாசியைப் பார்க்கவேண்டும்  ஆதாரங்களைப் பார்க்கவேண்டும்  அவற்றை ஆதி அந்த பூரணமாய் ரவி எனப்படும் பிங்கள நாடியில் அல்லது சூரிய மண்டலத்தில் சேர்க்க வேண்டும்.  மனம் கூசாமல், குன்றாமல் குருவை எண்ணி குருவான அமிர்த ரச கற்பத்தைப் பெறவேண்டும் என்கிறார் அகத்தியர். 


கர்ப்பம் என்ற உத்பன்னத்தை நாத பிந்துக்களின் கடாட்சம் என்கிறார் அகத்தியர்.  அதற்கு ஒரு யோகி விந்துவின் நிலையை அறிந்து நாதத்துக்குப் போய் கற்பத்தை உன்ன வேண்டும்.  அப்போது உண்மை என்னும் பூரணம் நிலைத்திருக்கும்.  இதை அல்பம் என்று எண்ண வேண்டாம்,  அவ்வாறு எண்ணினால் ஆதார தேவதைகள் விலகிவிடுவார்கள் என்கிறார் அகத்தியர்.

Sunday 5 March 2017

543-546 Vedanta wax

543- 546
Preparation of the wax

Agatthiyar says that the golden aparanji should be added to the Vedanta wax, the mother kundalini praised with buddhi and the golden wax is processed.  It is placed at the site of Brahma and smeared on the nine worlds or chakra, with the earth as the cover.  It is then burned after praising the sathguru.  After the process it will appear as golden effulgence.  When this is perceived through vasi then sivayogam occurs, siddhi of all karpam occurs and the person will be called sivayoga muni, vasisiva yogi, jnana paradesi, the silent mauni, the kevuni who circumambulates the great universe.  The yogin sees the Jyothi of kesari with the help of the three- moon, sun and flame.  

Thus we understand that the muladhara and the earth element becomes the shield and other chakra get processed within it.


இதுவரை கூறிய மெழுகை வேதாந்த மெழுகு என்னும் அகத்தியர் அத்துடன் தங்க அபரஞ்சி எனப்படும் குண்டலினி தாயுடன் புத்தியால் சேர்த்து அவளைப் போற்றி பதனம் செய்ய வேண்டும்.  அதன் பிறகு அந்த மெழுகை நவலோகம் என்னும் ஒன்பது சக்கரங்களில் பூசி, அதற்கு மண் எனப்படும் மூலாதாரத்தைக் கவசமாக வைக்க வேண்டும்.  பிறகு சத்குருவை தியானம் பண்ணி அதைப் புடம் போடவேண்டும்.  அப்போது கண்கொள்ளா சோதி தென்படும்.  இவ்வாறு தங்கத்தாயான குண்டலினியைப் பார்த்தல் சிவயோகம் நேர்ப்படும்.  இந்த சிவயோகத்தில் இருந்தால் கற்ப சித்தி ஏற்படும்.  அந்த யோகி சிவயோகி என்றும், வாசிசிவயோகி என்றும் கேசரி என்றும் ஞான பரதேசி என்றும் பேசாத மவுனி என்றும், பேரண்டங்களைச் சுத்தி வரும் கெவுனி என்றும் அழைக்கப்படுவார்.  இவ்வாறு சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று தீக்களால் கேசரியின் சோதியைப் பார்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.
மண் தத்துவமும் அதன் இடமான மூலாதாரமும் கவசமாக இருக்க பிற சக்கரங்கள் அதனுள் புடமிடப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்கிறோம்.

A note

Agatthiyar has described various preparation methods in the next two hundred or so verses.  As the purpose of this blog to enjoy his philosophy we will see select verses in the saumya sagaram from now on.  Those who are interested in the preparations can purchase the book from Tamarai Noolagam for the procedures.  If anyone needs any help in translating these verses please contact here.


Saturday 4 March 2017

542. Practice times for bringing the divine nectar to the lower chakras

Verse 542
ஆட்டுவே நாலுநாள் நன்றாயாட்டி
அதன்பிறகு வெடியுப்பு நீரால் மைந்தா
கூட்டியே ஆறுநாள் தானேயாட்டி
குருவான மெழுகதுவை என்ன சொல்வேன்
நாட்டியே வழித்தெடுத்து மைந்தா நீயும்
நன்மை பெற ரவிதனிலே நவநாள் போட்டு
பூட்டியே ரவிதனிலே நவநாள் போட்டால்
பொன்னான பொன்மெழுகு கண்கொள்ளாதே

Translation:
Grind it for four days
Son, after that with ‘vediyuppu’
Adding them and grinding for six days
How can I describe the guru, the wax!
Collecting it, son,
Place it in ‘ravi’ for nine days
If you lock it and place it in ravi for nine days
The golden wax will be so amazing.

Commentary:
Vediyuppu refers to vishuddhi.  We have seen before that the divine nectar is collected in vishuddhi first and then brought down to the other chakras.  This is performed for six days. Then it is brought down to ravi or pingala nadi and the surya mandala. This is practiced for nine days.  The resulting wax or the state, Agatthiyar says, is amazing.


வெடியுப்பு என்பது விசுத்தி சக்கரத்தைக் குறிக்கும்.  மேலே ஊறிய அமிர்தம் முதலில் விசுத்தியில்சேகரிக்கப்பட்டு அதன் பிறகு கீழ்ச்சக்கரங்களுக்குக் கொண்டுவரப்படுகிறது.  இந்த சேகர பயிற்சி ஆறு நாட்களுக்குச் செய்துவிட்டு அதன் பிறகு ரவி எனப்படும் பிங்கள நாடியின் மூலம் உடலில் நிறுத்தப்படுகிறது.  அது சூரிய மண்டலத்துக்குக் கொண்டுவரப்படுகிறது.  இதன் பலனாக ஏற்படும் மெழுகு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் என்கிறார் அகத்தியர்.

