Friday 20 May 2016

398. Goal, verse 1

Verse 398
நாட்டம்
அங்கமுடன் நின்ற பஞ்ச பூதமது நசித்து
அணுகி நின்ற பஞ்சமலம் ஆதாரம் நசித்து
சங்கையுள்ள சிவகளைஅம்புவியாட நசித்து
சாக்கிரம வித்தையுட சராசரங்கள் நசித்து
பொங்கு புகழெழுவகையும் பூசை பல நசித்து
போக்கான சரிதை முதல் ஞானவரை நசித்து
நங்கை முதல் போதவரை இருவளியும் நசித்து
நானென்ற சொல்லதனை நசிப்பதுவே நாட்டம்

Translation:
Interest
Crushing the five elements that remain with their parts
Crushing the five innate impurities and adhara
Crushing the sivakala, the beautiful world
Crushing the states of conscsiouness including jagrit and the worlds created
Crushing the glorious seven types and puja
Crushing the four methods, charya and others
Crushing the lady, mount of bodham and two fires
The goal is to crush the word, “self”.

Commentary:
From this verse onwards Agatthiyar is describing the merging or laya of various principles to reach the supreme state. 
The five elements and their five qualities, touch, taste, hearing, smell and sight bring about sensual experiences.  These are the ultimately cause distinctions.  Hence, they are to be crushed first.

While the events recorded by the senses are the same that appear as pleasurable or painful to a person depending on his innate impurities or mala.  For example a music may be pleasurable to one but horrible for another. As the five mala- aanava, karma, maya, mayeya and tirodhayi determine the experience of an event they must be crushed next.  They cause karma. One’s reaction to an event causes karma. 

The next to crushed is the experience of external world.  It is called siva kaLai ambhuvi as it is experienced by sivam or consciousness. As we saw before the earth appears as such because of our mala.

The external world is experienced in the wakeful state of consciousness.  However, a person remains in other states of consciousness.  They are dream state, deep sleep, turya and turyatheetha.  These five states correspond to distinct experiences.  They are also not the ultimate state and so should be crushed.

The states are experienced when consciousness is present at different cakras. For example turyathetha is experienced at muladhara.  The souls are classified into seven forms depending on where they have their consciousness stationed.  Agathiyar in his ezhuvagai thottram describes this elaborately.  Thus, the perception and experiences of the soul differs depending on their form.  Hence, the nature of the lifeform that one is in- whether it is celestials, humans, crawlers, birds, aquatic, insects or plants- should be crushed next.  The seven may also mean the seven lokha that include bhu, bhuvar etc.  These are six states that a soul goes through to reach the satya lokha or the state of Parabrahman.   

Then Agatthiyar talks about the methods for ascent of consciousness.  The puja or ritual worships and the four steps, charya, kriya, yoga and jnana should be crushed.

The next to crush is the lady or kundalini. Then the bodham, the two types of prana- prapancha prana and the prana within the body or inhalation and exhalation are to be crushed and ultimately the I sense should be removed.

From the above verse we see that Agatthiyar is listing the ascending order of distinction-less state starting from completely gross- the elements and the sensual world to the supreme subtle I-ness of ahamkara.  Thus, Agatthiyar is indicating that the supreme state is “becoming that” not knowing “that” or experiencing “that”.

வாசியோகத்தை இதுவரை விளக்கிய அகத்தியர் இனி எவற்றை விடவேண்டும் என்று பட்டியலிடுகிறார்.  உலகைப் பலவாகக் காணச்செய்பவை ஐம்பூதங்களும் அவற்றின் தன்மைகளான ஸ்பர்சம் முதலியவையும்.  ஆகவே அவற்றை முதலில் நசிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர். 

