Monday, 28 March 2016

373. Conclusion of the section on benefits of mudra

Verse 373
சித்தமுடன் பூசைவழி தன்னில் மைந்தா
தீர்க்கமுடன் பதினாறு முத்திரையைச் சொன்னேன்
சத்தமுள்ள முத்திரைகள் தன்னிலேதான்
சுகமான ஆறுவகை முத்திரைகள் நன்று
பத்தியுடன் ஆறுவகை முத்திரையினாலே
பகுத்தறிந்து ஆதாரத் தெரிசினங்கள் பெற்று
வித்தான பிறவிதனை நன்றாய் நீக்கி
வேதாந்தப் பூரணமாய் விளங்குமுத்தி

Translation:
Son, for the sake of worship with awareness
I described sixteen mudras
Among them
The six (given above) are god
With the help of the six types of mudra, with devotion,
Learn through enquiry, attain the visions
Remove birth effectively
Remain as Vendata poornam, mukthi.

Commentary:
Agatthiyar concludes the section on the benefits of the mudra stating that he has described sixteen mudras that should be used in worship rituals.  Among these the above six are very important.  He tells Pulatthiyar to hold these mudras, understand the truth about everything through enquiry and discrimination, see special visions and remove further births.  He advises Pulatthiyar to remain in the state of Vedanta Poornam, mukthi.


 முத்திரைகளின் விளக்கங்களை இப்பாடலுடன் முடிக்கும் அகத்தியர் புலத்தியரிடம், தான் பூசைக்கான முத்திரைகள் பதினாறைக் கூறியுள்ளேன், அவற்றில் மேற்கூறிய ஆறு முக்கியமானவை, இந்த முத்திரைகளைப் பிடித்து, அனைத்து உண்மைகளையும் பகுத்தறிந்து உணர்ந்து, எல்லா தெரிசனங்களையும் பெற்று பிறவியை விலக்கி வேதாந்தப் பூரணமாக முக்தி நிலையில் நில் என்று கூறுகிறார்.

372. Yoni mudra

Verse 372
யோனி முத்திரை
தானென்ற யோனி முத்திரையைக் கேளு
சங்கையுடன் சொல்லுகிறேன் அங்குஷ்டம் ரெண்டும்
பூணென்ற கனுட்டையடி விரல்படவே வைத்துப்
பொருந்து ரெண்டுங்கைகூப்பிப் பிடித்துக் கொண்டால்
தேனென்ற யோனி முத்திரையைத் தீர்க்கம் பண்ணி
ஊனென்ற ரீங்காரம் மனதிற்கொண்டு
உறுதியுடன் தான் செபிக்க தேவதைகள் சித்தே

Translation:
Yoni mudra
Listen about the yoni mudra
I will tell you in details.  The two thumbs
Place them so that the little finger is below touching them.
Hold the palms together as if saluting
This is the yoni mudra.
Contemplate reen in the mind
Reciting this firmly will bring devata siddhi.

Commentary:
The yoni mudra is described here.  http://www.siththarkal.com/2010/09/blog-post_17.html
Holding this mudra one has to recite reeng to attain devata siddhi.

யோனி முத்திரை இப்பாடலில் விளக்கப்படுகிறது. அதை எவ்வாறு செய்வது என்பதை கீழ்க்காணும் தளத்தில் காண்க http://www.siththarkal.com/2010/09/blog-post_17.html

இந்த முத்திரையைக் கையில் கொண்டு ரீங் என்று மனதில் உச்சரித்தால் சகல தேவதா சித்தி கிட்டும் என்கிறார் அகத்தியர்.

371. Thiruvini mudra


Verse 371
திருவினி முத்திரை
காணவே திருவினி முத்திரையைக் கேளு
கைகூட்டி தற்சனி இருவிரலும் விரித்துப்
பூணவே மத்திமையாங் கனிஷ்ட மூன்றும்
பேதமுடன் விரலழுந்த திராவினி முத்திரையாம்
பேணவே முத்திரையைக் குருவருளால் கண்டு
பிலமாக வங்கென்று தியானித்தாக்கால்
தோணவே சகலசித்தி தானே உண்டாய்
சுத்தமுடன் வசீகரமாய் வாழுந்தானே

Translation:
Thiruvini mudra
Listen about thiruvini mudra
Bringing the palms together, spreading the index finger
The middle finger and the little finger
Pressing them down is thiravini mudra.
See this mudra with guru’s grace
If vang is contemplated
All the siddhi will occur
It will get enchanted (vasikaram)

Commentary:
This verse describes how to hold  the thiruvini mudra.  Please see below for the mudra
http://www.siththarkal.com/2010/09/blog-post_16.htmlDhanvantri’s descritption of this mudra seems to be in line with Agatthiyar’s explanation.
The mantra for this mudra is vang.  It confers all the siddhis, as we saw above.

இந்தப் பாடல் திருவினி முத்திரையை எவ்வாறு கையில் பிடிப்பது என்று விளக்குகிறது.  இந்த முத்திரையை கீழ்க்காணும் வலைத்தளத்தில் பார்க்கவும். http://www.siththarkal.com/2010/09/blog-post_16.html

 இதற்கான மந்திரம் வங் என்பது.  அது சகல சித்திகளையும் அருளும் என்கிறார் அகத்தியர்.  தன்வந்திரி சித்தரின் விளக்கங்கள் அகத்தியரின் விளக்கங்களை ஒத்திருக்கிறது.

370. Mohini mudra- how to hold it

Verse 370
மோகினி முத்திரை
பாரடா மோகினி முத்திரையைச் சொல்வேன்
பதிவாக இருகையுங் கூப்பிக்கொண்டு
நேரடா தற்சன் இருவிரலும் விரித்து
நேரான அங்குஷ்ட மத்தியிலும் படவே
கூறடா மத்தியிலும் அங்கணுட முனைபடவே
கையறிந்து கொண்டதினால் மோகினி முத்திரையாம்
சேரடா முத்திரையை அறிந்துகொண்டு
தீர்க்கமுடன் ஓமென்று செபித்துக் காணே

Translation:
Mohini mudra
See, I will tell you about mohini mudra
Joining the palms together facing each other
Spread the two fingers of tharjan (index finger)
Let it touch the middle finger
Let the (ring finger) touch the tip of the ankushta (thumb)
If the hand is placed so it is mohini mudra
Knowing this mudra
Recite Om firmly and see it.

Commentary:
The mohini or yogini mudra is shown below.

Agatthiyar describes how this mudra should be held in this verse.  Holding this mudra one should chant Om.


மோகினி முத்திரையை எவ்வாறு கையில் கொள்ளுவது என்று அகத்தியர் இப்பாடலில் கூறுகிறார்.  இந்த முத்திரையைப் பிடித்து ஒருவர் ஓம் என்று உச்சரிக்க வேண்டும் என்கிறார் அவர்.

369. Refer to Saumya sagaram for details on mudra says Agatthiyar

Verse 369 
காணவே முத்திரைக்கு விபரஞ் சொல்வேன்
கைலாசம் இடங்கொள்ளாது என்று சொல்லி
பூணவே ஆறுவகை முத்திரையில் மைந்தா
புனிதமுடன் மூன்றுவகை முத்திரையைக் கேளு
தோணவே சித்தாதி நூல்கள் தோறுஞ்
சுகமான முத்திரையை சொன்னதல்லால்
பேணவே விபரமது சொல்லவில்லை
பேரான சவுமிய சாகரத்தைப் பாரே

Translation:
I will tell you details about the mudras
Saying that then there will not be any place in Kailasa
Son, to hold the six types of mudra
Listen about the three mudras now
In all the siddha books
They have mentioned the (names of) mudras
But not the details.
See saumya sagaram.

Commentary:
Now Agatthiyar begins to describe how to hold these mudras.  He says that the siddha books mention the name of the mudras but not the details on how to hold them.  He says that one should consult saumya sagaram for information.


முத்திரைகளின் பயன்களைக் கூறிய பிறகு அகத்தியர் அந்த முத்திரைகளை எவ்வாறு கொள்வது என்று கூறத் தொடங்குகிறார்.  பிற சித்த நூல்கள் இந்த முத்திரைகளின் பெயர்களைக் கூறினாலும் அவற்றை எவ்வாறு கொள்வது என்று கூறுவதில்லை. அந்த விவரங்களை அறிந்துகொள்ள ஒருவர் சௌமிய சாகரத்தைப் பார்க்கவேண்டும் என்கிறார் அகத்தியர்.

Sunday, 27 March 2016

367. Guru mudra

Verse 367
சித்தியுள்ள முத்திரைகள் ஆறுக்குந்தான்
சிவாய குருமுத்திரையைச் செப்பக் கேளு
பத்தியுடன் சொல்லுகிறேன் புருவ மத்தில்
பதிவாக இருகரமும் ஒன்றாய்க்கூட்டி
சுத்தமுடன் லாடவெளிக் கண்ணில் நேரே
தொழுது மனம் நினைத்தபடி சுத்தமாக
முத்தியுடன் வரங்கொடுக்க வேணுமென்று
மோனமுடன் மனோன் மணியைப் பூசை பண்ணே

Translation:
For the six mudra that grant siddhi
Listen to me talk about sivaya guru mudra
I will say this with devotion.  In the eyebrows
Join the two hands together
In front of the eye of lalata, space
Praying, with the mind pure,
Requesting to grant boons and mukthi,
Worship manonmani, with silence.

Commentary:
The previous mudra, mohini mudra corresponded to the ajna cakra.  Here Agatthiyar is describing the mudra for the guru cakra.  This mudra expands as the above mentioned six mudras.  The guru mudra is also called Anjali mudra where the two palms are joined together.  This mudra has many great benefits including balancing the right and left hemisphere of the brain.  It is held at the level of the brows and not at the level of the heart or above the head.  These may confer other benefits but Agatthiyar specifies the mudra in this context to be held at the brow level.  The yogin has to pray sincerely with a pure heart and seek boons and mukthi from Manonmani.  The state upto Manonmani and suddha maya occurs through the yogin’s effort.  Beyond this the other superior states are reached by the yogin automatically.

முந்தைய பாடலில் குறிப்பிடப்பட்ட மோகினி முத்திரை ஆக்ஞா சக்கரத்துக்கானது.  இப்பாடலில் அகத்தியர் மேற்கூறிய ஆறு முத்திரைகளுக்கும் காரணமான சிவாய குரு முத்திரையைப் பற்றிக் கூறுகிறார். இந்த முத்திரை ஆக்ஞைக்கு மேலே உள்ள குருசக்கரத்துக்கானது.  இதற்கு ஒரு யோகி இரு கரங்களையும் கூப்பி லலாட வெளிக் கண் எனப்படும் நெற்றிக்கண் இருப்பதாக எண்ணப்படும் இடத்தில் வைத்து, தூய மனத்துடன் மௌனமாக மனோமணித் தாயை எல்லா வரங்களையும் முத்தியையும் அளிக்குமாறு வேண்டுகிறார்.  

366. Yogini or mohini mudra

Verse 366
ஆமப்பா மோகினி முத்திரையைச் செய்து
அருள் பெருகும் புருவமதில் மனக்கண் சாற்றி
ஓமப்பா அகாரமுடன் உகாரங் கூட்டி
உத்தமனே மவுன மென்ற யகாரத்தேகில்
காமப்பால் கானல்பால் சித்தியாகுங்
கருணைவளர் மனோன்மணியுஞ் சித்தியாகும்
வாமப்பா பூரணமுஞ் சித்தியாகும்
மகத்தான மால்பதமுஞ் சித்திதானே

Translation:
Yes, performing mohini mudra
Placing the mind’s eye where grace flows
Om son, joining the akara and ukara
The supreme one! If you go to the yakara the silence
Desire (kaama paal) and delusion (kaanal paal) siddhi will be attained
The merciful Manonmani siddhi will be attained
The vaama, poornam will be attained
The glorious locus of maal (maya) will be attained.

Commentary:
The next and last mudra takes the yogin to the supreme state.  The mudra is named mohini here while in verse 360 it was named yogini.  Agatthiyar does not mention a special mantra for this locus.  He mentions that the akara and ukara should be joined together, that is, saguna brahman who appears as the manifested world, sakti, should be joined with nirguna brahman, siva.  The yogin then goes to the thoughtless state, the state of silence, the yakara of namasivaya.  Then all the desires and delusions due to maya will be put to rest.  Manonmani or the supreme state beyond the mind will be attained.  Vaamai or kundalini, the poornam will be attained and the yogin goes to the suddha maya state.


அடுத்த முத்திரையும் கடைசி முத்திரையுமான மோகினி முத்திரையைப் பற்றி இப்பாடலில் கூறுகிறார் அகத்தியர்.  பாடல் 360 ல் இந்த முத்திரை யோகினி முத்திரை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த முத்திரைக்கு ஒரு குறிப்பிட்ட பீஜ மந்திரங்கள் எதையும் குறிப்பிடவில்லை.  ஆனால் ஓம்காரத்தின் அகாரமும் உகாரமும் ஒன்றாகக் கூட்டப்பட வேண்டும் என்கிறார் அவர்.  அதாவது நிர்குண பிரம்மனும் உலகமாக சக்தியாகக் காணப்படும் சகுணப் பிரம்மனும் ஒன்றாகக் கூட்டப்பட வேண்டும் என்கிறார்.  இவ்வாறு செய்து ஒரு யோகி யகாரம் எனப்படும் மவுன நிலையை அடைந்தால் அவரது ஆசைகள் எனப்படும் காமப்பால், மாயை ஏற்படுத்தும் மயக்கங்கள் எனப்படும் கானல் பால் ஆகியவற்றின் சித்தி எபடும் என்றும் மனமானது உன்மணி நிலையை அடையும் என்றும் வாமையான குண்டலினி பூரணத்தின் சித்தி ஏற்படும் என்றும் அந்த யோகி சுத்த மாயை நிலையை அடைவார் என்றும் கூறுகிறார் அகத்தியர்.

365. Sobini mudra

Verse 365
பாரப்பா சோபினிமுத் திரையினாலே
பத்தியுடன் ஆமென்று தியானஞ் செய்தால்
நேரப்பா சொல்லுகிறேன் சருவ லோகம்
நிசமான ஆதாரஞ் சித்தியாகும்
போமப்பா மேருகிரி தீபஞ் சித்தி
மெய்ஞ்ஞான மயேஸ்பரரும் மயேஸ்பரியுஞ்சித்தி
சாரப்பா சோபினி முத்திரையினாலே
கண்ணடங்காப் போத சிவயோகமாமே

Translation:
See, by the sobini mudra
If it is contemplated with devotion as aam
I will tell you, all the worlds
The true adhaara siddhi will be attained
The meru giri deepa siddhi
Meijnana maheswara and maheswari siddhi
Due to the sobini mudra
The bodham that overflows the eyes, sivayogam will be attained

Commentary:
The sobini mudra is held with contemplation of aam.  Then all the worlds will come under one’s control.  The adhara siddhi, meru giri deepa siddhi, maheswara and maheswari siddhi are all attained by this mudra.  The bodham which cannot be contained by the eye will be experienced.

Agatthiyar has mentioned two system while describing the cakras.  In one he talks about Brahma and Sarasvati being at the muladhara and Rudra and Rudri are at manipuraka.  In the other system Rudra and Rudri are contemplated in the anahata cakra.  Thus Maheswara and Maheswari are contemplated at the vishuddhi cakra.  The mudras seem to correspond to the second system.  

சோபினி முத்திரையைப் பிடிக்கும்போது ஆம் என்று தியானிக்க வேண்டும்.  அப்போது எல்லா உலகங்கள், ஆதாரங்கள், மேரு கிரி தீபம், மகேஸ்வரன் மகேஸ்வரி சித்தி ஆகியவையும் கண்ணுக்கடங்கா போதமும் கிட்டுகின்றன என்கிறார் அகத்தியர்.


சக்கரங்களையும் அவற்றின் தெய்வங்களையும் குறிக்கும்போது அகத்தியர் இருவித வழிகளை விளக்கியுள்ளார். ஒன்றில் மூலாதாரத்துக்கு அதிபதி பிரம்மா சரஸ்வதி, ருத்திரன் ருத்திரி மணிபூரகத்துக்கு அதிபதிகள் என்கிறார். மற்றொன்றில் ருத்திரனும் ருத்திரியும் அனாகத சக்கரத்தில் குறிக்கப்படுகின்றனர், மகேஸ்வரனும் மகேஸ்வரியும் விசுத்தி சக்கரத்தில் குறிக்கப்படுகின்றனர்.  பூசை வழிபாட்டின்போது இரண்டாம் வழிமுறையைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்று அவர் குறிப்பதாகத் தெரிகிறது.

364. Thiraavini mudra

Verse 364
காணவே திராவினி முத்திரையைக் கொண்டு
கருணையுடன் வங்கென்று தியானஞ் செய்யில்
பூணவே ருத்திரன் முதல் சகல செந்தும்
புவியாளும் மறவனோடு வசியமாகுந்த்
தோணவே சந்தான சவுபாக்கியங்கள்
சத்தமுடன் ஐந்துருவுஞ் சித்தியாகும்
பேணவே ருத்திரியுஞ் சத்தியோடு
பிலவான திராவினி யால் சித்தி பாரே

Translation:
Holding the thiraavini mudra
If vang is contemplated
All the lifeforms including Rudra
The ruler of the world, the King included, will be enchanted (vasiyam)
All the wealth, riches and offspring
The five qualities starting with sabdha siddhi will be attained
Along with rudri and sakthi
Their siddhi will be attained by thiraavini.

Commentary:
Agatthiyar is talking about the next mudra, thiraavini.  Some call it thiruvini mudra.  He says that the mantra that should be contemplated with this mudra is vang.  Then vasiyam or enchantment of all life forms including Rudra and his consort Rudri will be attained.  Siddhi of the  five subtle elements, sabdha, rasa, rupa, sparsha and gandha will also be attained.  Thus, this mudra seems to be granting manipuraka cakra siddhi.


அடுத்து அகத்தியர் திராவினி முத்திரையைப் பற்றிப் பேசுகிறார்.  இந்த முத்திரையைப் பிடிக்கும்போது வங் என்ற மந்திரத்தை தியானம் செய்யவேண்டும் என்கிறார் அவர்.  அதனால் எல்லா உயிர்களும், அரசன், ருத்திரன், ருத்திரி உள்பட வசியமாவார் என்கிறார் அவர்.  மேலும் ஐந்து தன்மாத்திரங்கலான சப்தம், ஸ்பர்சம் ரசம் ரூபம் கந்தம் என்ற ஐந்தும் வசியமாகும் என்கிறார் அவர்.  இந்த ஐந்தாகத்தான் ஒரு ஜீவன் இந்த உலகைப் பார்க்கிறது.  இதனால் பொறிகளின் சித்தியுடன் புலன்களின் சித்தியும் கிட்டுகிறது என்பது தெரிகிறது.  இது மணிபூரக சக்கர சித்தியை அருளுவதாகத் தெரிகிறது.

363. Benefits of Yoni mudra

Verse 363
செய்யப்பா யோனி முத்திரையைக் கொண்டு
தீர்க்கமுடன் றீங்கென்று தியானஞ் செய்யில்
மெய்யப்பா தேவாதி தேவர்களுஞ் சித்தி
மேலான அண்டமோடு புவனஞ் சித்தி
மையப்பா மைஎன்ற சுழினை சித்தி
மாலோடு லக்ஷ்மியுங் கணங்கள் சித்தி
பையப்பா யோனி முத் திரையைப் பெற்றுப்
பத்தியுடன் சிவயோகம் பணிந்து காணே

Translation:
Hold the yoni mudra
And contemplate reeng
It is true, the devadi deva siddhi
Andam and bhuvanam siddhi
The middle, the suzhinai siddhi
Along with Maal, Lakshmi and gana siddhi
Holding the yoni mudra
See the sivayoga bowing down with devotion.

Commentary:
Agatthiyar is describing the benefits of these mudras in the first section and describes how this mudras should be held later.  So we will see the benefits that he lists here first.
He says that one should hold the yoni mudra while contemplating on reeng.  Then one would attain deva siddhi, bhuvana siddhi, suzhinai or kundalini siddhi, Vishnu, Lakshmi and gana siddhi,  Thus, the yoni mudra grants accomplishments that are represented by the svadhishtana cakra.


அகத்தியர் முதலில் முத்திரைகளின் பலன்களைக் கூறிவிட்டு அதன் பிறகு அவற்றை எவ்வாறு செய்வது என்று கூறுகிறார். அதனால் நாம் முதலில் யோனி முத்திரையின் பலனைப் பார்ப்போம்.  இந்த முத்திரையைக் கொள்ளும்போது ஒருவர் ரீங் என்று தியானம் செய்யவேண்டும் என்கிறார் அகத்தியர்.  அவ்வாறு செய்தால் தேவாதி தேவ சித்தி, புவன சித்தி, சுழினை அல்லது குண்டலினி சித்தி, விஷ்ணு, லட்சமி மற்றும் கணங்களின் சித்தி ஆகியவற்றைப் பெறலாம் என்கிறார் அவர்.  இதனால் இந்த முத்திரை சுவாதிஷ்டான சக்கரம் குறிக்கும் தத்துவங்களின் சித்தியைப் பெற்றுத் தருவதாகத் தெரிகிறது.

362. Sthapana mudra

Verse 362
சித்தான தாவான முத்திரையைச் செய்து
தீர்க்கமுடன் கிலிஎன்று தியானஞ் செய்து
வத்தாத பூரணமாஞ் சிவயோக சித்தி
மகத்தான கற்பூர தீபமது சித்தி
வித்தான பிரம்மமொடு சரஸ்பதியுஞ்சித்தி
வேதமயமான சிவா போதஞ் சித்தி
சத்தான தாபன முத் திரையின் மகிமை
சங்கையுடன் கண்டு சிவ யோகஞ் செய்யே

Translation:
Performing the “thaavaana” mudra
Contemplating kili
The poornam, sivayoga siddhi
The siddhi of the lamp of camphor
Brahma and Sarasvathi siddhi
The embodiment of Veda, the siva bodham siddhi
This is the glory of the sthapana mudra
Perform sivayoga seeing this.

Commentary:
Agatthiyar is talking about the sthapana mudra in this verse.  It is turning the palms to face down with all the fingers extended, the thumb not being visible.  While aavaahana means invoking sthapana means establishing.  Agatthiyar says that the mantra for this is kili.  When this mudra is performed contemplating the mantra it grants sivay yoga siddhi, the siddhi of atma darsanam, siva bodha siddhi and the siddhi of brahma and sarasvathi.  This mudra is performed along with sivayogam.


ஸ்தாபன முத்திரையைப் பற்றி இப்பாடலில் பேசுகிறார் அகத்தியர்.  ஆவாகனம் என்பது ஒரு தேவதையை ஒன்றில் வரவழைப்பது என்றால் ஸ்தாபனம் என்பது அதை அங்கு குடிகொள்ளச் செய்வது.  ஸ்தாபன முத்திரைக்கு கைகள் தரையை நோக்கி வைக்கப்பட்டு விரல்கள் நீட்டி கட்டைவிரல் உள்ளே அடக்கிவைக்கப்படுகிறது.  இந்த முத்திரை செய்யும்போது தியானிக்க வேண்டிய மந்திரம் கிலி என்கிறார் அகத்தியர்.  இந்த முத்திரையினால் ஒருவர் சிவயோக சித்தி, ஆத்மசித்தி, பிரம்மா மற்றும் சரஸ்வதி சித்தி, சிவபோத சித்தி ஆகியவற்றைப் பெறுவார் என்கும் அவர் கூறுகிறார்.

Saturday, 26 March 2016

361. aavarahan (aavaahana ?) mudra

Verse 361
சாற்றுவது அவரவர்கள் முத்திரையைக் கண்டு
சங்கையுடன் ஓமென்று தியானஞ் செய்யில்
பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ்சித்தி
பதிவான சகலநிலை சாஸ்திரமுஞ்சித்தி
தேற்றியதோர் ஆதார மூலமது சித்தி
திருவாசியான தொரு வாசியது சித்தி
தோத்திரமாய் நின்றதொரு பூசையது சித்தி
சுகமான ஆவரகன் முத்திரையின் சித்தே

Translation:
Perform the mudras specific for each
When contemplating om
Parthibha!  All the crores of mantra siddhi will be attained
All the states, sastra siddhi
Adhara mula siddhi
The thiruvaasi, the vaasi siddhi
The worship, the puja siddhi
All the siddhis through the aavaragan mudra.

Commentary:
Avahana mudra is where the palm is placed facing up at the heart level with the thumb touching the base of the ring finger.  Agatthiyar says that this mudra grants all types of siddhis- mantra, puja, sastra, muladhara, vaasi siddhis. 


ஆவாகன முத்திரை என்பது கைகளை மேல்நோக்கி இதய உயரத்தில் கட்டைவிரல் மோதிர விரலின் அடியைத் தொடும்படி வைப்பது.  இந்த முத்திரை எல்லா வித சித்திகளையும்-மந்திர, பூசா, வாசி, மூலாதார சித்திகளையும் பெற்றுத் தரும் என்கிறார் அகத்தியர். 

360. Mudras-2

Verse 360
ஒன்றான திருவினி முத்திரை தானொன்று
உறுதியுள்ள சோபினி முத்திரை தானொன்று
நன்றான யோகினி முத்திரை தானொன்று
நாட்டமுடன் ஆறுவகை முத்திரையை மைந்தா
குன்றாத சிவயோக சற்குருவினாலே
குறியறிந்து ஆறுவகை முத்திரையைப் பெற்று
நின்றாடு மயேஸ்பரியைப் பூசை செய்யில்
நீ மகனே ஆறுவகை முத்திரையைச் சாற்றே

Translation:
The thiruvini mudra is one
The firm shobini mudra is one
The good yogini mudra is one
These are the six types of mudras, son.
Due to the sivayoga sathguru
Knowing the sign, obtaining the six types of mudra
When worshipping the maheswari
You place the six types of mudra, son.

Commentary:
Agatthiyar lists the other three mudras in this verse.  They are thiruvini, shobini and yogini mudras.  He explains the details of this mudra in a later verse.  Here he says that these mudras are held as a part of Maheswari worship ritual and that they should be learned from a sathguru. 


மற்ற மூன்று முத்திரைகளை இப்பாடலில் குறிப்பிடுகிறார் அகத்தியர். அவை திருவினி முத்திரை, சோபினி முத்திரை மற்றும் யோகினி முத்திரை என்பவை.  இந்த ஆறு வகை முத்திரைகளை ஒருவர் சத்குருவிடமிருந்து அறிந்துகொண்டு மகேஸ்வரி பூசையின்போது சாற்ற வேண்டும் என்கிறார் அகத்தியர்.  பூசையின் ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு முத்திரை உள்ளது.  அந்த முத்திரையின் மூலம் வழிபாட்டைச் செய்பவர் தனது உள்ளக் கிடக்கையை கடவுளுக்குத் தெரியப்படுத்துகிறார்.

Thursday, 24 March 2016

359. Mudras-1

verse 359
ஆறு வகை முத்திரை விபரம்

சோதிஎன்ற மயேஸ்பரியைப் பூசை செய்யில்
சுகமான முத்திரையை சொல்லக் கேளு
ஆதி என்ற முத்திரைதான் ஆர்தான் காண்பார்
அருள்பெருகு முத்திரையை மனதிற் கொண்டு
நீதியுடன் ஆறுவகை முத்திரையைக் கேளு
நிசமான ஆவரகன் முத்திரைதான் ஒன்று
ஓதியதோர் தாவான முத்திரைதான் ஒன்று
உத்தமனே யோனி என்ற முத்திரைதான் ஒன்று

Translation:
Six types of mudras

While performing the worship of Maheswari
Listen to the types of mudra (that one holds)
Who will see the aadhi mudra
Holding the mudra that brings forth grace, mentally
Listen about the six mudras
The truthful aavarakan mudra is one
The recited thaavaana mudra is one
The supreme one!yoni mudra is one.

Commentary:
Murdras or hand gestures are used in several contexts such as yoga, rituals and dance.  Agatthiyar is talking about mudras in ritualistic worship of Sakthi. He talks about six types of mudras in this section beginning with a list.  He also adds that the aadi mudra or the primal seal is beyond normal perception.  One should hold this in mind while performing the six mudras externally.  The three mudras listed in this verse are aavarakan, thaavaana and yoni mudra.  One wonders whether aavarakan is actually aavaahana mudra and thaavaana mudra is sthaapana mudra.

பல சூழ்நிலைகளில் முத்திரைகள் அல்லது கைக்குறிக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.  யோக முத்திரைகள், வழிபாட்டு முத்திரைகள், நாட்டிய முத்திரைகள் என்பவை இவற்றுள் சில.  இந்தப் பகுதியில் அகத்தியர் தேவி வழிபாட்டில் பயன்படுத்தப்படும் முத்திரைகளைக் கூறுகிறார்.  அவை ஆறு வகைகள் என்று கூறும் அகத்தியர் ஆதியான முத்திரையைக் காணக்கூடியவர் யாரும் இல்லை என்றும் இந்த முத்திரையை மனத்தில் கொண்டு இனி வரும் ஆறு முத்திரைகளை ஒருவர் வெளியில் காட்ட வேண்டும் என்கிறார்.  அந்த ஆறு முத்திரைகளில் முதல் மூன்று ஆவரகன், தாவான மற்றும் யோனி முத்திரைகள் என்கிறார் அவர்.  ஆவரகன் என்பது ஆவாகன முத்திரை என்றும் தாவான முத்திரை என்பது தாவன அல்லது ஸ்தாபன முத்திரை என்றும் இருக்கலாம் என்று தோன்றுகிறது.