Thursday 14 May 2015

66. By Rudra's grace...

Verse 66
பார்க்கையிலே ருத்திரனார் கடாக்ஷத்தாலே
பாதாதி கேசமுதல் நன்றாய்ப் பாரு
சேர்க்கையுடன் பார்க்கையிலே மைந்தா மைந்தா
என்ன சொல்வேன் அக்கினிபோல் ஆகுந்தேகம்
தீர்க்கமுடன் அக்கினிபோல் தன்னுள் கண்டாற்
சிவயோக வாழ்வு வெகு திறமாய் நிற்கும்
மார்க்கமுடன் உருத்திரனார் பதியைப் பார்த்து
மனங் குவிந்து பூரணத்தில் மருவியேறே

Translation:
Seeing due to Rudra’s grace
See well from head to foot,
Son, Son, if you see them together
What can I say!  The body will become like fire
If it is seen inside firmly, as if it is fire
The life of Sivayoga will occur effectively
Seeing the locus of Rudra properly
With mind focusing climb through the fully complete

Commentary:
The anahata practice stirs the heat inside the body and makes it ruddy as if it is on fire.  If this heat or flame is seen within then siva yoga or remaining associated with supreme consciousness will become possible.  Agatthiyar advises Pulatthiyar to look within from head to toe with mental focus, perceive the flame within and ascend in consciousness. This ascent occurs with the help of Sakthi, kundalini, whom Agatthiyar calls poornam.  In several Siddha works we see that Sakthi is called poornam and Siva as kaaranam.
                               

அனாகதப் பயிற்சி உடலில் சூடேற்றி அதை அக்னி போலத் தகிக்கச் செய்யும்.  அந்தத் தீ போல உள்ளே இருப்பதை ஒருவர் மனத்துடன் தலை முதல் கால்வரை பார்த்தால் உடல் நெருப்புபோல இருப்பதைக் காணலாம்.  இந்தப் பேற்றைப் பெற்றால் சிவயோக வாழ்வு கிட்டும் என்றும் அதனால் மனக் குவிப்புடன் பூரணம் என்னும் சக்தியின் உதவியினால் சக்கரங்களில் விழிப்புணர்வை ஏற்றவேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார். சக்தியைப் பூரணம் என்றும் சிவனைக் காரணம் என்றும் அழைப்பதைப் பல சித்தர்கள் பாடலில் காணலாம்.

No comments:

Post a Comment