Sunday 13 March 2016

345. Share the offerings with others

Verse 345
ஈய்ந்துமிக நிர்மாலய மெல்லாம் கூட்டி
இன்பமுடன் தூபதீபங்கள் காட்டி
ஆய்ந்து நின்ற அரதேசி பரதேசிக்கும்
அன்னமொடு பலகாரம் அன்பாய் ஈய்ந்து
சாய்ந்துமனம் போகாமல் நிலையில் நின்று
சங்கையுடன் வாசி தாரணையைப் பற்றி
பாய்ந்துமிக ஆதாரத் துள்ளே சென்று
பராபரையே காரணியே அம்பரையே பெண்ணே

Translation:
Offering things so, bringing together nirmaalaya
With pleasure, waving fragrance and lamp
Offering to those in one’s land and of foreign land
Rice and eatables, with love,
Remaining without the mind getting distracted
Holding on to the vaasi dhaarana
Charge into the adhaara
And praise Maheswari as Paraparai, kaarnai, ambarai, the Lady.

Commentary:
After offering sacred ash and foods to one’s disciples, the yogin has to offer them lovingly to people of one’s own land and foreign land.  He should remain with mental focus and start singing the praise of Maheswari addressing her as Paraaparai or the Supreme Sakti,Kaarani- the supreme causality, Ambarai- the one who adorns everything on herself, the lady Sakti.

This verse which looks like an external worship ritual has a corresponding inner meaning.  Nirmaalaya means the faultless aalaya or temple.  This corresponds to the sakthi peeta or cakra within the body.  The fragrance and lamp  corresponds to raising consciousness to the ajna.  This cakra looks like smoke and it is here that the lamp of consciousness is perceived.  Offering annam and palahaaram to aradesi and paradesi- food is that which is consumed.  Here it corresponds to the various principles that are consumed or made to abide.  Palahaaram means pala aahaaram or food items, here the principles represented by akaaram, ukaaram, makaarm etc.  These are offered to the prana in the body-aradesi and to the prapancha prana sakthi or paradesi- the horse in the param or macrocosm.  Thus these lines correspond to the processes with the breath or pranayama.  Then Agatthiyar says the mind is kept focused and cakra is hit with consiocusness so that Paraparai, kundalini is awakened.

பிரசாதங்களை சீடர்களுடன் பகிர்ந்துகொண்ட பிறகு அவற்றை அரதேசி பரதேசிகளுடனும் அன்புடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.  அதனை அடுத்து மனக்குவிப்புடன் மகேஸ்வரியை பராபரையே, அனைத்துக்கும் காரணமான காரணியே, அனைத்தையும் தன்மீது தாங்கும் அம்பரையே, பெண்ணே என்று போற்ற வேண்டும் என்கிறார் அகத்தியர்.


தேவி பூசையைப் போலத் தோன்றும் இந்தப் பாடலுக்கு மற்றொரு உட்பொருளும் உள்ளது.  நிர்மாலயம் என்பது குற்றமற்ற கோயில், சக்கரங்கள் என்று பொருள்படும்.  இங்கு தூப தீபம் காட்டுவது என்பதற்கு ஆக்ஞை சக்கரத்தில் உணர்வை இருத்துவது என்று பொருள். இந்தச் சக்கரம் ஒரு புகை மூட்டத்தைப் போலக் காணப்படும், இங்குதான் ஆத்மா ஒரு தீப வடிவில் புலப்படுகிறது.  இங்கு அன்னத்தையும் பலகாரங்களையும் படைப்பது என்பது முக்கியமான தத்துவங்களையும் பிறவற்றையும் இங்கே படைப்பது, அவற்றை லயமடையச் செய்வது என்று பொருள்.  பல+காரம்- அகாரம், உகாரம், மகாரம், நகாரம் என்பவை.  இந்தப் பொருட்களை அரதேசிக்கும் பரதேசிக்கும் தருவது என்பது உடலில் உள்ள பிராணனுக்கும் பிரபஞ்சப் பிராணனுக்கும் அவற்றை உணவாய்ப் படைப்பது என்று பொருள்.  தேசி என்றால் குதிரை என்று பொருள்,  அரதேசி என்பது உடலில் உள்ள பிராணன், பரதேசி என்பது பரத்தில் உறையும் பிராணன்.  இவ்வாறு இத்தொடர் பிராணாயாமத்தைக் குறிக்கிறது.  இதனையடுத்து மனத்தை ஒருநிலைப்படுத்தி உணர்வினால் ஆதாரத்தைத் தாக்கி பராபரையை, குண்டலினி சக்தியை எழுப்பவேண்டும் என்று கூறுகிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment