Monday, 7 March 2016

339. Vaasi dhaarana

Verse 339
ஆச்சப்பா ரேசகஞ்செய் சிங்கென்றேதான்
அணைத்துமிக ஊதிவிடு தள்ளாடாமல்
மூச்சப்பா தானிருந்து இப்படியே செய்தால்
முக்கியமடா சிவயோகம் பூசைதானும்
பேச்சப்பா பேசாமல் மவுனங்கொண்டு
பெருகி நின்ற வாசி தாரணையைப் பற்றி
காச்சப்பா இப்படியே வருஷம் ஒன்றில்
கருணை பெற சிவயோகம் கருதிப்பாரே

Translation:
In the rechakam say sing
Embracing it blow it well, without faltering
Breath, if you do so,
The important Siva yoga puja
Speech, holding silence without speech
Holding to the vaasi dhaarana
Boil so for a year
Perform/consider siva yogam to obtain mercy.

Commentary:
Continuing the previous verse on pranayama, Agatthiyar says that while exhalation on should utter sing.  One should this practice of uttering vang during inhalation, ang during kumbakam and sing during exhalation.  Agatthiyar says that this should be performed without speech, focusing all the energy on this practice.  This is Vaasi dhaarana, this is siva yogam or being one with Siva.  It should be performed for a year to obtain mercy. 


முந்தைய பாடலில் விளக்கத் தொடங்கிய பிராணாயாமத்தை இப்பாடலிலும் தொடருகிறார் அகத்தியர்.  உள்மூச்சான பூரகத்தில் வங் என்றும் கும்பகத்தில் அங் என்றும் வெளி மூச்சில் சிங் என்றும் உச்சரிக்க வேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.  இதை மௌனமாக இருந்து உச்சரிக்க வேண்டும் அதாவது மனத்தில் கூற வேண்டும்.  இதுவே வாசி தாரணை என்றும் இதை ஒருவர் ஒரு வருடம் செய்தால் கருணை பிறக்கும் என்கிறார் அகத்தியர்.  இதுவே சிவயோகம் என்றும் அவர் கூறுகிறார். 

No comments:

Post a Comment