Sunday 21 February 2016

324. Darkness, light and space explained

Verse 324
பாரப்பா இருளொளியும் வெளி மூன்றப்பா
பதிவான தேகமதில் கண்டுகொள்ளு
சாரப்பா இம்மூன்றின் நிலையைச் சொல்வேன்
சரீரமென்ற சத்தியடா இருள்தானப்பா
நேரப்பா அறிவான ஒளியின் கண்ணு
நிசமான வெளியத்த மாயாமாயம்
காரப்பா மாய்கை வெளி கண்ணோசூக்ஷங்
கருவான கண்மறைந்தால் இருள் தான்காணே

Translation:
See son, darkness, light and space are the three
See them in the locus, the body
I will tell you about the status of these three, you associate with them
The body, the sakthi, is the darkness
The eye is the light of awareness
Truthful space is the wonder created by maya
See son, the space of maya, the eye is subtle
If the eye hides then it is only darkness.

Commentary:
Agatthiyar is describing three very important concepts in this verse.  They are darkness, light and space.  This would explain the order of emanation he listed in the previous verses.  He says, the body which is sakthi is the darkness.  The common method of reference is the body is sakthi and the soul is siva. The body has the truth, Siva present in it but it is not obvious.  Hence, it is said to be dark.  One does not know the truth about the sakthi who appears as the body.  The light is light of consciousness, awareness.  When this light is present sakthi becomes visible.  If the light is switched off there is only darkness.  Space, according to Agatthiyar, is the effect of maya.  Thus, space is gross, awareness or eye is subtle and sakthi is causal.

இப்பாடலில் அகத்தியர் மூன்று முக்கியமான கருத்துக்களை விளக்குகிறார்.  அவை இருள், ஒளி, வெளி என்பவை.  இருள் என்பது உடலாக உள்ள சக்தி.  சித்த சம்பிரதாயத்தில் சக்தி உடல் சிவன் உயிர் என்று கருதுவது வழக்கம்.  உடல் என்பது ஒரு உருவம், ஒரு நிலை.  இந்த நிலையை அறிய உதவுவது அறிவு என்ற ஒளி, அதுவே கண்.  இதைத்தான் மனக்கண் ஞானக் கண் என்று கூறுகிறோம்.  இந்தக் கண் திறந்திருக்கும்வரை, ஒளி இருக்கும்வரை சக்தி தெரிகிறது.  வெளி என்பது மாயை.  சுத்த மாயையும் அசுத்த மாயையும் ஏற்படுத்தும் தோற்றம் என்று கூறுகிறார் அகத்தியர். 

இங்கு நாம் ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.  கண் என்பது அறிவு என்று கூறும் அகத்தியர் அது பரநிலை என்று கூறவில்லை.  ஒன்றை அறிவது என்பது வேறு அதுவாகவே ஆவது என்பது வேறு.  அறியும் நிலையில் கண் திறந்திருக்கிறது.  அதுவாகவே ஆகும் நிலையில் அறிவு தேவையில்லை,  அதனால்தான் உச்ச நிலையான பர நிலையும் இருள் தாழ்ந்த அறிவற்ற நிலையான கேவலமும் அருள்.  ஒன்று அனைத்தையும் அறிந்த அனைத்துமாகவே ஆன இருள் மற்றது ஒன்றையும் அறியாத அஞ்ஞான இருள்.

No comments:

Post a Comment