Sunday 11 December 2016

506. Skin of the egg of universe and froth of the ocean

Verse 506
சாரக்கட்டு
நில்லப்பா ஞானியண்ட முட்டைத் தோலும்
நிசமான கடல்நுரையுஞ் சாரஞ்சேர்த்து
உண்ணப்பா நாதநீர் தன்னாலாட்டி
உத்தமனே சாரமதுக் கங்கிபூட்டி
சொல்லப்பா ரவிதனிலே காயவைத்து
சிவசிவா புடம்போட உருகிக்கட்டும்
வில்லப்பா விசைபோலே கட்டும் சாரம்
வேதாந்த நாகமிதில் கட்டும்பாரே

Translation:
Tying the essence (saara kattu)

Stop the wise one! The skin of the egg of universe
The froth from the ocean, adding them together
Eat it, grinding together with the water of nada
The Supreme One! Lighting the fire for the essence (saaram)
Drying it in the sun,
Siva sivaa! Slow burning will solidify it
The arrow, the essence will solidify like a
The Vedanta naaga (the snake of Vedanta) will be solidified (tied) in this.

Commentary:
We will see the philosophical explanation here. Vedanta nagam is kundalini.  It is the experience at the terminus of Veda or knowledge.  The saaram is the essence.  The skin of the egg is the place where the contents of the egg communicate with the external world.  In out body, the ajna is generally the place through which the universal force or prapancha prana sakthi gets into the body during brahma muhurtham.  For infants who have their skull not closed, the energe comes through the top of the head.  For adults it enters through the ajna.  Thus this expression  talks about the point of entry of sakthi.  Froth from the ocean is an entity created by air and water coming together.  Thus the first two lines mean that the space, the water and the air principles are brought together and raised to the surya mandala or the pingala nadi.  These two are brought together by the water of nada or Sakthi.  They are incubated together with fire or agni kala at the muladhara.  The sun or Ravi is the surya mandala.  Then the essence of all these principles will come together and become ready to start the journey like the arrow released from the bow.  Interestingly, the shape of the bow is half circle.  The svadishtana chakra that represents the water principle is shaped like a crescent.

வேதாந்த நாகம் என்பது குண்டலினியைக் குறிக்கும்.  இது அறிவின் எல்லையில் ஏற்படும் அனுபவத்தைக் குறிக்கும்.  அண்ட முட்டையின் தோல் என்பது வெளி தத்துவத்தைக் குறிக்கும்.  அது பிரபஞ்ச சக்தி உடலுள் புகும் இடமான ஆக்னையையும் குறிக்கலாம்.  இவ்விடத்தின் மூலம்தான் பிரம்மமுகூர்த்தத்தில் சிறிதளவு பிரபஞ்ச பிராண சக்தி நமது உடலுள் வருகிறது.  கபாலம் மூடாத குழந்தைகளுக்கு தலையில் உள்ள துளையின் மூலமும் மூடியவர்களுக்கு ஆக்னையின் மூலமும் உடலுள் பிராண சக்தி புகுகிறது.  இவ்வாறு இந்த இடம் முட்டை வெளியுலகுடன் தொடர்பு கொள்ளும் இடத்தைக் குறிக்கிறது, நமது உடல் சக்தி நிலையில் வெளியுடன் தொடர்பு கொள்ளும் இடத்தைக் குறிக்கிறது.  கடலின் நுரை என்பது காற்றும் நீரும் சேர்ந்த ஒரு வஸ்து.  இவ்வாறு வெளி, காற்று, நீர் தத்துவங்கள் சேருவதை முதலிரண்டு வரிகள் குறிக்கின்றன.  இவற்றை நாத நீரால் சக்தியால் சேர்த்து, ரவி எனப்படும் சூரிய மண்டலத்தில் அல்லது பிங்கள நாடியில் காய வைத்தால் எல்லா தத்துவங்களும் வில்லைப் போல மேலே ஒரே கோட்டில் எழும் விசையைப் பெற்றதாக மாறும்.  இவ்வாறு வேதாந்த நாகம் கட்டும் என்கிறார் அகத்தியர்.


வில்லின் உருவம் அர்த்த சந்திரன்.  நீர்த்தத்துவத்தைக் குறிக்கும் சுவாதிஷ்டான சக்கரம் அரைவட்டமாகக் குறிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment