Friday, 18 March 2016

349. Stora-4- sakthi as the body.

Verse 349
காணுகின்ற கர்ப்பூர தீபமாதே
கயிலாச வாசமுள்ள கமலத்தாயே
பூணுகின்ற சத்தாகி சித்துமாகிப்
பூரணமாயானந்த மயமுமாகி
ஊணுகின்ற சித்த சுத்தமுமாகி
ஊஞ்சையுள்ள நாதவிந்து கரணையாகித்
தோணுகின்ற வெளி ஒளியின் சோதியாகி
சோதி என்ற ஆதியந்த வடிவுமாமே

Translation:
The Lady who is perceived as the flame of camphor
The lotus mother who resides in Kailasa
As sath (existence) chith (consciousness)
As fully complete, as embodiment of bliss
As firmly planted purity of chittham
With the nadha bindu as the sirisa tree with nodes
As the effulgence of the light of space
The initial and terminal form of the effulgence.

Commentary:
Sakti is the one who is perceived as the flame of camphor at the ajna.  She is the one who takes the form of Sadasiva and other kartha or effectors.  At ajna these principles merge and appear as multicolored form.  The yogin perceives a flame like that of camphor.  Sath chith Ananda is the manifested form of the Divine, as existence consciousness and bliss.  All these three are due to Sakthi.  Kailasa is saharara.  Kundalini Sakti ascends from muladhara to Sahasrara.  There she is said to unite with Siva.  Chith is supreme consciousness while chittam is limited consciousness.  Agatthiyar says that it is nadha and bindu that appear as chakra.  The chakra are nodes in the tree of sushumna.  Sakthi is the effulgence or the light of space.  She is also the beginning and end of the flame. 


சக்தியே ஆக்ஞையில் கற்பூர தீபத்தைப் போலக் கானப்படுபவள்.  அவளே பஞ்சகர்த்தாக்களான சதாசிவன் முதலியவர்களாக உருவெடுத்துக்கொண்டு செயல்புரிகிறாள்.  ஆக்னையில் இந்த தத்துவங்கள் ஒன்றாக சேர்ந்து பஞ்சவர்ணத்துடன் காட்சியளிக்கின்றன.  இதே ஒரு யோகி கற்பூர தீப ஒளியாகப் பார்க்கிறார்.  சத் சித் ஆனந்தம் என்பது இறைவன் இருப்பு உணர்வு ஆனந்தமாக இருக்கும் நிலை.  இந்த மூன்றாக இருக்கும் நிலை சக்தியால் ஏற்படுகிறது.  கைலாயம் என்பது சகஸ்ராரம்.  மூலாதாரத்தில் உள்ள குண்டலினி அன்னை சகஸ்ராரத்துக்குச் சென்று அங்கு சிவனுடன் சேர்கிறாள்.  சித் என்பது பரவுணர்வு.  சித்தம் என்பது அளவுக்குட்பட்ட உணர்வு.  சித்தமே சித்தாகிறது.  நாதமும் பிந்துவும் கணுக்கள் உள்ள மரமாக இருக்கின்றன என்கிறார் அகத்தியர்.  கணுக்கள் என்பது சக்கரங்கள்.  மரம் என்பது சுழுமுனை நாடி.  சக்தியே வெளியின் ஒளி.  அவளே அந்த ஒளியின் ஆரம்பமும் முடிவும். அவளிடமிருந்தே அனைத்தும், ஒளி உள்பட, பிறக்கின்றன, மறைகின்றன.  

No comments:

Post a Comment