Saturday 31 December 2016

516. Darkness

Verse 516
பாரப்பா புகுந்தயிடம் பத்திக்கொண்டு
பதிவாக வந்தயிடம் வெளிதான் மைந்தா
நேரப்பா வெளியொளிதான் எங்கேஎன்றால்
நிசமான ஆகாசம் இருளாய்ப் போச்சு
சேரப்பா செனித்ததுவும் இருளிலாச்சு
செத்திறந்து போனதுவும் இருளிலாச்சு
காரப்பா கண்டதெல்லாம் இருள்தானாச்சு
கணங்கண்ட காரியங்கள் கனவாய்ப் போச்சே

Translation:
See son, holding the place entered with devotion
The place arrived is the space.
If questioned, “Where is the space light?”
The truth, the akasha became darkness
It was in the darkness that birth occurred
The death and dissolution occurred in darkness
See son, all that was seen became verily darkness
The actions of the principles/types became a dream.

Commentary:
Agatthiyar describes the darkness here.  He says that everything is born in the darkness.  Everything dissolves in darkness too.  Even the space light, the akasha is the darkness.  When the soul reaches this darkness all the actions stop, they become a dream and not a reality.

Science talks about dark matter and dark energy.  The darkness that Agatthiyar describes seems to be similar to these concepts.


இப்பாடலில் இருளை விளக்குகிறார் அகத்தியர்.  பிறப்பும் இறப்பும் இந்த இருளில்தான் நடைபெறுகின்றன.  ஒளியும் வெளியும் பிறப்பதுவும் இறப்பதுவும் இதனுள்தான்.  இந்த இருளை ஒருவர் அடையும்போது எல்லா செயல்களும் கனவாகிவிடும்.  இதுவே ஆதிநிலை.


அறிவியல் இருண்ட சக்தி, இருண்ட வஸ்து என்று உலகின் செயல்பாட்டை விளக்கும்போது இரு தத்துவங்களைக் குறிப்பிடுகிறது.  அகத்தியர் கூறும் இருள் இவற்றைப் போல உள்ளது. 

Friday 30 December 2016

515. Time, space, speech, Kali the darkspace

Verse 515
ஞானம்
ஆச்சப்பா பூரணமாய் நின்ற காளி
அரிதரிது காணுதற்கு அருமையாகும்
பேச்சப்பா பெருகி நின்ற இருளுக்குள்ளே
பிறந்ததடா ரவிமதியும் ஒளியாய் நின்று
காச்சப்பா ஒளியறிந்து வழியைக் கண்டேன்
கண்டவழி ஒளியதுவே கலந்துசென்று
பேச்சப்பா இருளொளியில் அலைந்துகொண்டு
போன இடம் வந்தயிடம் புகுந்துபாரே
Translation
Jnana

The Kali who remained as poornam
Rare, rare, it is wonderful to see
Speech, within the greatly accumulated darkness
It emerged as sun, moon and light
Remaining as light.  Knowing the light, I saw the path
In the path that was seen, travelling merging, the light
With the speech roaming in the dark space
Enter the place of arrival and the place gone/departed

Commentary:
Agatthiyar seems to be talking about time.  He calls her Kali.  She is the darkness from which emerged the lights- the sun and the moon.  Knowing about this light and travelling with the light in the path revealed by it, one goes to the space of darkness.  It is from this space that souls emerge as life forms.  They abide in this space in the end.

The concept of time is closely related to space.  First, there is a movement, an event.  When an event occurs it needs a space where it occurs.  Thus, the primordial stir creates a space where it occurs.  When it occurs there is a time before the event and after the event.  Thus, time is born.  From this we can see that both, time and space are born from the Lord’s spanda or first stir.  Similarly, darkness contains everything within it.  Science explains the concept of color as the rays of light that were not absorbed.  If everything is absorbed, contained within then it appears as black or darkness.  From this darkness emerges light, the rays that were not absorbed.  Thus, the sun and the moon the two light bodies emerge from the primary darkness.  Speech or sound is produced when there is a movement.  Similarly, speech produces movement.  These two abide in the silence which is the primary darkness.   Sound also occurs in space as it is closely linked to movement.  Thus, from the primary darkness emerges lifeforms which are manifestations of various concepts.  In the end the lifeforms abide in the darkness.  Agatthiyar calls the darkness as “pona idam vandha idam”.

The darkness may also represent awareness.  In the primary energy state of para, there is no awareness.  Thoughts emerge as the energy moves through madhyama, pashyanthi and vaikari.  Thus, the primary darkness is the source and the terminus of speech, awareness.   This verse also means the prana in a sense.  The sun and the moon are the pingala and ida.  The darkness is the state where they merge together and remain in sushumna. 

இப்பாடலில் அகத்தியர் காலத்தைப் பற்றியும் ஆதி இருளைப் பற்றியும் கூறுகிறார்.  இந்த இருளை, கருமையை அவர் காளி என்று அழைக்கிறார்.  இந்த இருளிலிருந்து ஒளிகளான சூரியனும் சந்திரனும் வெளிவந்தனர்.  இவ்வாறு வெளி வந்த ஒளியையும் இருளையும் பற்றி அறிந்துகொண்டு அந்த ஒளியுடன் பயணித்தால் அது எழுந்த ஆதி இடமான இருள் வெளியை அடையலாம்.  இந்த வெளியிலிருந்துதான் உயிர்கள் வெளிப்பட்டன, அவை இங்கேதான் முடிவுறுகின்றன.


காலம் என்பது இடம் அல்லது வெளியுடன் தொடர்புடையது.  முதலில் பரம்பொருளில் ஒரு அசைவு ஏற்பட்டது.  அந்த செயல் ஒரு வெளியில் நடைபெறுகிறது.  இவ்வாறு ஸ்பந்தம் என்னும் அசைவு வெளியை உருவாக்குகிறது.  இந்த அசைவு ஒரு ஓசையை ஏற்படுத்துகிறது.  இதேபோல் ஓசை ஒரு அசைவை ஏற்படுத்துகிறது.  இவை ஒரு வெளியில் நடக்கின்றன.  இருள் என்பது எல்லாவற்றையும் உள்ளடக்கியது.  ஒரு நிறம் என்பது உள்வாங்காத ஒளிக்கதிரின் நிறத்தைக் குறிக்கிறது.  எல்லாவற்றையும் உள்ளடக்கியபோது அது இருளாகத் தோன்றுகிறது.  இந்த இருளிலிருந்து சூரியன் சநதிரன் என்ற ஒளிகள் வெளிவிடப்பட்டன.  இதிலிருந்துதான் வாக்கு என்னும் பேச்சு வெளிப்பட்டது.  சப்தத்தின் ஆதி நிலை என்பது பரா எனப்படும் சக்தி நிலை. இதிலிருந்து பஷ்யந்தி, மத்யமா, வைகரி என்று சத்தம் வெளிப்படுகிறது.  இவ்வாறு சத்தத்தின் ஆதி நிலை இருள் வெளியாகிறது.  இந்த இருள் வெளியிலிருந்தே உயிர்கள் தோன்றுகின்றன.  அங்கேதான் அவை மறைகின்றன.  இந்த இருள் வெளியை ஒருவர் ஒளியைப் பற்றிக்கொண்டு பயணித்தால் அடையலாம் என்கிறார் அகத்தியர்.  இந்த வெளியை அவர் போன இடம் வந்த இடம் என்கிறார்.

இங்கு இருள் எனப்படுவது பிராணன் சுழுமுனையில் நிற்பதைக் குறிக்கிறது.  அங்கிருந்து சூரியனும் சந்திரனும் வெளிப்படுவது என்பது பிராணன் பிங்களை இடை என்ற நாடிகளில் பயணிப்பதை குறிக்கிறது.  இவை இரண்டும் ஒன்றாக இருப்பது ஆக்னையில்.  அதனால்தான் ஆக்ஞையை சித்தர்கள் கருப்பு, இருட்டுக் குகை என்று அழைக்கின்றனர்.  இவ்வாறு வந்த இடம் போன இடம் என்பது ஆக்னையைக் குறிக்கிறது.  இங்கு காணும் கருமையே காளி, நேரம், ஆதி இருள்வெளி.

514. Self

Verse 514
எல்லாம் தான்தான்
சோதிஎன்ற அக்கினியே தான்தானாகும்
துலங்குகின்ற முச்சுடரும் தான்தானாகும்
ஆதியென்றும் அந்தமென்றும் தான்தானாகும்
அடங்கிநின்ற சிவயோகந் தான்தானாகும்
சாதிஎன்ற சமரசமுந் தான்தானாகும்
சச்சுதானந்த பூரணமும் தான்தானாகும்
நீதியுடன் தன்னறிவாய்ப் பார்க்கும்போது
நிறைந்துநின்ற பூரணமாய்க் காணலாச்சே

Translation
Everything is verily self

The Jyothi, the fire is self
The three flames is verily self
The origin and terminus are verily self
The sivayogam that remains abiding is verily self
The samarasa of the categories is verily self
The satchidananda poornam is verily self
While seeing it as the awareness of the self, lawfully
It appeared as the fully complete poornam

Commentary:
Agatthiyar defines self in this verse.  The effulgence, the fire of kundalini, the triple flames of sun moon and fire, the beginning and end are all the self.  The sivayogam or remaining in harmony with sivam or supreme consciousness is self.  Samarasa or equivalence all categories, the sat chit Ananda are all self.  Thus, the self, is the poornam.


