Monday, 7 March 2016

317. What is Samadhi

Verse 317
ஆச்சப்பா சமாதியஞ்சும் நன்றாய்ச் சொன்னோம்
ஆதிதொடுத் தந்தவரை நன்றாய்ப் பாரு
பேச்சப்பா தானிருந்து நன்றாய்ப் பாரு
பெருகி நின்ற அஷ்டாங்க திட்டம்பாரு
மூச்சப்பா முன்னிலையாய் நிறுத்திக்கொண்டு
முத்தியுள்ள நவக்கிரக சூக்ஷங் கண்டு
பாச்சப்பா அனுக்கிரக பதியில்நின்று
பாதாதி கேசமுதல் தன்னைப் பாரே

Translation:
Alright I told you about the five types of Samadhi
See well from the beginning to the end
Remaining so and see well
See the plan of ashtanga
With breath in the forefront
Seeing the subtlety of navagraha
Remaining in the anugraha pathi
See Self from foot to head.

Commentary:
This verse adds more details about the samadhis in general.  Agatthiyar summarizes Samadhi stating that one has to see the eight steps of yoga, the essence of the navagraha while remaining in the anugrahapathi or the locus of grace, the locus of Rahu and Ketu, sahasrara, with breath as the focus and look from head to foot.


இப்பாடலில் அகத்தியர் சமாதியின் முக்கிய குறிப்புக்களைத் தொகுத்துக் கூறுகிறார்.  அஷ்டாங்க யோகத்தின் எட்டு படிகள், நவகிரகங்களின் சூட்சுமம், ஆகியவற்றை ஒருவர் மூச்சைப் பிரதானமாகக் கொண்டு அனுக்கிரக பதி எனப்படும் சகஸ்ராரத்தில் நின்றுகொண்டு தலை முதல் கால்வரை பார்ப்பதே சமாதி என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment