Saturday 14 May 2016

394. Akaara puja

பாரப்பா ஓம் சக்தி பூசை சொன்னேன்
பதிவான அகாரமென்ற சிவத்தின் பூசை
நேரப்பா நிலையறிந்து அகாரமான
நேரான சிவமதுவும் விந்துவாச்சு
காரப்பா விந்துவென்ற சாரந்தன்னை
கருணையுடன் பூரணமாய் உதயந்தன்னில்
தேரப்பா தானிருந்து உருவே செய்தால்
சிதம்பரத்தின் எல்லையிலே தீபமாமே

Translation:
See son, I told you about Om Sakthi puja
Now the akaara or puja of sivam
Knowing the state, the akaara
The sivam became vindhu
Seek son, the vindhu, the saaram (essence) with mercy
During dawn as the poornam
If you remain so and chant it
Lamp at the frontier of Chitambaram

Commentary:
In the previous verse Agatthiyar described the om sakthi puja.  Om sakthi is kundalini.  Omkara is present at the muladhara along with kundalini sakthi.  This is origin of the puja or ascent of kundalini.  Next the akara is present at svadhishtana.  He says that akaara is sivam or consciousness.  It is the bindhu.  It also called saaram or essence.  Kaaram and saaram are two terms that the Siddhas use to describe Sakthi and Sivam.  Agatthiyar tells Pulattiyar to perform chanting of akaara considering sivam as the poornam. Thus, consciousness is the poornam, the state of the soul.  He tells him to perform this worship at dawn.  It is interesting that Siva puja is recommended at dawn and sakthi puja in the evening.  One wonders whether this has any significance with respect to beginning and conclusion of the kundalini yogam.
When this chanting is performed a flame or lamp will be perceived at ajna, the frontier of chithambaram.  This may also be the sahasrara.


முந்தைய பாடலில் அகத்தியர் ஓம் சக்தி பூசையை விளக்கினார்.  ஓம் சக்தி என்பது குண்டலினி சக்தி.  ஓம்காரம் மூலாதாரத்தில் குறிக்கப்படுகிறது.  அங்கு இருப்பது குண்டலினி சக்தி.  இதனை அடுத்து அகத்தியர் அகார பூசையைக் கூறுகிறார்.  அகாரம் சுவாதிஷ்டானத்தில் குறிக்கப்படுகிறது.  இதுவே சிவம் அல்லது பரவுணர்வு.  இந்த சிவமே பிந்து தத்துவம்.  இங்கு சிவத்தைப் பூரணமாகக் கருதி தியானிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.  இதனால், பூரணம் என்பது பரவுணர்வைக் குறிக்கிறது என்பது தெரிகிறது. இந்த தியானத்தை ஒருவர் உதயத்தில் செய்ய வேண்டும் என்கிறார். உதயம் என்பது ஒன்று தோன்றும் நேரத்தைக் குறிக்கிறது.  இவ்வாறு உதயம் என்பது பொழுது தோன்றும் நேரத்தையும் அறிவு உதயமாகும் நேரத்தையும் குறிப்பதைப் போல உள்ளது. இவ்வாறு தியானித்தால் சிதம்பரத்தின் எல்லையில் தீபம் தோன்றும் என்கிறார் அகத்தியர்.  சித் அம்பரம் என்பது பரவுணர்வு இருக்கும் இடம்.  இது ஆக்ஞை சக்கரமாகும்.  இங்கே பரவுணர்வு ஒரு தீபமாகக் காட்சியளிக்கிறது.

No comments:

Post a Comment