தான் என்றால் என்ன என்று அகத்தியர் இப்பாடலில் விளக்குகிறார்.  சோதி, குண்டலினி அக்னி, சூரியன் சந்திரன் அக்னி என்னும் முத்தீ, ஆதி, அந்தம் சிவயோகம், ஜீவன் ஈஸ்வரன் என்ற ஜாதிகளின் சமரசம், சத்சிதானந்த பூரணம் எல்லாம் தானாகும் என்கிறார் அவர்.  தன்னைப் பற்றிய அறிவாகப் பார்க்கும்போது தான் என்பது பூரணம் என்று புலப்படுகிறது என்கிறார் அகத்தியர்.

Monday 26 December 2016

513. The effulgence is the agni

Verse 513
தேறுவது சூக்ஷாதி சூக்ஷமப்பா
திருவான சூக்ஷமதை சொல்லக்கேளு
நேருவது கலையறிந்து சுழினைக் கேற்றி
நெற்றிஎன்ற மத்தியடா மகாரமீதில்
சாருவது தெளிவெனவே சார்ந்துகொண்டால்
தன்மயமாம் வாசிதான் தயவாய் நிற்கும்
ஆருவது ஆதாரம் தன்னில்
அடங்கிநின்ற அக்கினியே சோதி காணே

Translation:
Become expert of the subtlest of the subtle
Listen to me talk about the thiru the subtlety
Knowing the kala, raising it to ajna
In the middle of the forehead, over the makaara
If you remain associated with it
The tanmaya, the vasi will remain humbly
In the six adhara
The fire that remained abiding is the effulgence, Jyothi.

Commentary:
When the three kala, Chandra, surya and agni are brought together in the sushumna nadi and raised up to the middle of the forehead, or brow middle, the ajna then the breath will abide in kumbaka.  The fire will appear as effulgence.  Agatthiyar calls this site as the makaara and says that it is the subtlest of the subtle.


சந்திரன், சூரியன் மற்றும் அக்னி கலைகளை என்றாக்கி அவற்றை நெற்றி மத்தியிலுள்ள ஆக்ஞைக்கு ஏற்றினால் மூச்சான வாசி அடங்கி கும்பகத்தில் நிற்கும்.  இவ்வாறு ஆறு ஆதாரங்களில் பாயும் அக்னியே ஆக்னையில் சோதியாகத் தெரியும் என்று அகத்தியர் கூறுகிறார். ஆக்ஞையை மகாரம் என்று அழைக்கும் அகத்தியர் இது சூட்சாதி சூட்சம் என்று கூறுகிறார்.

Sunday 25 December 2016

512. Nature of the jyothi seen

Verse 512
நாட்டமென்ற நயனமடா மைந்தாகேளு
நன்மையுள்ள இடதுகலை சந்திரனாச்சு
தேட்ட மென்ற வலதுகலை சூரியனாச்சு
சிவசிவா நடுமய்யஞ் சுழினையாச்சு
வாட்டமென்ற இவையெல்லாம் ஒன்றாய்ச்சேர்ந்து
வண்மையுடன் ஒன்றாகி நின்றுகொண்டு
கூட்டமென்ற அக்கினிதான் சோதியாச்சு
குருவருளால் முச்சுடரை கண்டு தேறே

Translation:
The attention, the eye, hear about it son,
The beneficial idakalai is Chandra
The seeking right kala is surya
Siva siva the central one is sushumna
Joining all these together
Making them one and remaining in that state
The agni became Jyothi
See the triple flame, by guru’s grace and become an expert.

Commentary:
Agatthiyar explains the three kalas here.  The ida kala is called Chandra kala.  The pingala or the right kala is the surya kala.  The middle, sushumna is the agni kala.  Agatthiyar says that these three kala are harmonized.  Then the agni kala will become the flame perceived at ajna.  Thus the three flames as surya, Chandra and agni.  These are perceived at the ajna.


சந்திர கலை, சூரிய கலை, அக்னி கலை என்ற மூன்று கலைகளை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர்.  இடகலை என்பது சந்திரன், வலது கலை அல்லது பிங்கலை என்பது சூரியன்.  நடுவில் ஓடும் சுழுமுனை என்பது அக்னி கலை.  இந்த மூன்று கலைகளையும் ஒன்றாக்கினால் அக்னிகலை ஜோதியாகிறதுஅதையே ஒரு யோகி ஆக்னையில் பார்க்கிறார்.  இதற்கு ஒருவர் குருவின் வார்த்தைகளை மறக்காமல் இவ்வழியில் முன்னேறவேண்டும் என்றும் அகத்தியர் கூறுகிறார்.

