Saturday 7 May 2016

386. "kal paashaanam"

Verse 386
காணப்பா பூரணமாய் அண்டச்சத்து
கண்டவர்கள் விண்டதில்லை கற்பாஷாணம்
ஊணப்பா உறுதியுள்ள கற்பாஷாணம்
உண்மையுள்ள வீரமடா லிங்கந் தாரம்
பூணப்பா பிரிதிவியும் அப்புஞ் சேர்த்துப்
புத்தியுடன் ஆறுமொன்றாய்க் கல்வத்திட்டு
தோணப்பா மூன்று சுன்னச் செயநீராலே
சுத்தமுடன் தானரைத்து சுத்தம் பண்ணே

Translation:
See son, as poornam, the essence of the universe
Those who have seen it do not describe it, the stone paashaanam,
Plant is son, the firm, stone paashaanam
The truthful veeram, lingam, kaaram (?)
Adorn son, earth and water mixed together
Along with buddhi, the six added together in a mortar
With the three sunnam jayaneer
Grind it and purify it.

Commentary:
For details on paashaanam please see:


In this verse Agatthiyar is describing the state attained when the triple sunnam- prana, mind and consciousness along with the jaya neer or the amrit are mixed together and made to ascend through the six cakras to reach the ajna which also called the stony cave or kal guhai.  Here Agatthiyar calls it kal paashaanam, a stony medicinal preparation.  Purification mentioned in this verse is making oneself free of the mala so that the prana is made into vaasi or life force, manas is brought under control and consciousness is in turya state.

பாஷாணம் என்றால் என்ன என்பதை மேற்கூறியுள்ள தளத்தில் படிக்கவும்.  இப்பாடலில் அகத்தியர் வாசியோகத்தின் மூலம் ஆக்ஞையை அடையும் நிலையை விளக்குகிறார்.  சித்தர்கள் ஆக்ஞையை கற்குகை என்று அழைக்கின்றனர்.  இங்கு அகத்தியர் கற்பாஷாணம் என்கிறார்.  மூன்று சுன்னந்தையும்-பிராணன், மனம், உணர்வையும், ஜெயநீர் சேர்த்து-அமிர்தத்தைச் சேர்த்து, ஆறும் ஒன்றாக ஆறு சக்கரங்கள் குறிக்கும் தத்துவங்களும் ஒன்றாகுமாறு அரைத்துத் தூய்மைபடுத்த வேண்டும்- மலமறுக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.  இவ்வாறு பிராணன் வாசியாகி மனம் கட்டுப்பட்டு உணர்வு துரிய நிலையை அடைந்து ஆறு சக்கரங்களூடாகவும் பயணிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர். அதுவே கல்பாஷாணம்.


கல் என்பது இறுகிய நிலையைக் குறிக்கிறது.  இதைத்தான் “கட்டுவது” என்று சித்தர்கள் குறிக்கின்றனர்.

No comments:

Post a Comment