Wednesday, 16 March 2016

346. Stotra verse 1


 verse 346
தோத்திரம்
அம்பரமே அகண்டமே ஆதித்தாயே
ஆதியந்த மில்லா அரூபத்தாயே
சம்பரையே சமரச மவுன ஞான
சச்சிதா னந்தவெளித் தாயே தாயே
நம்பரையே நாதாந்த கருணை வித்தே
நானென்றும் நீயென்றும் இல்லாததாலே
உம்பரையே உம்பருக்கும் அரி அயற்கும் எட்டா
ஓங்காரங் கடந்து நின்ற ஒளியே பெண்ணே

Translation:
The arena, the expanse, the origin mother,
The mother who has no origin or terminus
The manifested parai, samarasa, mouna jnana
Mother of the satchidananda space
Our Parai, the seed of nadhantha, mercy
As there is no distinction as you and me
The supreme parai, the light which was beyond
Celestials, Brahma, Vishnu, Omkara, The lady!

Commentary:
Sakthi is the space that gives existence for everything.  She is the mother of everyone and everything as they all originated from her.  This is similar to the sacred name Srimatha.  She is the Parai, who is manifested.  She is of equivalent rasa as Siva, She is the silence, the wisdom, the mother who is Sat chid Ananda, she is the supreme space.
She is the seed for everything, the one beyond the nadhantha; nadha originates from her.  Agatthiyar has said before that sakti is the body while siva is the soul.  Agatthiyar says that there is no difference between her and Agatthiyar.  He is the agathee or the inner fire, the kundalini which is Sakthi..  She is beyond Vishnu, Brahma and celestials.  In the order of emanation all these deities originate from Sakti principle.  Omkara is verbal expression of the supreme.  It is the first emanation from nadha.  Sakthi is beyond nadhantha she is beyond omkara also.


சக்தியே அனைத்துக்கும் இருப்பைக் கொடுக்கும் வெளி.  எண்ணங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும்கூட ஒரு இருப்பிடம் உள்ளது.  அனைத்தும் அவளிடமிருந்து தோன்றுவதால் அவளே அனைத்துக்கும் தாயாவாள்.  இந்தப் பெயர் லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் முதல் பெயரான ஸ்ரீமாதா என்பதைப் போன்றது.  அவளே வெளிப்பாடுடைய பரை, சிவனுடன் சமரசமானவள்.  அவளே சத்தத்தைக் கடந்தவள்.  ஞான சச்சிதானந்த வெளி.  அவள் நாதத்தின் எல்லையைக் கடந்தவள்.  நாதாந்த கருணை வித்து.  அனைத்தும் அவளது கருணையால் தோன்றின.  அவளுக்கும் அகத்தியருக்கும் வேறுபாடு கிடையாது.  அவளே அகத்தில் உள்ள தீ, குண்டலினி அக்னி.  அவள் பிரம்மா, விஷ்ணு ஆகியவர்களுக்கு அப்பாற்பட்டவள்.  ஏனெனில் விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோர் சக்தி தத்துவத்திலிருந்து தோன்றியவர்கள்.  ஓம்காரம் என்பது நாதத்தின் முதல் வெளிப்பாடு.  சக்தி நாதத்தைக் கடந்தவள்,  அதனால் அவள் ஓங்காரத்தைக் கடந்தவள். 

No comments:

Post a Comment