Saturday, 5 March 2016

338. Vaasi yogam and time counts

Verse 338
வகையான பூரகந்தான் வங்கென்றோது
மகத்தான கும்பகந்தான் அங்கென்றோது
துகையான ரேசகந்தான் சிங்கென்றய்யா
சுத்தமுடன் யோக சாதனையைக் கேளு
பகையான பூரகந்தான் வங்கென்றோது
புத்தியுடன் தானிருக்க மாத்திரை ரெண்டாச்சு
நகையாதே நாலுதிறம் அங்கென்றாக்கால்
நன்மையுள்ள மாத்திரைதான் நாலுமாச்சு

Translation:
While inhalation say vang
While performing the magnificient kumbaka say ang
During exhalation say sing
Listen to the yoga sadhana now, with purity,
When you recite vang during inhalation
Remain with intellect for two time counts (maatirai)
Do not laugh, while saying it four times.  While saying ang
Hold it for four time counts.

Commentary:
Having explained that the inhalation, poorakam, is Sakthi and the mantra for it is vang, Agatthiyar is describing how to utter these mantra during pranayama.  He says vang should be uttered for two time counts.  A maatirai is the time taken for blinking once or to snapping your fingers once.  During kumbaka or retention of breath the mantra ang is uttered for four time counts.  He says that the mantra for exhalation is sing.  Hence the letter si is said to be siva’s letter.  (si enbathu sivanin ezhutthu).  This process should be done four times.

This breathing method is called vaasi yogam.

உள்மூச்சு சக்தி என்றும் வெளி மூச்சு சிவன் என்றும் கூறிய அகத்தியர் அப்போது சொல்லவேண்டிய மந்திரங்களை இப்பாடலில் விளக்குகிறார்.  உள்மூச்சு எனப்படும் பூரகத்தின்போது வங் என்று ஓத வேண்டும்.  அதை இரண்டு மாத்திரை அளவு ஓத வேண்டும்.  மூச்சை உள்ளே நிறுத்துவதான கும்பகத்தின்போது அங் என்று ஓதவேண்டும்.  அதை நான்கு மாத்திரையளவு ஓத வேண்டும். மூச்சை வெளியே விடும்போது சிங் என்று ஓத வேண்டும்.  இதை நான்குமுறை செய்யவேண்டும் என்று கூறுகிறார் அவர்.  இதுவே வாசி யோகம் எனப்படுகிறது. 

இக்கருத்தில்தான் சி என்பது சிவனின் எழுத்து என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment