Wednesday 8 April 2015

31. Agatthiyar mentions about vaasi

Verse 31
காணவே ஐபுலனை வகுத்துப் பார்த்துக்
கருவான ஆதார மூலத்தேகி
தோணவே வாசியுட நிலையைக் கண்டு
சுத்தமுடன் அவ்வாசி தன்னிலேறி
பூணவே அண்டவரைத் தன்னிற் சென்று
புத்தியுடன் சித்தமதாய் நின்றாயானால்
ஊணவே கரணம் அந்தக் கரணம் நாலும்
உண்மையுடன் சொல்லுகிறேன் உகந்து கேளே

Translation:
Examining the five senses
Going to the essence, the adhara mula (muladhara)
Seeing the status of the vaasi
Climbing in that vaasi with purity
Going to the peak of the universe
If you remain as chittham along with buddhi
The four inner instruments
I will tell you about them truthfully, hearing with pleasure

Commentary:
Agatthiyar tells us that first we should understand the nature of the five senses.  Then we should place our consciousness at the muladhara.  At that point we will understand the status of vaasi.  This line indicates that vaasi is the power of kundalini.    Thus, vaasi is not mere breath control but the force of kundalini which arises due to these practices.  It becomes clear to us when we understand certain principles and focus our attention at the muladhara. With the help of vaasi the consciousness reaches the peak of andam or the manifested universe.  That is, we reach the point of emergence of this manifested world.  We perceive the manifested world through our senses, which is experienced by the manas.  Thus, when we reach the point of emergence of the world we cross the function of manas.  Hence, Agatthiyar says that we should remain as chittham and buddhi.  Buddhi is discriminating mind and chittham is a part of the mind that experiences the knowledge born from the functioning of the manas and buddhi.  To understand this clearly he tells Pulatthiyar that he will be talking about the anthakarana or inner instruments next. 


இப்பாடலில் அகத்தியர், நாம் முதலில் நமது ஐபுலன்களைப் பற்றி அறிய வேண்டும் என்கிறார்.  அதனை அடுத்து நமது கவனத்தை மூலாதாரத்தில் வைக்க வேண்டும் என்கிறார்.  அப்போது நமக்கு வாசியின் நிலை புலப்படும் என்கிறார்.   இதனால் புலன்களின் தாக்கத்தைக் கடந்ததால்தான் வாசி புலப்படும் என்பது தெரிகிறது.  வாசி என்பது இப்பயிற்சியினால் எழும் குண்டலினி சக்தி என்பதும் தெரிகிறது.  அதனை அடுத்து அந்த வாசியில் ஏறி அண்ட முகட்டை அடையவேண்டும் என்கிறார் அகத்தியர்.  அண்டம் என்பது ஐம்புலன்களால் அறியப்படும் உலகம்.  இதற்கு மனது தேவைப்படுகிறது.  இதனால் அண்ட முகட்டை அடையும்போது நாம் மனதின் தாக்கத்திலிருந்து விடுபடுகிறோம் என்பது புரிகிறது.  அதனால்தான் அகத்தியர் புத்தியும் சித்தமுமாக நின்றவேண்டும் என்று அடுத்து கூறுகிறார்.  புத்தி என்பது மனத்தால் அறியப்பட்டவற்றை ஆராயும் பகுதி, சித்தம் என்பது அவ்வாறு ஆராய்ந்து பெற்ற அறிவினால் ஏற்படும் உணர்வுகளை அனுபவிக்கும் பகுதி.  இவையனைத்தும் அந்தக்கரணங்கள் அல்லது உட்கருவிகள் எனப்படும் நான்கின் பகுதிகளாகும்.  அதனால், தான் அடுத்து அந்த நான்கு கருவிகளைப் பற்றிப் பேசப்போகிறேன் என்கிறார் அகத்தியர்.

Monday 6 April 2015

56. How to perceive the muladhara

Verse 56

Muladhara-2

பாரப்பா மூலமென்ற முட்டைக்குள்ளே
பதியான அக்ஷரந்தான் ஓங்காரமாச்சே
நேரப்பா நின்ற ஓங்காரத்தோடே
நிசமான ரீங்காரம் உகாரங் கூட்டி
சாரப்பா தன்மனமே சாக்ஷியாக
தன்மையுடன் தானிருந்து செபிப்பாயாகில்
காரப்பா கணபதியும் வல்லபையுமைந்தா
கனிவாக உந்தனிடம் கனிவார் காணே

Translation:
See son, within the egg, the muladhara
The akshara or letter is om
Along with the omkara
Add the truthful reemkaara and ukara
With one’s mind as the witness
If you recite while remaining in the right condition
Ganapathy and Vallabhai, son
Will become merciful towards you.

Commentary:
In the previous verse Agatthiyar described the structure of the muladhara.  Here he is describing the worship method for perceiving the muladhara.  He says that the letters om and reem along with ukaara are recited mentally.  Then, Ganapathy and his consort Vallabhai will become merciful towards the yogi and grant him the vision of the muladhara.


முந்தைய பாடலில் அகத்தியர் மூலாதாரத்தின் அமைப்பைக் கூறினார்.  இப்பாடலில் அதைக் காண்பதற்கான வழிமுறையைத் தருகிறார்.  சரியான தன்மையுடன் இருந்து ஒருவர்ஓம் ரீம் உம் என்று மனதினுள் ஓதினால் கணபதியும் அவரது துணைவியார் வல்லபையும் அவருக்கு அருள் புரிவார் என்கிறார் அகத்தியர்.

55. Muladhara

Verse 55
Muladhara
மூலாதாரம்
கேளப்பா விபரமென்ன மூலாதாரங்
கிருபையுடன் கண்டுகொள்ள  வகையைக் கேளு
காலப்பா தோன்றி நின்ற மூலாதாரம்
கருணையுடன் சொல்லுகிறேன் அண்டம் போலாம்
மேலப்பா அண்டமதிற் சூழ்ந்து நின்ற
விசையான இதழதுதான் நாலுமாச்சு
சூளப்பா நிறமதுதான் மாணிக்கம் போல்
சுகமாக நின்றுதடா மூலம் பாரே

Translation:
Listen son, the details about the muladhara
Listen to the way to see it
The prana, the place where it occurs and remains, the muladhara
I will tell you with mercy, is like the universe
In that universe, the surrounding
The petals are four
See son, its color is like ruby
Remained there comfortably, see the origin (moolam)

Commentary:
Agatthiyar is describing the muladhara as the origin of prana.  He says it is like the universe.  The total number of petals is four and its colour is like the ruby.


மூலாதாரமே கால் அல்லது பிராணன் தோன்றும் இடம், அது அண்டம் போல் இருக்கும் என்கிறார் அகத்தியர்.  அண்டம் என்பது ஒரு கோளம் மற்றும் உலகம் என்று பொருள்படும்.  இதன் இதழ்கள் நான்கு என்று கூறும் அகத்தியர் அதன் நிறம் மாணிக்கம் என்கிறார். 

54. The key for the locks in the cakra...

Verse 54
பாரப்பா ஆதாரக் கதவைச் சாற்றி
பலபலவாய் நின்றதொரு தாளைப் பூட்டி
நேரப்பா அப்பூட்டுத் தனக்கு மைந்தா
நிசமான சுழினையே கோல்தான் அப்பா
அறிந்து மிகத் தான் நிறுத்துப் பார்க்கும்போது
வீரப்பா கொண்டதொரு ஆறாதாரம்
விபரமுடன் தோணுதற்கு விபரங்கேளே

Translation:
See son, closing the doors of the adhara
Locking the several locks
For those locks, son,
The key is suzhinai (ajna)
Knowing this, if one weighs it carefully
The valorous six adhara
Listen to the details for them to become visible.

Commentary:
Agatthiyar explains why the ajna chakra is considered so important.  He says that it is the key which locks the six adhara or cakra.  He equates the cakra to doors that have locks and the key for the locks is suzhinai or ajna.  He is starting to explain the six adhara in the next few verses.


எதனால் ஆக்ஞா சக்கரம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  அவர் ஆறு ஆதாரங்களைக்பூட்டுக்கள் கொண்ட கதவுகள் என்றும் அந்தக் கதவுகளைத் திறக்க பயன்படும் திறவுகோல் ஆக்ஞா அல்லது சுழினை என்றும் கூறுகிறார்.  இதனை அடுத்து அவர் ஆறு ஆதாரங்களை விளக்கப்போகிறார்.