511. Sivayoga will remain firmly

Verse 511
ஒன்றாகத்தான் கொடுத்து உருக்கி மைந்தா
உண்மையுடன் பத்துக்கு ஒன்று வெள்ளி
நன்றாகத் தான் கொடுத்து உருக்கிப்பாரு
நல்ல வெள்ளி மாத்ததிகம் நலமாய்க்காணும்
நின்றாடும் பொன் வெள்ளி கண்டாயானால்
நின்மனது அலையாது யோகத்தேகும்
குன்றாது சிவயோகம் கூர்மையாகும்
குருவசனம் மறவாமல் குறிகண்டாடே

Translation:
Adding them together and melting, son,
Ten to one silver
Adding it well, melting it, See
The good silver with high quality will be be seen.
If you see the dancing silver and gold
You mind will become steady, it will proceed in yoga
The sivayogam will become sharp
Without forgetting the words of the guru, see the sign and dance.

Commentary:
The gold and silver seem to be ida and pingala or the surya and Chandra mandala.  Silver also means the rasa.  In that state the mind will remain in sivayoga without wavering.  Agatthiyar advises us to remember guru’s words and proceed further.


இப்பாடலில் தங்கம் வெள்ளி என்பவை இடா பிங்களா நாடிகளாகவோ சந்திர சூரிய மண்டலங்களாகவோ இருக்கலாம்.  வெள்ளி என்பது ரசம் என்றும் பொருள்படும்.  மாத்ததிகமான வெள்ளி கிட்டும் என்பது தூய்மை நிலையைக் குறிக்கும்.  இந்த நிலையில் சிவயோகம் நிலைபெற்று இருக்கும்.  இதற்கு குருவின் வார்த்தைகளை மறக்காமல் நின்று ஆடவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.

Wednesday 21 December 2016

510. Paashaana kattu

Verse 510
நில்லென்ற நிலைதனிலே நின்றுகொண்டு
நீ மகனே இலுப்பையுடன் பாலை வாங்கி
செல்லென்ற பாஷாணக் கட்டி மேலே
செம்மையுடன் தான் தடவி மைந்தா கேளு
உல்லென்ற காயரைத்து பதமறிந்து மைந்தா
உண்மையுடன் புடம்போட உருகி நிற்கும்
சொல்லொன்றும் தவறாமல் தாம்பூரத்தில்
சுத்தமுடன் ஈந்திடுவாய் பத்துக்கொன்று

Translation:
Remaining the state
You son! Collecing the milk of mahua tree (iluppai maram)
Over the poison solification (sel, the paashaana kattu)
Spreading it, son, listen
Grinding the seed of ul
If it heated in flame it will melt
Without missing a word, on copper
You will offer ten to one/killing ten,

Commentary:
This verse is difficult to explain.  Let us see if we ca relate it to the principles we have seen so far.  Illuppai maram- i or the kamakala of creation.  Se- s-e. e represents the union of maya and isvara in all entities.  ca- mind.  Pa- purusha, shaa- rajas. U is ukara or sakti.  Thus this verse may mean bringing together the Lord’s desire to manifest, the mind, the maya and isvara, along with Sakthi.  The verse says “thaam pooram” which means consciousness.  One to ten may be prana, one of the ten breaths.


இப்பாடலின் பொருள் நேரிடையாக இல்லை.  நாம் இதுவரை பார்த்தவற்றைக் கொண்டு இதைப் புரிந்துகொள்ள முயலுவோம்.  இலுப்பை- இகாரம் இறைவனின் காமகலா அல்லது படைக்கவேண்டும் என்ற சங்கல்ப சக்தியைக் குறிக்கும்.  செல்- செ என்பது ஸ, எ என்று பிரித்து மனத்தையும் மாயையும் ஈசனும் எல்லாவற்றிலும் சேர்ந்திருப்பதைக் குறிக்கும்.  பாஷாணம்- ப- புருஷன், ஷ- ரஜோ குணம்.  உல்- உகாரம் சக்தி, குண்டலினி சக்தி.  இவற்றை “தாம் பூரத்தில்” பூச வேண்டும்என்கிறார் அகத்தியர். தாம் பூரம் என்பது உணர்வைக் குறிப்பதாகத் தோன்றுகிறது.  இவற்றை பத்துக்கொன்று கொடுக்கவேண்டும்- கும்பகம் அல்லது பிராணன்.

Monday 19 December 2016

509. Veeram, the poorna chandran

Verse 509
பாரடா எரித்துமிக இறக்கிவைத்து
பத்தியுடன் குளுந்தபின்பு எடுத்துப் பாரு
நேரடா வீரமதை என்ன சொல்வேன்
நிசமான பூரண சந்திரனைப் போலே
பேரடா பெற்றதொரு வீரமாச்சு
பிலமான வீரமதை யார்தான் காண்பார்
காரடா சற்குருவைத் தொழுது போற்றி
கனமான சிவா யோகக் கருத்தில் நில்லே

Translation:
See son, burning it well
See it with devotion after it cools down
How do I describe the veeram
Like the perfectly full moon
It became the veeram
Who will see the locus, the veeram
Praising the sathguru,
Remain in the siva yogam, the heavy one.

Commentary:
The veeram he mentions here is the light that occurs at the ajna.  It is the bilam or locus.  It will glow like the fullmoon, the poorna chandran.  Remaining perceiving this is sivayogam.  It is possible to remain in this state only by praising sathguru.


இங்கு வீரம் எனப்படுவது ஆக்ஞையை.  அங்கு இந்த யோகத்தினால் தோன்றும் தண்ணென்ற ஒளியே பூரண சந்திரன்.  இதைப் பார்க்க ஒருவர் சத்குருவைப் போற்றி சிவயோகத்தில் நிற்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.

508. Four jaamam

Verse 508

சேர்த்து மிகத்தான் பொடித்து குப்பிக்கேற்றி
தீர்க்கமுடன் மண் சீலை மூன்றுஞ் செய்து
பார்த்திபனே குப்பி மூக்களவு மட்டும்
பதிவாக மண்விட்டு அடுப்பில் வைத்து
காத்து நீ எடுத்து அதை கனமாய் வைத்தால்
கண்மணியே வீர வைப்பு என்ன சொல்வேன்
நாத்துமிகப் போகாமல் நாலு சாமம்
நன்றாகத் தீ மூட்டி எரித்துப் பாரே

Translation:
Powdering them, raising them to the crucible
Performing the clay seal three times
The supreme one! filling upto the crucible’s nose
Add the sand and place it on the stove
Protecting it, if you take it
The beloved one!  I will tell you veera vaippu
For four time measures so that it does not lose its heat
Light the fire well, burn it and see.

Commentary:
Add the list of things that Agatthiyar listed in the previous verse he says that it should be covered with clay (man seelai) three measures (these are counts in pudam or slow heat processing) the mixture is burnt for four time counts.   The term “naalu jaamam” is a count for prayanayama. 
மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலம் உண்ட கண்டன்ஆணை அம்மைஆணை உண்மையே

If the effulgence that emerged in the main nadi is sought for four time measures, one will become a youth one can become Parabrahmam.


முற்பாடலில் கூறிய பொருட்களை மூன்று மண் சீலை செய்தி நான்கு ஜாமம் எரித்துப் பார்க்கவேண்டும் என்று கூறுகிறார் அகத்தியர்.  நாலு ஜாமம் என்பது பிராணாயாம கால அளவு ஆகும். இதை சிவவாக்கியர் பாடல் 69 ல் கூறியுள்ளதை மேலே பார்க்கவும். மூலநாடியில் எழுந்த ஜோதியை நான்கு நாழி உள்ளே நாடி இருந்தால் பாலராகலாம் பரபிரம்மமாகக் கூட மாறலாம் என்று சிவவாக்கியர் கூறுவதும் இந்தக் கருத்தில்தான்.

Saturday 17 December 2016

507. Some of the common terms for Siddha medical products

Verse 507
வீர வைப்பு
பாரப்பா சவ்வீர வைப்பு சொல்வேன்
பதிவான நவாச்சாரம் அன்னபேதி
சாரப்பா கல்லுப்பும் சீனிக்காரம்
சங்கையுள்ள வெடியுப்பு துரிசு வெள்ளை
காரப்பா சாதிலிங்கங் கெவுரித்துத்தம்
கனமான தாளகமும் எவச்சாரந்தான்
நேரப்பா வகைக்கி ஒரு பலமுங்கூட்டி
இதமாக மடைக்கி அரை ரசமுஞ்சேரே

Translation:
Veera vaippu
I will tell you about the savveera vaippu
The navaachaaram, annabedhi (air)
The rock salt (earth), seenikkaaram (rudran-fire)
The vediyuppu (fire), thurisu vellai (air)
Jatilingam, gevuri thuttham (air)
Thaalakam, evacchaaram
Add all these one palam
Mix them together and add half measure rasam (consciousness).

Commentary:
As usual we are not going through the actual medicinal products.  Philosophically they refer to the muladhara, manipuraka, prana, mind and consciousness.  Thus, they correspond to the ascent of kundalini.  The list of chemical names for some of the common Siddha medical terms is given below.  Please use this as reference when similar verses are presented later.

Anjanam antimony sulphide
Appiragam mica
Aridharam- arsenic sulphide
Gaandham magnet
Gendhi suphur
Gowri yellow arsenic
Gugulu  indian bellium
Karpaashaanam  meteorite
Karuppu kungiliyam  black dammer canarium strictum
Kundhurukkam veteria india
Lingam mercury sulphide
Mai Saatchi  balsamoderidron mukal
Manosilai red arsenic
Poonaikkan kungiliyam pistacia lentiscus
Pooram bischloride of mercury
Silaamadham  bitumen
Soodham mercury
Thaalakam orpiment
Thee murugal  phosphorus
Thuttham zinc
Veeram perchloride of mercury
Vellai kungiliyam  conkany reseri boswella serrata
Vellai paashaanam white arsenic



இப்பாடல் சித்த மருத்துவப் பொருள்களைப் பட்டியலிடுகிறது.  மருத்துவப் பொருட்களுக்கு அறிவியல் பெயர்கள் இங்கே தரப்பட்டுள்ளன.  முன்பு பார்த்ததைப் போல இவை காற்று, நெருப்பு, நிலம் உணர்வு ஆகியவற்றையும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம் சக்கரங்களையும் பிராணனையும், உணர்வையும் குறிக்கின்றன.    இப்பட்டியலைக் கொண்டு இனி வரும் பாடல்களை வேதியல் ரீதியாகப் புரிந்துகொள்ளலாம்.

Sunday 11 December 2016

506. Skin of the egg of universe and froth of the ocean

Verse 506
சாரக்கட்டு
நில்லப்பா ஞானியண்ட முட்டைத் தோலும்
நிசமான கடல்நுரையுஞ் சாரஞ்சேர்த்து
உண்ணப்பா நாதநீர் தன்னாலாட்டி
உத்தமனே சாரமதுக் கங்கிபூட்டி
சொல்லப்பா ரவிதனிலே காயவைத்து
சிவசிவா புடம்போட உருகிக்கட்டும்
வில்லப்பா விசைபோலே கட்டும் சாரம்
வேதாந்த நாகமிதில் கட்டும்பாரே

Translation:
Tying the essence (saara kattu)

Stop the wise one! The skin of the egg of universe
The froth from the ocean, adding them together
Eat it, grinding together with the water of nada
The Supreme One! Lighting the fire for the essence (saaram)
Drying it in the sun,
Siva sivaa! Slow burning will solidify it
The arrow, the essence will solidify like a
The Vedanta naaga (the snake of Vedanta) will be solidified (tied) in this.

Commentary:
We will see the philosophical explanation here. Vedanta nagam is kundalini.  It is the experience at the terminus of Veda or knowledge.  The saaram is the essence.  The skin of the egg is the place where the contents of the egg communicate with the external world.  In out body, the ajna is generally the place through which the universal force or prapancha prana sakthi gets into the body during brahma muhurtham.  For infants who have their skull not closed, the energe comes through the top of the head.  For adults it enters through the ajna.  Thus this expression  talks about the point of entry of sakthi.  Froth from the ocean is an entity created by air and water coming together.  Thus the first two lines mean that the space, the water and the air principles are brought together and raised to the surya mandala or the pingala nadi.  These two are brought together by the water of nada or Sakthi.  They are incubated together with fire or agni kala at the muladhara.  The sun or Ravi is the surya mandala.  Then the essence of all these principles will come together and become ready to start the journey like the arrow released from the bow.  Interestingly, the shape of the bow is half circle.  The svadishtana chakra that represents the water principle is shaped like a crescent.

வேதாந்த நாகம் என்பது குண்டலினியைக் குறிக்கும்.  இது அறிவின் எல்லையில் ஏற்படும் அனுபவத்தைக் குறிக்கும்.  அண்ட முட்டையின் தோல் என்பது வெளி தத்துவத்தைக் குறிக்கும்.  அது பிரபஞ்ச சக்தி உடலுள் புகும் இடமான ஆக்னையையும் குறிக்கலாம்.  இவ்விடத்தின் மூலம்தான் பிரம்மமுகூர்த்தத்தில் சிறிதளவு பிரபஞ்ச பிராண சக்தி நமது உடலுள் வருகிறது.  கபாலம் மூடாத குழந்தைகளுக்கு தலையில் உள்ள துளையின் மூலமும் மூடியவர்களுக்கு ஆக்னையின் மூலமும் உடலுள் பிராண சக்தி புகுகிறது.  இவ்வாறு இந்த இடம் முட்டை வெளியுலகுடன் தொடர்பு கொள்ளும் இடத்தைக் குறிக்கிறது, நமது உடல் சக்தி நிலையில் வெளியுடன் தொடர்பு கொள்ளும் இடத்தைக் குறிக்கிறது.  கடலின் நுரை என்பது காற்றும் நீரும் சேர்ந்த ஒரு வஸ்து.  இவ்வாறு வெளி, காற்று, நீர் தத்துவங்கள் சேருவதை முதலிரண்டு வரிகள் குறிக்கின்றன.  இவற்றை நாத நீரால் சக்தியால் சேர்த்து, ரவி எனப்படும் சூரிய மண்டலத்தில் அல்லது பிங்கள நாடியில் காய வைத்தால் எல்லா தத்துவங்களும் வில்லைப் போல மேலே ஒரே கோட்டில் எழும் விசையைப் பெற்றதாக மாறும்.  இவ்வாறு வேதாந்த நாகம் கட்டும் என்கிறார் அகத்தியர்.


வில்லின் உருவம் அர்த்த சந்திரன்.  நீர்த்தத்துவத்தைக் குறிக்கும் சுவாதிஷ்டான சக்கரம் அரைவட்டமாகக் குறிக்கப்படுகிறது.

Friday 9 December 2016

505. Golden mother, Vasi/Siva yoga

Verse 505
அணைத்துமிகத்தான் உருக்கி எடுத்துப்பார்த்தால்
ஆதிமிக சோதி என்ற தங்கத் தாய்தான்
நினைத்தபடி தான்குடுக்குஞ் சோதித்தாயை
நித்தியமுஞ் சுத்தமதாய்ப் பூசைப்பண்ணி
மனதைமிகத் தானிருத்தி சோதிப்பார்த்தால்
மகத்தான வாசிசிவ யோகந் தன்னால்
சினந்து வருங்காலனவன் ஓடிப் போவான்
சிவசிவா குருபதத்தில் தெளிவாய் நில்லே

Translation:
Embracing it, melting it and when perceived
The Adi, the jyoti, the golden mother
It will grant the effulgent mother, as wished
Worshipping it daily with purity
Arresting the mind and when the flame is seen
Through the vasisiva yogam
The god of death who comes with anger will run away
Siva Sivaa, remain with clarity, at the guru padam.

Commentary:
The guru padam is ajna.  When the components are melted and raised to ajna the golden mother, Sakthi, will become visible.  When she is worshipped with purity and arresting the mind through vasi/siva yogam them one transcends death.  So, one should remain at the gurupadam with clarity.
Vasi/Siva yogam is the Tamil siddha pranayama. Vasi is when the breath with the prana is drawn in uttering va during inhalation and si during exhalation.  When the amrit is drawn down the pranayama is si va yoga as the nectar comes down and ascends through the chakra with the supreme consciousness. Thus, vasi and siva indicate the flow of prana in reverse orders.
In this context, it should be mentioned that va indicates air principle. Prana uses the air or breath as its vehicle.  It raises the kundalini fire.  The letter si indicates fire.  Thus, prana activates kundalini through vasi.  When the kundalini draws down the nectar it is stored at the vishuddhi cakra.  This chakra corresponds to the air principle, in our body.  Some siddha works say that the va letter marks the heart.  Thus the fire of kundalini,si, settles in the neck or heart and makes the person transcend time.

குரு பதம் என்பது ஆக்ஞையைக் குறிக்கும். உணர்வு அங்கு செல்லும்போதே ஞானம் ஏற்படுகிறது.  மேற் பாடல்களில் கூறிய பொருள்களை சேர்க்கும்போது ஆக்ஞையில் தங்கத் தாய் எனப்படும் சக்தி தென்படுகிறாள்.  அதற்கு ஒருவர் தூயவராக மனத்தை வாசி/சிவ யோகத்தால் நிறுத்தியவராக இருக்கவேண்டும்.  அவ்வாறு தேவியின் தரிசனத்தைப் பெற்றால் காலன் ஓடிப்போவான் என்கிறார் அகத்தியர்.  அதனால் ஒருவர் தெளிவுடன் குருபதம் எனப்படும் ஆக்னையில் நிற்க வேண்டும் என்கிறார் அவர்.


வாசி/சிவயோகம் என்பது தமிழ் சித்தர்களின் பிராணாயாம முறையாகும்.  பிராணன் மூச்சுடன் வா என்று உள்மூச்சிலும் சி என்று வெளி மூச்சிலும் உச்சரித்தபடி உடலுக்குள் வருவது வாசி யோகம்.  இங்கு வா என்பது காற்றுத் தத்துவத்தை, பிராணன் தனது வாகனமாக மூச்சை பயன்படுத்திக்கொள்கிறது, சி என்பது அக்னி தத்துவத்தையும் குறிக்கின்றன.  இவ்வாறு பிராணனின் மூலம் குண்டலினி அக்னி மேலே எழுப்பப் படுகிறது.  அவ்வாறு எழுந்த அக்னி லலாடத்திலிருந்து அமிர்தத்துடன் விசுத்தி சக்கரத்தில் சேகரிக்கப்படுகிறது.  நமது உடலில் லலாட சக்கரம் வ என்னும் காற்றுத் தத்துவத்தைக் குறிக்கிறது. சில நூல்கள் அனாகத சக்கரமான இதயம் அதைக் குறிக்கின்றது என்றும் கூறுகின்றன.  இவ்வாறு அமிர்தம் நமது விசுத்தியிலும் இதயத்திலும் நின்று நம்மை காலத்தைக் கடக்க வைக்கிறது.

Saturday 3 December 2016

504. Naaga kattu

Verse 504
நாகக்கட்டு
சேர்த்துமிகத் தானுருக்க நாகந்தானும்
தீர்க்கமுடன் தானிருந்து கண் விட்டாடும்
பார்த்துமிக அந்நேரந் தங்கஞ் சேறு
பதிவான வீரமது கூடச் சேறு
காரத்து நன்றாய்ச் சேர்த்ததை நீஎடுத்துப்பாரு
கனகமயமானதொரு களங்கதாகும்
ஆற்றுமற்றுக்காசான் களங்குதன்னை
அன்புவைத்து வெள்ளி செம்பி லணைத்துப் பாரே

Translation:
Adding all and melting it, the snake
Will dance at its locus
Watching for that time add the gold
Add the veeram along with it.
And the kaaram.  Check it and see,
You will see a “kalangu” which is golden
The kalangu which is the teacher for the atma
Embrace it in silver and copper, with love.

Commentary:
Kalangu is preparations of metals with mercury and made into a pill.  The naagam means thutthanaagam or zinc.  It also means the kundalini sakthi.  Add the gold means waking it at muladhara.  To that is added breath and consciousness.  Agatthiyar calls this combination as the “kalangu”.  He says this will be golden and calls this as the teacher of the atma as it confers divine consciousness.  This combination is raised to the upper chakras that Agathiyar call as silver and copper.


நாகம் என்றால் துத்தநாகம் மற்றும் குண்டலினி சக்தி என்று பொருள்.  அது தனது இடமான மூலாதாரத்தில் எழுந்து தீர்க்கமாக ஆடும்.  அதை மூலாதாரம் குறிக்கும் தத்துவங்களுடனும் வீரம் காரம் எனப்படும் பிராணன் மற்றும் உணர்வுடன் சேர்த்தால் அது பொன்மயமான களங்காகும்.  களங்கு என்பது உலோகங்களை பாதரசத்துடன் சேர்த்து செய்யும் ஒரு கலவை.  இதை ஆத்மாவுக்கு ஆசான் என்று அகத்தியர் அழைக்கிறார்.  ஏனெனில் அதுவே ஆத்மாவுக்கு பரவுணர்வைத் தருகிறது.  அதை வெள்ளி செம்புடன் சேர்க்குமாறு அவர் கூறுகிறார்.  அதாவது உயர் சக்கரங்களுடன் சேர்க்கவேண்டும்.

Thursday 1 December 2016

503. The kaaram and veeram or siva sakthi

Verse 503
பாரப்பா காரமுடன் வீரங் கூட்டி
பத்தியுடன் தானரைக்க நீருண்டாகும்
நேரப்பா அன்நீரால் மைந்தா கேளு
நிசமாக சாரமுடன் வீரந் தோய்த்துக்
கூரப்பா விளக்கொளியில் வாட்டினாக்கால்
கசடற்று கட்டியது திட்டமாகும்
சேரப்பா நாகமது உருகும்போது
செயமான சாரமதைச் சேர்த்துப் பாரே

Translation:
See son, bringing together kaaram and veeram (siva and sakthi)
Grinding it with devotion, liquid will occur
With that water, son,
Dipping the truthful saaram and veeram
If it is toasted in the light of the lamp
It will become free from impurities and become a solid,
Add the nagam while melting
Add the jaya, the essence and see

Commentary:
Kaaram and Veeram are Sakti and Siva.  They also represent the nadha and bindu.  These two are represented by the muladhara and sahasrara or ajna.  These two are brought together through consciousness, with devotion.  Then the amrit or the fluid emerges.  To that add the essence of saaram, which is the essence of the jiva and toasted in the light of knowledge or awareness.  Then the jiva loses its innate impurities or mala.  To this is added the naagam, snake, the kundalini sakthi or the power of prapancha in the body.  Then the jiva attains jaya or victory over all the principles.


காரம், வீரம் என்பது சிவ சக்திகளை, நாத பிந்துக்களைக் குறிக்கும்.  இவை இரண்டையும் பக்தியினால் ஒன்றாக்கினால் நீர் எனப்படும் அமிர்தம் சுரக்கும்.  இந்த நீரில் சாரம் எனப்படும் ஜீவனின் அடிப்படைத் தத்துவத்தை, உணர்வை தோய்த்து, அதை அறிவு என்ற விளக்கொளியில் வாட்டினால் எல்லா மலங்களும் கழிந்து அந்த ஜீவன் தனது நிலையில் நிற்கும்.  அப்போது அதனுடன் நாகம் எனப்படும் குண்டலினி சக்தியை, உடலில் உள்ள பிரபஞ்ச பிராண சக்தியைக் கூட்டினால் ஜெயம் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.