Thursday 14 May 2015

65. Effects of Anahata practice

Verse 65
சோதிஎன்ற காந்தியடா சூரிய காந்தி
துலங்கு நடுச் சுழினையை நீ காண்டாயானால்
ஆதியென்ற ஆதாரம் ஆறாதாரம்
அரூபமாய மானதொரு மேலாதாரம்
நீதியுடன் தோணுமடா வாசியாலே
நின்றிலங்கும் வாசிதனைத் தன்னுள் பார்த்து
சாதியென்ற சராசரத்தைத் தானாஎண்ணி
சதாயோக பூரணமாய் நின்று பாரே

Translation:
The jyothi, its effulgence is like the brilliance of the Sun
If you see the ajna (suzhinai) in the middle
The Adi, the primary support, the sixth adhara
The formless adhara on the top
Will appear truthfully,
It will remain due to vaasi,
If vaasi is perceived within self
Considering the universe with many ramifications as self
Remain as yoga poorna always and see.

Commentary:
The verses we have seen so far show us that even though the cakras are defined at specific locations in the body the experiences that they offer need not occur in that particular spot.  This verse shows that practices specific for the heart cakra or the anahata has its effect seen in the ajna  Agatthiyar says that the anahata practice reveals the ajna.  He calls it as the cakra without a form, the adi, the adhara or the substratum, the six adhara that is present at the top.  This experience occurs due to vaasi or drawing in of the life force through breathing.  At this state the practitioner remains in the state where he considers the entire universe as Self.  This is of complete yoga or union.


சக்கரங்கள் உடலில் குறிப்பிட்ட இடங்களில் இருப்பதாக் கருதினாலும் அவற்றிற்கான பயிற்சிகள் ஏற்படுத்தும் விளைவுகள் அந்த சக்கரங்கள் இருக்கும் இடத்தில்தான் ஏற்பட வேண்டும் என்பதில்லை என்று இந்தப் பாடல்கள் காட்டுகின்றன.  அனாகத சக்கரப் பயிற்சிகள் ஆக்னையில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  இந்தச் சக்கரத்தை மேல் ஆதாரம், அரூபமானது முக்கியமான ஆதாரம் என்றகிறார் அகத்தியர்.  இந்த விளைவு வாசியால் ஏற்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். வாசி என்பது மூச்சுப் பயிற்சியினால் உயிர் சக்தியை உடலுள் புகச் செய்வது.  இந்த நிலையில் அந்தப் பயிற்சியாளர் உலகம் முழுவதுமே தான் என்ற பாவத்தில் நிற்பார்.  இதுவே சதா யோக பூரண நிலை என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment