Thursday 3 March 2016

332. House of Vaalai

Verse 332
பாரப்பா சிவயோக வாலைப் பெண்தான்
பத்தி நின்ற தச நாதந் தானே கொண்டான்
காரப்பா வாலையவள் இருந்த வீடு
கருணை வளர் கேசரியாங் கமலந் தன்னில்
நேரப்பா சுழி சுழியாம் புருவமீதில்
நின்றிலங்கும் கற்பூர தீபந்தானாய்
சேரப்பா அத்தீபச் சுடரிலேதான்
தெளிந்துகொண்டு சிவஞான சிவத்தைத் தேடே

Translation:
See son, the girl, Vaalai
She adorned the ten types of sounds
The house where vaalai lived
In the lotus of kechari
It is the whorl at the eyebrow
It remains as the flame of camphor
Join that flame
Becoming clear, search for sivajnana sivam.

Commentary:
Agatthiyar tells us that the place where Vaalai remains is both the muladhara and ajna  Hence these two cakras are called adi and mudi or kaal thalai- bottom and top, foot and head.  He says that she lives in the house of kechari which is the lotus.  There appears the flame like the smoky flame of camphor.  He tells Pulatthiyar to search for sivajnana, sivam there.


வாலைப் பெண் இருக்கும் இடம் தாமரை மலரைப் போன்ற கேசரி ஸ்தானமான ஆக்ஞை என்று கூறுகிறார் அகத்தியர்.  இதனால் வாலை அல்லது குண்டலினி மூலாதாரத்திலும் ஆக்ஞையிலும் இருக்கிறாள், அதைத்தான் சித்தர்கள் அடி முடி என்றும் கால் தலை என்றும் கூறுகின்றனர் என்பதும் புரிகிறது. அவர்கள் கால் தலை மாறுதல் என்று கூறுவது குண்டலினி மூலாதாரத்திலிருந்து ஆக்ஞைக்குப் போவதைத்தான்.  இந்த இடத்தில் கற்பூர தீபத்தைப் போன்ற ஒளி தெரியும் என்றும் அங்கு சிவஞான சிவத்தைத் தேடவேண்டும் என்றும் அவர் புலத்தியருக்குக் கூறுகிறார்.

No comments:

Post a Comment