இவ்வாறு வெளியில் தோன்றும் ஒரு தோற்றத்தை நன்மை தீமை, விருப்பு வெறுப்பு என்று உணரச் செய்பவை நமது மலங்கள்.  ஒரே நிகழ்ச்சி ஒருவருக்கு இன்பமானதாகவும் மற்றொருவருக்குத் துன்பமானதாகவும் தோன்றுவதற்குக் காரணம் அவரிடம் எந்த மலம் அதிகமாக இருக்கிறது என்பதைப் பொருத்தது.  அதனால் ஐந்து மலங்களான ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்ற மலங்களை அடுத்து நசிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.
இவற்றை அடுத்து நசிக்கப்படவேண்டியவை வெளியுலகம் என்று நாம் கருதும் அனுபவங்களை.  இவை விழிப்புணர்வால் அனுபவிக்கப்படுகின்றன.  அதையே அகத்தியர் சிவகளை அம்புவி என்கிறார்.

உலக  அனுபவங்களை ஒருவர் விழிப்பு நிலையில் அனுபவிக்கின்றார்.  ஆனால் இந்த நிலையைத் தவிர அவர் கனவு, ஆழ் உறக்கம், துரியம், துரியாதீதம் என்ற ஐந்து உணர்வு நிலைகளையும் அனுபவிக்கிறார்.  அதனால் சாக்கிரம் முதலான நிலைகளை நசிக்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.

இந்த உணர்வு நிலைகள் சூட்சும உடலில் உள்ள எந்த சக்கரத்தில் ஒருவரது உணர்வு இருக்கிறது என்பதைப் பொறுத்தவை.  இதைப் பொருத்து அகத்தியர் உயிர்களை ஏழு வகைகளாகக் கூறுகிறார்.  அந்த நிலைகளைப் பொருத்து ஒருவரது குணங்கள் இருக்கின்றன.  அகத்தியர், எழுவகைத் தோற்றம் என்ற நூலில் ஏழு வகையான உயிரினங்கள் உண்மையில் பலவித மக்கள் என்பதைக் கூறுகிறார்.  அதனால் இந்த குணநிலைகளான ஏழு வித வாழ்க்கைகளை- தேவர், மனிதர், ஊர்வன, பறப்பன, நீரில் வாழ்வன, பூச்சிகள், தாவரங்கள் என்பவற்றை நசிக்கவேண்டும். 

இந்த ஏழு என்பவை ஏழு உலகங்கள் எனப்படும் ஏழு உணர்வு நிலைகளைக் குறிக்கும்.  இவற்றைக் கடந்தே ஒரு உயிர் சத்யலோகம் எனப்படும் பரபிரம்மா நிலையை அடைகிறது.

இதனை அடுத்து வழிமுறைகளைப் பேசுகிறார் அகத்தியர்.  பூசை, சரியை, கிரியை, யோகம் ஞானம் என்ற நான்கு படிகளையும் நசிக்கவேண்டும்.  இந்த படிகளால் வரும் குண்டலினி மாது அல்லது சக்தி நிலை, போத நிலை, இரு வளிகள் எனப்படும் பிரபஞ்ச பிராணன், மற்றும் உடலில் உள்ள பிராணன் அல்லது உள்மூச்சு, வெளி மூச்சு என்பவற்றையும் முடிவில் நான் எனப்படும் அகங்காரத்தையும் நசிப்பதே நாட்டம் என்று இப்பாடலை முடிக்கிறார் அகத்தியர்.


இதனால் நாம் அறிவது என்னவென்றால் நமது உண்மையான ஒருமை நிலையைப் பலவாகக் காட்டும் வஸ்துக்களை நசித்து ஒருமை நிலையை அடைவதே நாட்டம் என்று அகத்தியர் கூறுகிறார் என்பது புரிகிறது.  “அதை” அனுபவிப்பது, தெரிந்து கொள்வது என்ற நிலை மாறி நாம் “அது”வாகவே மாறவேண்டும் என்று அவர் கூறுகிறார்.

1 comment:

  1. Hi, i just want to tell everyone out there that i got my loan of $1,000,000.00 from Mr Ben loan  investment program and is 100% legit contact via email: 247officedept@gmail.com or Text him on whatsapp  + 1-989-394-3740.  if you are seeking for 100% financing at the low rate of 2% rate in return.

    ReplyDelete