Monday, 6 April 2015

55. Muladhara

Verse 55
Muladhara
மூலாதாரம்
கேளப்பா விபரமென்ன மூலாதாரங்
கிருபையுடன் கண்டுகொள்ள  வகையைக் கேளு
காலப்பா தோன்றி நின்ற மூலாதாரம்
கருணையுடன் சொல்லுகிறேன் அண்டம் போலாம்
மேலப்பா அண்டமதிற் சூழ்ந்து நின்ற
விசையான இதழதுதான் நாலுமாச்சு
சூளப்பா நிறமதுதான் மாணிக்கம் போல்
சுகமாக நின்றுதடா மூலம் பாரே

Translation:
Listen son, the details about the muladhara
Listen to the way to see it
The prana, the place where it occurs and remains, the muladhara
I will tell you with mercy, is like the universe
In that universe, the surrounding
The petals are four
See son, its color is like ruby
Remained there comfortably, see the origin (moolam)

Commentary:
Agatthiyar is describing the muladhara as the origin of prana.  He says it is like the universe.  The total number of petals is four and its colour is like the ruby.


மூலாதாரமே கால் அல்லது பிராணன் தோன்றும் இடம், அது அண்டம் போல் இருக்கும் என்கிறார் அகத்தியர்.  அண்டம் என்பது ஒரு கோளம் மற்றும் உலகம் என்று பொருள்படும்.  இதன் இதழ்கள் நான்கு என்று கூறும் அகத்தியர் அதன் நிறம் மாணிக்கம் என்கிறார். 

2 comments:

  1. Amma, Where are you ?? are you alright please let me know if you are ok, kind of getting worried please respond Nandri.

    ReplyDelete
  2. :) Had to travel and hence the short break in the postings. Thank you for your concern. Om Agattheesaaya namaha

    ReplyDelete