Tuesday 31 May 2016

409. Chidananda roopam

Verse 409
தானேதான் விளங்குமடா அறிவானந்தந்
தன்மையுள்ள பூரணமாய்த் தாந்தானாகும்
வீணேதான் திரியாதே அறிவைப் பற்று
வேதாந்தஞ் சித்தாந்தம் இரண்டும் ஒன்று
கோனேதான் தானவனாய்க் குறித்துப் பாரு
குறியறிந்து பார்த்துநிலை கொண்டாயானால்
ஊனேதான் ஆனந்த போதமாகும்
உண்மையென்ற நிருவிகற்பம் உறுதிபாரே

Translation:
The bliss of awareness will become clear automatically
The self will become the poornam
Do not roam around uselessly, hold on to awareness
The Vedanta and Siddhantha are verily one
The king is the self, see self has Him
Knowing the sign if you know the state
The body will become anandha bodham
The truth, the nirvikarpam.  See it firmly.

Commentary:
The self is the poornam,  It is the bliss of awareness.  Agatthiyar advises Pulatthiyar to hold on to this awareness and tells him that Vedanta and Siddhantha are one. When one realizes that the Lord is none other than the Self then one’s body will be that of aanandha bodham, one will reach the state of bliss awareness chithananda.  Thus one will reach nirvikalpa state, undifferentiated from the Divine.  This nirvikalpa is not nirvikalpa Samadhi.  Samadhi is a state experienced during yoga.  This nirvikalpa is a permanent state, that of being allpervading, being without any distinctions. This is the chidhananda roopam.


ஆத்மா என்பது பூரணம், ஆனந்த அறிவு.  இந்த அறிவு நிலையைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும் வேதாந்தமும் சித்தாந்தமும் ஒன்று என்றும் அகத்தியர் புலத்தியருக்குக் கூறுகிறார்.  அப்போது ஒருவர் தான் வேறு இறைவன் வேறு அல்ல என்பதை உணருகிறார்.  அவரது உருவம் சித்தானந்தமாக ஆனந்த போதமாக இருக்கும், இதுவே நிர்விகல்பம் என்றும் கூறுகிறார் அகத்தியர்.  இங்கு நிர்விகல்பம் என்று கூறுவது நிர்விகல்ப சமாதி அல்ல.  சமாதி என்பது யோகத்தில் அடையும் ஒரு நிலை.  இந்த நிர்விகல்பம் என்பது தானே அவனாகுதல்.  இங்கு குறிப்பிடப்படுவதே சிதானந்த ரூபம். 

Monday 30 May 2016

408. The soul, the poorna

Verse 408
சோதி என்ற முச்சுடரும் ஒன்றாய் நின்று
துலங்குதடா தன்னகத்தில் நன்றாய்ப் பாரு
நீதியுடன் நிலையறிந்து பார்க்கும்போது
நிலையறிந்து கண்டதெல்லாஞ் சோதியாச்சு
ஆதிஎன்ற சோதி யடா மனக்கண்ணாச்சு
அறிவான தீபமடா ஆத்துமா வாச்சு
ஓதியதோர் மந்திர கலை ஆத்துமாவாகி
உண்மையென்ற பூரணமாய் விளங்கு ந் தானே

Translation:
The effulgence, the three flames remaining together
Are glowing in the heart, see well.
When they are perceived knowing the status
All that is seen became jyothi
The Adhi, the jyothi became the mind’s eye
The awareness, the flame, became the soul
The mantra kala recited, becoming the soul
Remains as the truth, the poornam

Commentary:
The supreme state in kundalini yoga is identification with Ultimate Reality.  This is achieved by abiding of all principles in the heart, passing from vikalpa state to nirvikalpa state, disappeareance of limited ego ahamkara and becoming poorna and ultimately dissolving the limited consciousness in the universal consciousness.  In this verse, Agatthiyar explains the state of poorna.  When the triple flames, agni, sun and moon glow within the heart of the yogin everything appears as the flame.  This flame, that of consciousness is the mind’s eye or perception beyond the senses.  It is the awareness, the flame of consciousness, the atma or the soul. It is the mantra kala or the kalaa that raises one to the supreme state.  This is the truth, the poorna.
குண்டலினி யோகத்தின் உச்ச நிலை பரத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது.  இந்த நிலை நான்கு படிகளில் அடையப்படுகிறது.  முதலில் தத்துவங்கள் அனைத்தும் அடங்கி மனம் மட்டும் நிற்கிறது.  இதனை அடுத்து விகல்பம் அல்லது தான் வேறு பிறர் வேறு என்ற நிலை மாறி விகல்ப நிலை ஏற்படுகிறது.  இதனை அடுத்து அளவுக்குட்பட்ட அகங்கார நிலை மாறி பூரணன் நிலை ஏற்படுகிறது.  இதனை அடுத்து அளவுக்குட்பட்ட உணர்வு பரவுணர்வு நிலையை அடைகிறது-சித்தம் சித்தாகிறது. 


இப்பாடலில் அகத்தியர் பூரணன் நிலையை விளக்குகிறார்.  மூன்று சோதிகள் எனப்படும் அக்னி, சூரியன், சந்திரன் என்பவை ஒன்றாகி சோதி வடிவில் இதயத்தில் நிற்கின்றன.  இந்த சோதியே உணர்வாக ஆத்மாவாக இருக்கிறது.  இந்த சோதியே மனத்தின் கண் அல்லது புலன்களுக்கு அப்பாற்பட்ட “பார்வை”எனப்படுகிறது.  இந்த மந்திரகலையே ஆத்மா, இதுவே உண்மை அல்லது சத்தியம் எனப்படும் பூரணம் என்கிறார் அகத்தியர்.

407. The navel, the ravi and mathi

Verse 407
காணவே உந்தி என்ற ககனமீதில்
கண்கொள்ளா காக்ஷிவெகு சூக்ஷங்காணும்
தோணவே சூக்ஷ நிலை தானே கண்டு
துருவமென்ற மேருவடா அண்டந்தன்னில்
பூணவே அண்டபதங் கைக்குள்ளாக
ஊணவே மனதுறுதி யாக நின்றால்
உத்தகலை ரவிமதியுஞ் சோதியாச்சே

Translation:
To see over the navel, the world,
A vision that overflows the eye, a very esoteric vision will be seen
Seeing the esoteric vision
The pole, the Meru, in the macrocosm
To adorn it, for the locus in macrocosm to come under control
At Samadhi, the brow middle,
If remained with a firm mind
The kala, the sun and the moon became the flame.

Commentary:
Siddhas recommend shodashakala, a sixteen step process for attaining the supreme state.  The steps- akaara kala, ukara kala, makara kala, bindhu kala, ardha chandra kala and so on start from the navel and end at dvadasantha.  The ravi mentioned in this verse corresponds to the surya and the mathi refers to chandra or moon.  The surya mandala spans the region between the navel and the throat while the chandra mandala spans the space between the throat and brow middle.  The third, the agni mandala spans the region between muladhara and the navel.  The shodasha kala are steps to merge the principles or tattva to attain the supreme state.  These principles manifest as the universe.  Hence, Agatthiyar says, “the world over the navel seen”.  When yogin remains with his mind focused firmly at the navel, the two, surya and chandra mandala the termini of which are the navel and the ajna will glow. 


அளவுக்குட்பட்டமையைக் கடக்க சித்தர்கள் சோடச கலை என்ற பதினாறு படிகளைப் பரிந்துரைக்கின்றனர்.  அகார கலை,உகார கலை, மகார கலை, விந்து கலை என்பதான இப்பதினாறு படிகள் நாபி அல்லது உந்தியிலிருந்து தொடங்கி துவாதசாந்தத்தில் முடிகின்றன.  இந்த படிகளின் மூலம் தத்துவங்கள் லயமடைந்து உச்ச நிலை எட்டப்படுகிறது.  இந்த தத்துவங்களே அண்டமாகவும் பிண்டமாகவும் விரிந்துள்ளன.  அதனால்தான் அகத்தியர் “உந்தி ககனமீது” என்று கூறுகிறார்.  ரவி மதி என்பவை சூரிய சந்திரர்கள் என்று முன்பு பார்த்தோம்.  நமது உடலில் உள்ள மூன்று மண்டலங்களான அக்னி மண்டலம் மூலாதரத்திலிருந்து நாபி வரையிலும், சூரிய மண்டலம் நாபியிலிருந்து விசுத்தி வரையிலும் சந்திர மண்டலம் விசுத்தியிலிருந்து  ஆக்ஞை வரையிலும் பரவியுள்ளன.  ரவி மதி சோதியாகும் என்பது ஒரு யோகி தனது மனத்தை நாபியில் குவித்து உறுதியாக நின்றால் சூரிய சந்திரமண்டலங்கள் சோதிநிலையை அடைகின்றன என்று பொருள்.

Friday 27 May 2016

406. Somagiri, suryagiri, ubhayagiri

Verse 406
ஆச்சப்பா சோமகிரி உச்சி மூலம்
ஆள் பெருகுஞ் சூரியகிரி மூலமாச்சு
மூச்சப்பா உபய கிரி நடுவிலேதான்
மோக்ஷ மென்ற காரணியைநான் என்ன சொல்வேன்
பேச்சப்பா பேசாத காக்ஷிதன்னை
பிரணவத்தின் கிருபையினால் சொல்லக் கேளு
நீச்சப்பா நிலையறிந்து காணப்போகா
நிசமான நிலையதுதான் உந்தி காணே

Translation:
Son, the somagiri is the top terminus
That which makes a man expand (from a seed state) is the suryagiri mula
The breath, ubhayagiri is in the middle
The causality, the moksha, how can I describe it?
The vision, that which is speechless
Listen to me describe it due to the grace of pranava,
Knowing the state and seeing it, it will not go
The truthful state is at the navel.

Commentary:
Agatthiyar explains somagiri and surya giri in this verse.  Somagiri or the peak of the moon is the top terminus.  It is the ajna cakra.  The surya giri is the muladhara.  Man expands into a form from this point.  This is the adhara mulam or origin which is the link between the gross and subtle body.  The breath moves in between these two peaks. The ubhaya giri is manipurakam.  Ubhayam means help.  The breath travels between muladhara and ajna, bringing along with it the prana, the manas and consciousness.  Hence, it is the ubhayagiri. This travel results in the state of liberation which is beyond verbal description.  Agatthiyar says that with the grace of pranava he can describe it.

The word pranavam is interesting.  If we split it as prana+vam then it may mean stabilization of prana in the body with the help of the vakaram or breath, the air component.

The panchakshara mantra namasivaya is assigned to different cakras as follows: na-muladhara, ma-svadhistana, si-manipuraka, va- anahata and ya-vishuddhi.  Thus the manipuraka cakra corresponds to the letter si which also represents the mahakaarana sareera the original state of the soul.  This may be the reason for Agatthiyar saying that the original state is at the navel. 

சோமகிரி, சூரிய கிரி ஆகியவற்றை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர்.  சோமகிரி அல்லது சந்திரகிரி என்பது மேல் மூலம் அல்லது ஆக்ஞா சக்கரம்,  சூரிய கிரி என்பது அடி மூலம் என்கிறார் அவர்.  மூலாதாரத்திலிருந்துதான் ஓர் ஆத்மாவின் உடல் உருவாகிறது.  மூலாதாரம், ஸ்தூல மற்றும் சூட்சும உடல்களுக்கு இடையே ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது.  இந்த இரு சிகரங்களுக்கும் இடையே மூச்சு உலாவுகிறது.  மணிபூரக சக்கரம் இவற்றின் இடையே உள்ள உபயகிரி எனப்படுகிறது.  உபயம் என்றால் உதவுவது.  இந்த மூச்சின் ஓட்டத்தினால் மோட்சம் கிட்டுகிறது. இவ்வாறு மூச்சின் உபயத்தினால் சம்சாரத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது.  இந்த மோட்ச நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, பிரணவத்தின் அருளால் இதை விளக்க முனைகிறேன் என்கிறார் அகத்தியர். 

பிரணவம் என்ற சொல்லைப் பார்த்தோமானால் பிராணனை வம் என்னும் மூச்சு அல்லது காற்றுத் தத்துவத்தால் உடலில் நிலைபெறச் செய்வது என்று குறிப்பதைப் போலத் தோன்றுகிறது. 


பஞ்சாட்சர மந்திரம் உடலிலுள்ள சக்கரங்களுடன் கீழ்க்கண்டவாறு தொடர்புடையது:  ந-மூலாதாரம், ம-சுவாதிஷ்டானம், சி-மணிபூரகம், வ- அனாகதம் மற்றும் ய- விசுத்தி சக்கரங்கள்.  இவற்றில் சிகாரம் என்பது தேஜோமயமான மகா காரண சரீரத்தைக் குறிக்கிறது.  இந்த சரீரமே ஆத்மாவின் உண்மையான நிலை.  இது மணிபூரக சக்கரத்துடன் தொடர்புடையது.  ஆத்மாவின் நிசமான நிலை உந்தி என்று அகத்தியர் கூறுவது இந்த கருத்தில்தான் என்று தோன்றுகிறது.  

Thursday 26 May 2016

405. Somagiri, suryagiri

சூரியகிரி சோமகிரி நிதானம்
ஆமாப்பா சுரூபமயம் பூரணமென்றெண்ணி
அடர்ந்தெழுந்த தத்துவத்தை அறிவால் நீக்கி
தாமப்பா ஓமென்ற பிரணவத்தினாலே
தன்னுயிர் போல் மன்னுயிரைத் தான்தானென்று
நாமப்பா சொல்லுகிறோம் நாதாந்த வீட்டில்
நாடிமனங்கொண்டு திரு நயனம் பாரு
சோமப்பா பால்கொண்டு திரு நயனம் பார்க்க
சோமகிரி சூரியகிரி சத்தமாச்சே

Translation:
Yes son, considering the suroopam as poornam
Removing the tattva that rises densly, with the help of awareness
With the help of pranava
Considering other lives like one’s own
We are saying, son, in the house of nadhantha
Seek and see the sacred eyes with the help of the mind
When the sacred eyes are seens consuming the milk of soma
It became soma giri, surya giri, sabham.

Commentary:
Somagiri, suryagiri, udhayagiri, somapaal etc are Siddha paribhasha or esoteric terms.  Agatthiyar describes these in this and the next verse.  He tells us about the attitude of the yogi who perfroms this yoga.  The suroopa he mentioned in the previous verse is considered as the poornam or natural state, the state of consciousness.  The tattva are limiting principles-atma tattva, vidya tattva etc that bring about the feeling of limted existence.  Their influence should be removed.  All lives are considered like one’s own life.  All great souls, Vallalar, Jesus Christ and many others have spoken about this.  From this verse we see that it is an essential step in yoga.  The yogin goes to the house of nadhantha or ajna and with the help of the mind he perceives the sacred eye.  Thiru nayanam means sacred eye as well as the eye that reveals the sacred.  Thus the third eye is this state of perception.  Marking a third eye on Siva’s forehead indicates this state and not the presence of an actual eye!  The somapaal or milk of soma is the divine nectar.  Agatthiyar says that it will become somagiri, suryagiri sabdham.


சோமகிரி சூரியகிரி, உதயகிரி, சோமப்பால் போன்ற சொற்கள் சித்தர்களின் பரிபாஷை எனப்படுகின்றன.  இனி வரும் பாடல்களில் அகத்தியர் இவற்றில் சிலவற்றை விளக்கப்போகிறார்.  அதற்கு ஒருவர் சுரூபம் என்று முன்பாடலில் குறிப்பிடப்பட்டதை பூரணம் என்று, பரவுணர்வு என்று கருதவேண்டும் என்றும் பிற உயிர்களைத் தன்னுயிரைப் போல எண்ண வேண்டும் என்றும் கூறிகிறார் அகத்தியர்.  அடர்த்தியாக எழும் தத்துவங்களும் விலக்கப்படவேண்டும்.  தத்துவங்கள் என்பவை ஒரு உயிரை அளவுக்குட்பட்டதாகக் கருதச் செய்யும் வஸ்துக்கள்.  ஆத்மதத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம் என்பவை ஒருவர் தான் உடல், தான் கால தேச சக்தி ஆகியவைகளில்  அளவுக்குட்பட்டவர் என்று நினைக்கச் செய்பவை.  இவற்றை விலக்கி அனைத்து உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதவேண்டும் என்கிறார் அகத்தியர்.  வள்ளலார், இயேசு கிறிஸ்து போன்ற பல ஞானிகள் இதைப் பற்றிப் பேசியுள்ளனர்.  வாடிய பயிரைக் கண்டால் தாமும் வாடுவதாக வள்ளலார் கூறுவது இந்தக் கருத்தில்தான்.  இப்பாடலின் மூலம் இந்த நிலை பொதுவாக பிறர்க்கு நன்மை செய்யவேண்டும் என்பதைத் தவிர யோகத்தில் ஒரு முக்கிய நிலை என்பதையும் அகத்தியர் நமக்குக் காட்டுகிறார்.  இவ்வாறு இருந்தால் திரு நயனம் பார்க்கலாம் என்கிறார் அகத்தியர்.  இதனால் திரு நயனத்தைப் பெறுவது இருப்பின் ஒரு நிலை என்பது புரிகிறது.  இதைத்தான் சிவனின் மூன்றாவது காண்ணாக, நெற்றிக் கண்ணாகக் குறிப்பிடுகிறார்கள்.  நெற்றிக் கண் என்பது ஆக்ஞா சக்கரத்தைக் குறிக்கிறது.  திரு நயனம் என்பது புனிதமான கண், புனிதத்தைக் காட்டும் கண் என்று இருபொருள்படுகிறது.  இந்த நிலையில் சோமப்பால் எனப்படும் அமிர்தத்தைக் குடித்தால் சோமகிரி, சூரியகிரி சத்தமாகும் என்கிறார் அகத்தியர்.

Wednesday 25 May 2016

404. Everything is sivamayam, niramayam, sukhajeeva prana kalai

Verse 404
காணவே கண்டதெல்லாஞ் சிவமயமென்று எண்ணு
கடந்தேறிப் போனதெல்லாஞ் சிவமயமென்று எண்ணு
பேணவே தன்னகமே சிவமயமென்று எண்ணு
பிலமான வாசியது சிவமமென்று எண்ணு
உண்ணவே அண்டபிண்டஞ் சிவமயமென்று எண்ணு
ஒடுங்கி நின்ற சத்தமது சிவமயமென்று எண்ணு
தோணவே சிவமயமும் நிராமயமென்று எண்ணு
சுக சீவ பிராணகளை சுரூபமயமாமே

Translation:
Consider everything seen as embodiment of sivam
Consider everything that was crossed and went beyond as embodiment of sivam
Consider the nutured self as embodiment of sivam
Consider the means, the vaasi as embodiment of sivam
Consider the consumed macro and micro cosms as embodiment of sivam
Consider the contained sabdha as embodiment of sivam
Consider the embodiment of sivam as niramaya
The characteristic, sukha jeeva prana is the native/good form (suroopamayam)..

Commentary:
Agatthiyar sums up the goal of vaasiyoga sivayoga with this verse.  After listing all the entities at must be crushed and gone beyond he tells us that everything is an embodiment of sivam.  Sivam is consciousness, “unarvu”.  He tells us that all the perceptions, the stages crossed, the self, the vaasi, micro/macrocosm and the qualities-sabdha etc including the nadha are all embodiments of consciousness.  This consciousness is niramaya or faultless, pure or suddha.  He says this is the original form, the good form- surupa, the blissful state of jeeva which is nothing but the supreme.



வாசி யோகம் சிவ யோகத்தின் நாட்டம் என்ன என்று மேலே ஐந்து பாடல்களில் கூறிய அகத்தியர் இப்பாடலில் அனைத்தும் சிவமயம் என்று கருதவேண்டும் என்கிறார்.  சிவம் என்பது பரவுணர்வு.  இதுவே அனைத்துக்கும் மூலமாக இருப்பது.  காண்பது முதலான உணர்வுகள், கடந்த நிலைகள், தான் எனப்படும் ஆத்மா, பரவுணர்வுக்கு பிலமாக உள்ள வாசி, அண்டபிண்டங்கள், சத்தம் முதலான குணங்களும் அவற்றிற்கு அடிப்படையான நாதம் என்று அனைத்தும் சிவமயமே என்கிறார் அகத்தியர்.  இந்த சிவமயமும் நிராமயம், குற்றமற்றது, சுத்தம் என்கிறார் அவர்.  இதுவே சுரூபம் அல்லது நல்ல உருவு, இயற்கையான உருவு என்றும் இதுவே சுக ஜீவ பிராண களை என்றும் கூறி இப்பகுதியை முடிக்கிறார் அகத்தியர்.

403. Everything is sivam everything is by sivam

Verse 403
ஒடுங்கி நிராமயமாகிப் பூரண தாரகமாய்
உகமுடிந்த கவனமெல்லா மொருபுறமாய் நீக்கி
இடங்குவிந்து வலமான ஏக பூரணமாய்
எந்தெந்தக் காரியமும் இன்பமுடன் நினைத்தால்
தடங்கலின்றிச் சித்து வெகு சத்தமாய்க் காணுந்
தன்மையுடன் தன்மனதைத் தானறிந்ததாலே
திடங்குவிந்து நிராமயமாய் சின்மய பூரணமாய்
சிவசிவா சிவகரமே சிவமயமாய்க் காணே

Translation:
Abiding, becoming niramayam, as poorna thaarakam
Removing all the attention to one side, with the eon ending
As the fully complete that accumulated at the left and at the right
Any action, when wished happily
Will occur without any obstruction- attaining that sitthu, it will appear as great sattham
Because of knowing one’s own mind
Becoming firm, as niramaya, chinmaya pooranam
Siva sivaa! See sivakaram as sivamayam.

Commentary:
Niramaya, as we saw before, means infalliable, error-free.  Poorna thaarakam- thaarakam means absolutely essential.  Poorna thaarakam means the fully complete essence.  All the external attentions are removed. Idam and valam means ida and pingala nadi.  Consciousness
flows through the middle.  The yogin attains karya siddhi or having all his wishes fulfilled.  He will know his own mind.  He will see everything happening because of siva and everything as embodiment of siva



நிராமயம் என்றால் குற்றமற்று இருத்தல். தூய நிலை.  பூரண தாரகம்- தாரகம் என்றால் அத்யாவசியமானது, சாரம்.  பூரண தாரகம் என்றால் ஆத்மாவின் சத்து.  இந்த நிலையில் வெளியுலகின் மீது இருக்கும் கவனம் விலகிவிடுகிறது.  இடம், வலம் என்றால் இடா பிங்களா நாடிகள்.  அவற்றில் உணர்வு ஓடாமல் சுழுமுனை ஓடுகிறது.  இந்த யோகிக்கு அவர் நினைத்த காரியமெல்லாம் நடக்கும் காரிய சித்தி ஏற்படுகிறது.  அவர் தனது மனதைத் தான் அறிவார்.  அனைத்தும் சிவத்தால் நடைபெறுகிறது, அனைத்தும் சிவமே என்பதை அறிவார் என்கிறார் அகத்தியர்.

Monday 23 May 2016

402. Crushing the ashta karma

Verse 402
தெளிவான வசீகரமும் மோகனமும் நசித்து
திறமான தம்பனமும் உச்சாடனமும் நசித்து
வளியான கிரிசனமும் வேசனமும் நசித்து
மாரணமும் பெதனமும் வகையுடனே நசித்து
பனியான செகச்சால மானதெல்லாம் நசித்து
பரிசனமாய் நின்றதொரு பெண்ணாசை நசித்து
ஒளியாத பெண்ணாசை மண்ணாசை நசித்து
ஒன்று மற்று தன்மயமாய் ஒடுங்குவதே நாட்டம்.

Translation:
Crushing the clear vaseekaram and mohanam
Crusihing the sthambanam and ucchaadanam
Crushing the kirisanam and veshanam
Crushing the maaranam, bedhanam with all the types.
Crushing the fog, the jagat jaalam
Crushing the desire for a woman and related desires
Crushing the difficult to destroy desire for a woman and land
The goal is to abide as thanmayam

Commentary:
Agatthiyar is talking about the ashta karma or eight actions that a yogin is able to accomplish as a result of yoga siddhi.  They are vaseekaram, mohanam, sthambanam, ucchaadanam, kirisanam, udhveshanam, maaranam and bedhanam.  The yogin is able to produce all kinds of magical vision or jagat jaalam.  He is also able to go beyond the fog created by the manifested world, the jagat jaalam.  He crosses the desires and reaches a state of sanmayam or selfhood.  The desire for woman and land are mentioned as examples.  These represent the three types of eshanai- putra (offspring) artha (wealth) and ulaga (worldly attachments) edanai.  Agatthiyar mentioned this is in verse 45  Some say that it is putra, artha and kalatthra edanai.   
Thanmayam means remaining in the state of self. 

இப்பாடலில் அகத்தியர் அஷ்ட கர்மா எனப்படும் எட்டு செயல்களைக் கூறுகிறார். யோக சித்தியினால் பெறப்படும் இவை வசீகரம், மோகனம், ஸ்தம்பனம், உச்சாடனம், கிரிசனம், உத்வேஷணம், மாரணம் மற்றும் பேதனம் என்பவை.  இவை தவிர அந்த யோகி ஜகத் ஜாலம் எனப்படும் பலவித மாயா தோற்றங்களையும் ஏற்படுத்த வல்லவராகிறார்.  தான் உலக மாயை அல்லது ஜகத் ஜாலத்தைக் கடக்கிறார், அந்த பனிமூட்டத்தினால் மதியிழப்பதில்லை.  இவை தவிர பெண்ணாசை மண்ணாசை எனப்படும் ஏடணைகளையும் அவர் கடக்கிறார்.  பாடல் 45ல் அகத்தியர் மூன்றுவித பற்றுக்களைக் கூறியுள்ளார்.  அவை அர்த்த ஏடணை, புத்திர ஏடணை மற்றும் உலக ஏடணை என்கிறார் அவர்.  சிலர் அர்த்த, புத்திர மற்றும் களத்திர ஏடணை என்றும் கூறுகின்றனர்.

தன்மயம் என்பது சுயம் என்னும் நிலையில் இருப்பது.  

Sunday 22 May 2016

401. Crushing ashtanga yoga- goal, verse 4

Verse401
ஒடுங்குவது காண்பனென உண்ணுவதும் நசித்து
உறுதியுடளனப்பிரமமொடு நியமம் நசித்து
அடங்கி நின்ற பிராணாயம் ஆசனமும் நசித்து
அரகரா பிறத்தியா காரமது நசித்து
துடங்கி நின்ற தாரணையும் தியானமது நசித்து
சுகசீவ பிராண கலை சமாதிகளும் நசித்து
திடங் கொண்ட தூலமுடன் சூக்ஷமும் நசித்து
சிவசிவா நிராமயமாய் தெளிவதுவே நாட்டம்

Translation:
Crushing seeing, abiding the consumption
The firm brahman, niyama
Crushing the pranayama, asana
Ara haraa!  Crushing pratiyahara
Crushing the dhaarana, dhyana
The sukha jeeva pranakala samadhis- crushing them
The firm gross and subtle-curshing them
Siva sivaa becoming clear as niraamaya- the desire.

Commentary:
This verse describes crushing or going beyond the ashtanga yoga.  Agatthiyar says, “crushing the steps of the ashtanga yoga, the sthula and sukshama and becoming the niraamaya is the goal.”

Thus Agatthiyar is describing the various steps that a yogin has to cross to reach the supreme state of niramaya or absolute purity.


இப்பாடலில் அகத்தியர் அஷ்டாங்க யோகத்தின் படிகளை நசிக்கவேண்டும் என்றும்  ஸ்தூல சூட்சுமங்களையும் நசித்து ஒருவர் பரிசுத்தமான நிராமய நிலையை அடைய வேண்டும் என்று கூறுகிறார்.

400. Goal verse 3

Verse 400
நாட்டமுடன் நயனமத்தில் கண்டதெல்லாம் நசித்து
நடுவணையும் அடிமுடியும் நசிப்பதுவும் நசித்து
ஆட்டமென்ற ஆகாச வாய்வுகளும் நசித்து
அடர்ந்தெழுந்த அக்கினியும் உப்பதுவும் நசித்து
தேட்டமுடன் பிரிதிவியும் ரவிமதியும் நசித்து
திருகிநின்ற சுழிமுனையும் அசபையும் நசித்து
ஓட்டமென்ற பாசமது பிறப்பும் நசித்து
ஒன்றுமத்த நிராமயமாய் ஒடுங்குவது நாட்டம்

Translation:
Crushing all that is seen by/in the eye
Crushing the middle, top and bottom termini
Crushing the dance, the akasha and vayu
Crushing the fire and the salt (uppu)
Crushing the pritvi, ravi and mathi
Crushing the whorl and the ajapa
Crusing the flow, the pasa and birth
Abiding as the niramaya, the nothingness- this is the aim

Commentary:
This verse seems to correspond to the ajna cakra.  The eye mentioned here refers to the third eye.  The yogin sees visions at the ajna when consciousness reaches there.  The top, middle and bottom correspond to ajna, the cakras in the middle and the muladhara.  Thus, the elements in the subtle body are crused.  The five elements are seen at the ajna as five different hues.  The dance is their active state.  The main nadi sushumna, ida and pingala nadi (ravi and mathi) are crushed next. Ajapa is unuttered sound.  That is the nadhantha.  The flow or running is the cause of births and deaths, the pasa.  When all these are crushed the yogin reaches the state of niramaya or purity, free from any afflictions.  Agatthiyar says that this is the goal.


இப்பாடலில் ஆக்னையில் நிகழ்வான குறிப்பிடப்படுகின்றன.  இங்குதான் ஐம்பூதங்களும் பல தத்துவங்களும் முடிவுறுகின்றன.  அவை பல காட்சிகளாக, நிறங்களாக அந்த யோகிக்குத் தென்படுகின்றன.  அதனால் இங்கு குறிப்பிடும் கண் மூன்றாவது கண்.  அதில் காணும் காட்சிகள், ஐம்பூதங்கள், அடி, நடு, முடி எனப்படும் சுழுமுனையின் மேல், நடு, கீழ் ஆகியவை நசிக்கப்படுகின்றன.  இங்கு ஆட்டம் என்பது எல்லா தத்துவங்களும் செயல்படுவதைக் குறிக்கிறது.  பஞ்ச பூதங்கள், ரவி, மதி, சுழி எனப்படும் பிங்களா, இடா மற்றும் சுழுமுனை நாடிகள், அஜபா எனப்படும் ஓசைக்கு முற்பட்ட நிலை, பிறப்பு இறப்பு என்ற ஓட்டத்தை ஏற்படுத்தும் பாசம் மற்றும் பிறப்பு ஆகியவற்றை நசிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர். 

Saturday 21 May 2016

399. Goal, verse 2

Verse 399
நாட்டமுடன் நின்ற திருகரணம் பத்ததுவும் நசித்து
நாதாந்த நாதமுடன் விந்ததுவும் நசித்து
தேட்ட மென்ற யோகமுடன் சிவயோக நசித்து
திருவான கோவில்களும் நதிகளுமே நசித்து
ஆட்டமென்ற ஆங்கார கஷத்துக்களும் நசித்து
அஞ்செழுத்து மூன்றெழுத்தும் ஒன்றும் மிக நசித்து
வாட்டமென்ற மயக்கமுடன் மகிழ்ச்சிகளும் நசித்து
வந்ததுவும் போனதுவும் நசிப்பதுவே நாட்டம்

Translation:
Crushing the ten senses that remain with the goal/aim
Crushing the nadhantha nadha and bindhu
Crushing the yogam and siva yogam
Crusing the thiru- the temples and rivers
Crusing the ahamkara and other sath
Crushing the five letters, three letters and one
Crushing the sorrow, delusions and happiness
Crushing the coming and going (birth and death) is the aim

Commentary:
This verse continues to describe the goal of the yogin engaged in the pursuit that Agatthiyar has described so far. 
The yogin wishes to crush the following:
The ten senses- the five elements and their qualities are objects for the ten senses- five senses of action and five of knowledge.  Thus, the object was crushed in the previous verse, the perceiver is crushed here.

Experiences derived through these senses are due to nadha and bindhu-sakthi and siva.  Hence the nadha and bindhu are crushed next. 

The temples and rivers are loci in the body that Agatthiyar mentioned before.  Then the sath or existence in distinct form is crushed.  The five letters are the namasivaya or omkara in five distinct states- a,u,m,nadha and bindhu. The three letters may be sivaya, a, u, m or aim, kleem, sau and the single letter is om or si.  While omkara represents the singularity, its form in the five distinct states represents manifestation. 

Namasivaya represents all the principles- five elements, five states of consciousness etc in their potential state.  So these are also removed. The three a, u,m represent various principles- siva sakthi and jiva or Isvara, Jiva and maya.   The three may be the three sakthi letters aim, kleem, sau.  The single letter is om or si that represent the state of singularity.  Agatthiyar says that they should also be crushed because there is still Me and they, the distinctions.  Then the distinctions as happiness, sorrow and delusion are crushed.  These three lead to samskara that get carried over to the next birth.  Then the process of birth and death are crushed.

முந்தைய பாடலைப் போல இதிலும் எவற்றை நசிக்கவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். 

பத்து கரணங்கள் என்பவை ஐந்து ஞானேந்திரியங்கள் ஐந்து கர்மேந்திரியங்கள்.  முந்தைய பாடலில் புலன்களால் அறியப்படும் பொருள்கள் நசிக்கப்பட்டன.  இப்பாடலில் அவ்வாறு அவற்றை அறியும் புலன் நசிக்கப்படுகின்றன.  

இந்த அனுபவங்களை என்படுத்துபவை நாதமும் பிந்துவும் அல்லது சக்தியும் சிவனும் ஆகும்.  அதனால் நாதத்தையும் பிந்துவையும் நசிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.
கோயில்கள் குளங்கள் என்பவை நம்முடலுள் இருக்கும் சக்தி மையங்கள்.  முந்தைய பாடல்களில் அகத்தியர் கோயில்களும் நதிகளும் நமது உடலில் நாபிக்குக் கீழ் உள்ளன, என்று கூறினார்.  இதனால் இவற்றையும் இவை ஏற்படுத்தும் விளைவுகளையும் நசிக்கவேண்டும் என்கிறார் இங்கு.

இவற்றை அடுத்து அகங்காரம் முதலிய சத்தை நசிக்கவேண்டும் என்றும் ஐந்து, மூன்று ஒரு எழுத்துக்களை நசிக்கவேண்டும் என்றும் கூறுகிறார் அகத்தியர்.
ஐந்து எழுத்துக்கள் நமசிவாய அல்லது அ உ ம நாதம் பிந்து என்று ஐந்து நிலைகளில் இருக்கும் பிரணவமாகும்.  நமசிவாய என்ற ஐந்தெழுத்துக்கள் ஐந்து பூதங்களை, உணர்வு நிலைகளை, உடல் பகுதிகளை இன்னும் பிற தத்துவங்களைக் குறிக்கின்றன என்று முன்னம் பார்த்தோம்.  இவ்வாறு இந்த ஐந்தெழுத்துக்கள் வெளிப்பாடு நிலையை, அவை தோன்றுவதற்கு முன் இருக்கும் நிலையைக் குறிக்கின்றன.  மூன்று என்பது அ உ ம அல்லது ஐம் க்லீம் சௌ என்ற சக்தி பீஜங்களைக் குறிக்கலாம்.  ஒன்று என்பது ஓம் அல்லது சி என்னும் ஒருமை நிலையைக் குறிக்கும்.  இவற்றை நசிக்க வேண்டும் என்று கூறுவதனால் தான் மற்றும் அது என்னும் இருமை நிலையை அழிக்கவேண்டும் என்று பொருள் கொள்ளவேண்டும். 


இவற்றை அடுத்து மகிழ்ச்சி, துன்பம், மயக்கம் என்பவற்றை ஒழிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.  இந்த உணர்ச்சிகளே சம்ஸ்காரங்களாக அடுத்த பிறவிகளிலும் தொடருகின்றன.  இவ்வாறு வருவது போவது எனப்படும் பிறப்பு இறப்புக்களையும் நசிப்பதே நாட்டம் அல்லது குறிக்கோள் என்கிறார் அகத்தியர்.

Friday 20 May 2016

398. Goal, verse 1

Verse 398
நாட்டம்
அங்கமுடன் நின்ற பஞ்ச பூதமது நசித்து
அணுகி நின்ற பஞ்சமலம் ஆதாரம் நசித்து
சங்கையுள்ள சிவகளைஅம்புவியாட நசித்து
சாக்கிரம வித்தையுட சராசரங்கள் நசித்து
பொங்கு புகழெழுவகையும் பூசை பல நசித்து
போக்கான சரிதை முதல் ஞானவரை நசித்து
நங்கை முதல் போதவரை இருவளியும் நசித்து
நானென்ற சொல்லதனை நசிப்பதுவே நாட்டம்

Translation:
Interest
Crushing the five elements that remain with their parts
Crushing the five innate impurities and adhara
Crushing the sivakala, the beautiful world
Crushing the states of conscsiouness including jagrit and the worlds created
Crushing the glorious seven types and puja
Crushing the four methods, charya and others
Crushing the lady, mount of bodham and two fires
The goal is to crush the word, “self”.

Commentary:
From this verse onwards Agatthiyar is describing the merging or laya of various principles to reach the supreme state. 
The five elements and their five qualities, touch, taste, hearing, smell and sight bring about sensual experiences.  These are the ultimately cause distinctions.  Hence, they are to be crushed first.

While the events recorded by the senses are the same that appear as pleasurable or painful to a person depending on his innate impurities or mala.  For example a music may be pleasurable to one but horrible for another. As the five mala- aanava, karma, maya, mayeya and tirodhayi determine the experience of an event they must be crushed next.  They cause karma. One’s reaction to an event causes karma. 

The next to crushed is the experience of external world.  It is called siva kaLai ambhuvi as it is experienced by sivam or consciousness. As we saw before the earth appears as such because of our mala.

The external world is experienced in the wakeful state of consciousness.  However, a person remains in other states of consciousness.  They are dream state, deep sleep, turya and turyatheetha.  These five states correspond to distinct experiences.  They are also not the ultimate state and so should be crushed.

The states are experienced when consciousness is present at different cakras. For example turyathetha is experienced at muladhara.  The souls are classified into seven forms depending on where they have their consciousness stationed.  Agathiyar in his ezhuvagai thottram describes this elaborately.  Thus, the perception and experiences of the soul differs depending on their form.  Hence, the nature of the lifeform that one is in- whether it is celestials, humans, crawlers, birds, aquatic, insects or plants- should be crushed next.  The seven may also mean the seven lokha that include bhu, bhuvar etc.  These are six states that a soul goes through to reach the satya lokha or the state of Parabrahman.   

Then Agatthiyar talks about the methods for ascent of consciousness.  The puja or ritual worships and the four steps, charya, kriya, yoga and jnana should be crushed.

The next to crush is the lady or kundalini. Then the bodham, the two types of prana- prapancha prana and the prana within the body or inhalation and exhalation are to be crushed and ultimately the I sense should be removed.

From the above verse we see that Agatthiyar is listing the ascending order of distinction-less state starting from completely gross- the elements and the sensual world to the supreme subtle I-ness of ahamkara.  Thus, Agatthiyar is indicating that the supreme state is “becoming that” not knowing “that” or experiencing “that”.

வாசியோகத்தை இதுவரை விளக்கிய அகத்தியர் இனி எவற்றை விடவேண்டும் என்று பட்டியலிடுகிறார்.  உலகைப் பலவாகக் காணச்செய்பவை ஐம்பூதங்களும் அவற்றின் தன்மைகளான ஸ்பர்சம் முதலியவையும்.  ஆகவே அவற்றை முதலில் நசிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர். 

இவ்வாறு வெளியில் தோன்றும் ஒரு தோற்றத்தை நன்மை தீமை, விருப்பு வெறுப்பு என்று உணரச் செய்பவை நமது மலங்கள்.  ஒரே நிகழ்ச்சி ஒருவருக்கு இன்பமானதாகவும் மற்றொருவருக்குத் துன்பமானதாகவும் தோன்றுவதற்குக் காரணம் அவரிடம் எந்த மலம் அதிகமாக இருக்கிறது என்பதைப் பொருத்தது.  அதனால் ஐந்து மலங்களான ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்ற மலங்களை அடுத்து நசிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.
இவற்றை அடுத்து நசிக்கப்படவேண்டியவை வெளியுலகம் என்று நாம் கருதும் அனுபவங்களை.  இவை விழிப்புணர்வால் அனுபவிக்கப்படுகின்றன.  அதையே அகத்தியர் சிவகளை அம்புவி என்கிறார்.

உலக  அனுபவங்களை ஒருவர் விழிப்பு நிலையில் அனுபவிக்கின்றார்.  ஆனால் இந்த நிலையைத் தவிர அவர் கனவு, ஆழ் உறக்கம், துரியம், துரியாதீதம் என்ற ஐந்து உணர்வு நிலைகளையும் அனுபவிக்கிறார்.  அதனால் சாக்கிரம் முதலான நிலைகளை நசிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.

இந்த உணர்வு நிலைகள் சூட்சும உடலில் உள்ள எந்த சக்கரத்தில் ஒருவரது உணர்வு இருக்கிறது என்பதைப் பொறுத்தவை.  இதைப் பொருத்து அகத்தியர் உயிர்களை ஏழு வகைகளாகக் கூறுகிறார்.  அந்த நிலைகளைப் பொருத்து ஒருவரது குணங்கள் இருக்கின்றன.  அகத்தியர், எழுவகைத் தோற்றம் என்ற நூலில் ஏழு வகையான உயிரினங்கள் உண்மையில் பலவித மக்கள் என்பதைக் கூறுகிறார்.  அதனால் இந்த குணநிலைகளான ஏழு வித வாழ்க்கைகளை- தேவர், மனிதர், ஊர்வன, பறப்பன, நீரில் வாழ்வன, பூச்சிகள், தாவரங்கள் என்பவற்றை நசிக்கவேண்டும். 

இந்த ஏழு என்பவை ஏழு உலகங்கள் எனப்படும் ஏழு உணர்வு நிலைகளைக் குறிக்கும்.  இவற்றைக் கடந்தே ஒரு உயிர் சத்யலோகம் எனப்படும் பரபிரம்மா நிலையை அடைகிறது.

இதனை அடுத்து வழிமுறைகளைப் பேசுகிறார் அகத்தியர்.  பூசை, சரியை, கிரியை, யோகம் ஞானம் என்ற நான்கு படிகளையும் நசிக்கவேண்டும்.  இந்த படிகளால் வரும் குண்டலினி மாது அல்லது சக்தி நிலை, போத நிலை, இரு வளிகள் எனப்படும் பிரபஞ்ச பிராணன், மற்றும் உடலில் உள்ள பிராணன் அல்லது உள்மூச்சு, வெளி மூச்சு என்பவற்றையும் முடிவில் நான் எனப்படும் அகங்காரத்தையும் நசிப்பதே நாட்டம் என்று இப்பாடலை முடிக்கிறார் அகத்தியர்.


இதனால் நாம் அறிவது என்னவென்றால் நமது உண்மையான ஒருமை நிலையைப் பலவாகக் காட்டும் வஸ்துக்களை நசித்து ஒருமை நிலையை அடைவதே நாட்டம் என்று அகத்தியர் கூறுகிறார் என்பது புரிகிறது.  “அதை” அனுபவிப்பது, தெரிந்து கொள்வது என்ற நிலை மாறி நாம் “அது”வாகவே மாறவேண்டும் என்று அவர் கூறுகிறார்.