Wednesday 11 May 2016

392. Om reeng am in the context of nadha, bindhu and the triple flames

Verse 392
காணவே றீங்காரம் நாதமாச்சு
கருணைவளர் அகாரமடா விந்துவாச்சு
பூணவே ஓங்காரம் வாசியாச்சு
புத்தியுடன் தனதறிவால் தன்னுள் பாரு
தோணவே தனதறிவால் பார்க்கும்போது
சோதிஎன்ற ரவிமதியுஞ் சுடர் மூன்றாச்சு
பேணவே சுடர் மூன்றுந் தன்னுட் பார்க்க
பேசவொண்ணா மௌனமென்ற கற்பமாச்சே

Translation:
The reengaaram became the nadha
The merciful akaaram became bindhu
The omkaaram became vaasi
See this with intellect within using your mind
When you see so with your mind
It became the ravi, mathi and the flame.
Seeing the three flame within
It became the karpam indescribable silence.

Commentary:
In the previous verses Agatthiyar explained om reeng am as the three parts of pranayama and as siva, sakthi and peeta.  Here he is explaining it in the context of nadha and bindhu, the precursors of this manifested world.  He mentions that reeng or reengkaara is nadha, am or akara is bindhu and omkaara is vaasi or the prana, breath complex.  When one understands this carefully one will see that these three are actually the ravi (sun), mathi (moon) and flame (fire).  When one perceives these within, then one reaches the state of silence which is the karpam or the medicinal preparation that cause liberation.


முந்தைய பாடல்களில் அகத்தியர் ஓம் ரீங் அம் என்ற மந்திரத்துக்குப் பல்வேறு பொருள்களைக் கூறினார். இங்கு இந்த மூன்றையும் நாத பிந்து தட்துவங்களாகக் கூறுகிறார். ரீங் என்பது நாதம், அம் அல்லது அகாரம் பிந்து, ஓம்காரம் வாசி என்கிறார் அகத்தியர்.  இதை ஒருவர் கவனமாகத் தன்னுள் பார்த்தால் அவை ரவி, மதி, சுடர் என்ற மூன்று தீக்களாகத் தெரியும் என்றும் அவ்வாறு உணர்ந்தால் ஒருவர் மௌனம் எனப்படும் நிலையை அடைவார், அதுவே கற்பம் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment