Friday 4 March 2016

334. What is the effulgence, siva roopam?

Verse 334
ஆச்சப்பா சீவகளை இதுதானப்பா
ஆதியந்த மானதுவும் இதுதானப்பா
பேச்சப்பா பேசாத மவுனமையா
பெருகி நின்ற சாயுச்சிய பதமிதையா
மூச்சப்பா நிறைந்ததிரு வாசியாலே
முத்திபெற நவக்கிரகம் சூக்ஷம் பார்த்து
காச்சப்பா அக்கினி கொண்டு ஆறாதாரங்
கருவான வெளிப்பூசை கண் உண்டேனே

Translation:
This is the sign of Jiva
This is the origin and terminus
This is the speechless silence
This is the sayujya padam
Breath is filled with vaasi
Seeing the subtlty of the navagraha, to attain mukti
Boil the six adhara with the fire
This is the essence of the worship of space.  I consumed (enjoyed) it through the eye.

Commentary
Agatthiyar tells about the brilliance witnessed at the ajna.  He says it is the Jivakalai or the sign of Jiva.  It is the origin and terminus-the Divine, the mouna- the state that precedes sound, sayujya padam- this is the state of remaining associated with the supreme.  In this state the breath is filled with vaasi or life force. The subtlety of the navagraha should be perceived and the six aadhaara should be boiled with Tiruvaasi.  He calls this as the worship of the space that one experiences/performs with the mental eye.  
Navagraha may mean both the nine planets that correspond to the chakra and loci in the body.  It also means the new house, the ajna where all the principles are perceived.

முந்தைய பாடலில் கூறிய ஒளியை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர். இந்த ஒளிதான் ஜீவகளை, இதுவே ஆதியும் அந்தமும்-வெளிப்பாட்டு நிலையில் உள்ள இறைவன், வாக்கு தோன்றாத சக்தி நிலை, பரவுணர்வுடன் சேர்ந்திருக்கும் சாயுச்சிய நிலை என்று அவர் கூறுகிறார். இந்த நிலையில் மூச்சு வாசி எனப்படும் உயிர்ச்சக்தியால் நிறைந்திருக்கிறது.  இந்த நிலையில் ஆறு ஆதாரங்களையும் நவகிரகத்தின் சூட்சத்தைப் பார்த்து திருவாசியால் காய்ச்ச வேண்டும் என்றும் இதுவே வெளிப் பூசை என்றும் இதை ஒருவர் கண் எனப்படும் பரவுணர்வினால் செய்கிறார் என்றும் அகத்தியர் கூறுகிறார். 

No comments:

Post a Comment