Thursday 19 May 2016

397. Pancha gana deekshai

Verse 397
பண்ணப்பா பஞ்சகண தீக்ஷை மார்க்கம்
பாலகனே தானறிந்து பதிமேற்கொண்டு
விண்ணப்பா தானறிந்து வாசியாலே
வேதாந்த முச்சுடருக்கு அப்பால் ஏகி
உண்ணப்பா தன்னறிவால் மனக்கண் கொண்டு
உகமுடிந்த பட்டணத்தின் உறுதி பாரு
கண்ணப்பா தானறிந்து தன்னைப் பார்க்க
கசடறவே தான் சிகர அங்கம் பாரே

Translation:
Perform son, the pancha gana deeksha margam
Young boy, knowing the locus,
Knowing the space, through vaasi
Going beyond the vedantic triple flame
Consume son, through awareness with the mental eye,
See the definitude of the town where time has ended,
Knowing the eye, seeing the self
See the part of sikaram, without any fault.

Commentary:
We already saw about pancha gana deeksha in verses 201, 202, and 203.  Pancha gana or five entities are siva, sakthi, manas, consciousness and vaasi or breath infused with prana.  Pancha gana deeksha involves these five entities that are the components of the vaasi yogam or kundalini yogam. Pancha gana deeksha is also called vakaara deeksha.  This may be because the primary entity with which vaasi yogam is started are breath and the prana that rides on the breath.  Breath represents the air principle, the vakaara.  That may be the reason for calling vakaara deeksha.

During kundalini yoga, the nadha-sakthi, bindhu-sivam, kala-vaalai, manas and consciousness are merged and taken beyond the sahasrara, to the dvadasantha which is in space.  Thus this spot is beyond the triple flame of agni, surya and chandra that represent the entire human body upto sahasrara.  The divine nectar flows from the dvadasantha.  This is the town beyond time.  The yogin consumes the nectar with awareness and the mind.  This helps him create the mahakaarana sareera, the sikaara.  It grants him the third eye or the awakening of the ajna.


பஞ்ச கணங்கள் என்பவை சக்தி, சிவன், மனம், உணர்வு மற்றும் பிராணனை சுமந்து செல்லும் மூச்சு.  இந்த ஐந்தையும் சேர்ப்பதே பஞ்சகணதீட்சை எனப்படுகிறது. பஞ்சகண தீட்சை வகார தீட்சை என்றும் அழைக்கப்படுகிறது.  இதைப் பற்றி பாடல்கள் 201, 202 மற்றும் 203ல் பார்த்தோம்.  இந்த யோகத்தில் சிவன் அல்லது பிந்து, சக்தி அல்லது நாதம், மனம், உணர்வு மற்றும் பிராணன் பயணிக்கும் மூச்சு என்ற ஐந்தும் ஒவ்வொரு சக்கரங்களிலும் சேர்க்கப்பட்டு சகஸ்ராரத்துக்குச் சென்று அங்கு ஒன்றாகி உடலைவிட்டு வெளியே விண் எனப்படும் வெளியில் இருக்கும் தளம் அல்லது பதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.  அப்போது அமிர்த்தம் சுரக்க ஆரம்பித்து உடலுக்குள் நுழைகிறது.  இந்த துவாதசாந்தம் முச்சுடர் எனப்படும் அக்னி, சூரியன் மற்றும் சந்திர மண்டலங்களைக் கடந்து உள்ளது.  இந்த துவாதசாந்ததிலிருந்து பெறப்படும் அமிர்தம் மனம் மற்றும் உணர்வினால் உடலுக்குள் கொண்டுவரப்பட்டு சிகாரம் எனப்படும் மகாகாரண சரீரம் உருவாக பயன்படுத்தப்படுகிறது.  இதுவே வாசி யோகம்-சிவயோகம்.  இவையனைத்தும் காற்றுத் தத்துவத்தைக் குறிக்கும் மூச்சினால் நிகழ்த்தப்படுகிறது.  பிராணன் மூச்சையே வாகனமாகக் கொண்டு பயணிக்கிறது.  அதனால் இது காற்றுத் தத்துவத்தைக் குறிக்கும் வகாரத்தினால் வகார தீட்சை என்று அழைக்கபடுகிறதோ என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment