Friday 18 March 2016

350. Stotram-5 She is existence and nonexistence

Verse 350
வடிவாகி முடிவாகி மாலுங்காணா
மன்னுயிர்க்குந் தானான மயமுமாகி
அடியாகி நடுவாகி வானுந் தாண்டி
அண்டசரா சரங்களுட நினைவுமாகி
முடிவாகி நானாகி நீயுமாகி
மூச்சாகி மூச்சற்ற பொருளுமாகி
வடிவாகி அற்றதுமாய்ச் சுழியுமாகி
வழங்கி நின்ற ஆனந்தப் பொருளுமாமே

Translation:
As the form, as the end, as the maya
For the lives that even Vishnu has not seen,
As the base, the middle, and going beyond the sky
As the universes, as thoughts
As terminus, as me and you
As breath, as the entity without breath
As the form, as that without form, as the whorl
As the blissful entity that grants (everything/bliss)

Commentary:
Sakthi is both microcosm and macrocosm.  She is the maya, the special creative force that brings everything to existence.  She is the base, the middle and beyond- the muladhara, heart cakra and beyond the ajna.  She is thoghts, the terminus of everything, as all the lives, as that with form and without, as breath and the soul that remains in kumbakam.  She is the Anandavalli who grants that bliss to everyone.


சக்தியே அண்டமாகவும் பினடமாகவும் இருக்கிறாள்.  அவளே இறைவனின் படைப்புச் சக்தியான மாயை.  அவளை மால் அல்லது மயக்கம் என்ற பெயரைக் கொண்ட விஷ்ணுவும்கூட அறிந்ததில்லை.  அவளே அடி, நடு முடி எனப்படும் மூலாதாரம் அனாகதம் மற்றும் ஆக்னையைக் கடந்த உணர்வு நிலைகள்.  அவளே எண்ணங்களும் அவற்றின் இல்லாமையும்.  அவளே எல்லா உயிர்களும், எல்லா உருவங்களும் உருவமின்மையும்.  அவளே மூச்சும் மூச்சற்ற கும்பகமும்.  அவளே ஆனந்தவல்லி, அனைவருக்கும் அனைத்தையும், ஆனந்தம் உள்பட, அளிப்பவள்.

No comments:

Post a Comment