Thursday 2 March 2017

541. Further processing

Verse 541
பாரப்பா காந்தமுடன் சாரம் பூரம்
பதிவான துத்தமுடன் துரிசுகாரம்
நேரப்பா பதிமூன்றும் வகையாய் தாக்கி
நேர்மையுடன் கல்வமத்தில் பொடித்து மைந்தா
காரப்பா கமலரசந் தன்னாலந்த
கருணையுடன் மூன்றுநாள் நன்றாயாட்டி
சேரப்பா ஒன்றாக ஆட்டும்போது
திருவான நாதநீர் தன்னாலாட்டே

Translation:
See sir, along with kaantham, saaram, pooram,
Thuttham, thurisu kaaram
Hitting the thirteen together
Powdering them in the mortar, son,
With the kamala rasam
Grinding them for three days, with mercy,
Mix them together.  While grinding
Grind with the thiru, the water of nadha.

Commentary:
Naaga rasam, veeram, gevuri, lingam, guru, aridhaaram, ayam, kaantham, saaram, pooram, thuttham, thurisu, kaaram. These are medicinal products.  Agatthiyar lists them as 13 in number. These are powered in a mortar and the kamalarasam is added to them and ground for three days,  Then they are ground with nadha neer.
Let us see a few of them in the philosophical sense- naaga rasam- akasha, veeram- mind, gevuri- air, kaaram- anahatam, saaram- manipurakam, thuttham- akasa.  Naagarasam and thuttham may be micro and macro akasha that in the body and outside. 
So these seem to be a combination of the elements, the chakra, breath and mind.
They are then processed with the essence of the lotus or the chakra for three days and then with the nadha.

நாகரசம், வீரம், கெவுரி, லிங்கம், குரு, அரிதாரம், அயம், காந்தம், சாரம், பூரம், துத்தம், துரிசு, காரம் ஆகிய பதிமூன்று பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து கல்வத்தில் ஆட்டி அதில் கமலரசம் சேர்த்து மூன்று நாட்கள் ஆட்டி பிறகு அவற்றில் நாதநீர் சேர்க்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.

இந்த பதிமூன்று பொருட்களைத் தத்துவ ரீதியாகப் பார்த்தால் அவை ஐம்பூதங்கள், பிண்டாகாசம், அண்ட ஆகாசம், மனம், மூச்சு என்பதாகத் தெரிகிறது.  இவற்றுடன் கமலரசம் எனப்படும் சக்கரங்களின் தத்துவங்களை சேர்த்து அதன் பின் நாத நீரைச் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார் அகத்தியர்.  இவ்வாறு இப்பாடல்கள் பல முறைகளின் பூதங்கள், தத்துவங்கள் ஆக்கியாவை ஒன்றாகச் சேர்க்கப்பட்டு நாதத்துடன் கூட்டப்படுகின்றன.   

Wednesday 1 March 2017

540. Naagarasa wax

Verse 540
நாகரச மெழுகு
இருப்பார்கள் சூட்சாதி சூட்சமாக
ஏறுதற்கு வழியொன்று சொல்லக் கேளு
வெறுப்பாக மனமலைந்து போகாவண்ணம்
வேதாந்த நாகரச மெழுகு சொல்வேன்
கருப்பான நாகரசம் ஒன்றாய்க் கொண்டு
கருணையுடன் அந்திடைக்கி நாலத்தொன்று
குறிப்பான வீரமுடன் கெவுரி லிங்கம்
குருவான அரிதாரம் அயக்காந்தம் பாரே

Translation:
They will remain as subtle of the subtle
Listen to a method for ascending
Without the mind getting dejected and waver
I will tell about the “naagarasa wax”
Taking the black naaga rasa
Containing it in one of four
Adding veeram, gevuri lingam
The guru- aridhaaram, ayakkaandham.

Commentary:
In the previous verse Agatthiyar told us about how to raise the consciousness to the highest state.  However, this is not a permanent state.  The yogin either feels depressed as he is not able to remain in this state permanently or his mind wavers and he is not able to hold it in the expected state.  In this verse Agatthiyar tells us a method to hold the mind and prevent it from getting dejected.  He says that it is through “naagarasa mezhugu” or wax of the essence of snake.  Philosophically the essence of snake corresponds ot the essence of kundalini. He lists a variety of things that should be added together to obtain this wax.  We have seen before the philosophical equivalents of these products.  It is not being described here to avoid repetition.


உச்ச உணர்வு நிலையைப் பற்றி அகத்தியர் முற்பாடல்களில் கூறினார்.  ஆனால் இந்த நிலை நிரந்தரமானது அல்ல.  அந்த நிலையில் இருக்கும் ஒரு யோகி வெறுப்படையலாம், அவரது மனது அலை பாயலாம்.  இவ்வாறு நிகழ்வதைத் தடுப்பதற்கு அவர் நாகரச மெழுகு தயாரிப்பைக் கூறுகிறார். தத்துவரீதியாக நாகரசம் என்பது குண்டலினியின் சாரம்.  அதைப் பெறுவதற்குப் பல பொருள்களைச் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார் அவர்.  இந்தப் பொருள்கள்தத்துவரீதியாக எவற்றைக் குறிக்கின்றன என்று முன்னமே பார்த்தோம்.  விரிவு கருதி அவற்றை இங்கே விளக்கவில்லை.