Friday 30 December 2016

514. Self

Verse 514
எல்லாம் தான்தான்
சோதிஎன்ற அக்கினியே தான்தானாகும்
துலங்குகின்ற முச்சுடரும் தான்தானாகும்
ஆதியென்றும் அந்தமென்றும் தான்தானாகும்
அடங்கிநின்ற சிவயோகந் தான்தானாகும்
சாதிஎன்ற சமரசமுந் தான்தானாகும்
சச்சுதானந்த பூரணமும் தான்தானாகும்
நீதியுடன் தன்னறிவாய்ப் பார்க்கும்போது
நிறைந்துநின்ற பூரணமாய்க் காணலாச்சே

Translation
Everything is verily self

The Jyothi, the fire is self
The three flames is verily self
The origin and terminus are verily self
The sivayogam that remains abiding is verily self
The samarasa of the categories is verily self
The satchidananda poornam is verily self
While seeing it as the awareness of the self, lawfully
It appeared as the fully complete poornam

Commentary:
Agatthiyar defines self in this verse.  The effulgence, the fire of kundalini, the triple flames of sun moon and fire, the beginning and end are all the self.  The sivayogam or remaining in harmony with sivam or supreme consciousness is self.  Samarasa or equivalence all categories, the sat chit Ananda are all self.  Thus, the self, is the poornam.


தான் என்றால் என்ன என்று அகத்தியர் இப்பாடலில் விளக்குகிறார்.  சோதி, குண்டலினி அக்னி, சூரியன் சந்திரன் அக்னி என்னும் முத்தீ, ஆதி, அந்தம் சிவயோகம், ஜீவன் ஈஸ்வரன் என்ற ஜாதிகளின் சமரசம், சத்சிதானந்த பூரணம் எல்லாம் தானாகும் என்கிறார் அவர்.  தன்னைப் பற்றிய அறிவாகப் பார்க்கும்போது தான் என்பது பூரணம் என்று புலப்படுகிறது என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment