Saturday 14 May 2016

395. Madapathi will end

Verse 395
ஆமப்பா  அகாரசிவ பூசை சொன்னேன்
அறிந்து மனதருளாலே அறிவைப் பற்றி
நாமப்பா வென்றமதந் தன்னை நீக்கி
நடுவான றீங்கார வாலைதன்னை
தாமப்பா தன்னகமே வென்ற போற்றி
சதானந்த பூரணமாய்ப் பூசை செய்தால்
வாமப்பால் கொண்டகெதி தன்னாலந்த
மகத்தான மடபதிதான் தீர்க்குந்தானே

Translation:
Yes son, I told you akaara siva puja
Knowing it holding the awareness with the help of the mind’s grace
Removing the arrogance, of the I,
The central, reengaara vaalai,
Holding her within as self and praising her,
If you worship as sadaanandha pooranam
Due to the path of the vaamappaal
The madapathi (body) will come to an end by itself.

Commentary:
The components of vaasi yoga are the breath along with prana, the mind and the consciousness.  Agatthiyar is talking about the mind and awareness in this verse.  He says that while doing the akaara puja the mind should hold the awareness, remove the arrogance of I, Me and hold the vaalai who is reenkaara.  Vaalai is kundalini sakthi made up of the above mentioned components.  Vaalai should be contemplatedas Sadananda poornam.  Vaama paal or the milk of vaama is actually the essence of vaama or pranayama.  We already saw about vama puja before.  Due to the vama the “madapathi” or the identification with the body will end.  This is called kaya siddhi.


வாசியோகத்தில் பங்கேற்கும் வஸ்துக்கள் மூச்சுடன் சேர்ந்த பிராணன், மனம் மற்றும் விழிப்புணர்வு ஆகும்.  இப்பாடலில் அகத்தியர் மனத்தைப் பற்றியும் விழிப்புணர்வைப் பற்றியும் பேசுகிறார்.  மனத்தால் அறிவைப் பற்றி தான் என்ற அகங்காரத்தை விலக்கி ரீங்காரமான வாலையைப் போற்ற வேண்டும் என்கிறார் அகத்தியர்.  வாலை என்பது மேற்கூறிய வஸ்துக்கள் அனைத்தும் சேர்ந்த நிலை.  அதுவே குண்டலினி சக்தி.  இந்த வாலையை சதானந்த பூரணம் என்று தியானிக்க வேண்டும் என்கிறார்.  வாமப்பால் என்பது வாம பூசை, பிராணாயாமம்.  இந்த வாம பூசை செய்தால் மடபதி எனப்படும் உடலே தான் என்று அடையாளப்படுத்திக்கொள்வது முடியும்.  இதுவே காய சித்தி எனப்படுகிறது.  

No comments:

Post a Comment