Sunday, 7 February 2016

297. Karana pratyahara

Verse 297
பேசுவேன் அந்தரங்க கரணம் தன்னை
பிரபஞ்ச மாய்கைதன்னை நீக்கி மைந்தா
தேசு வென்ற காரியமாம் வஸ்து தன்னைத்
தெரிந்து கொண்டு சங்கற்ப விகற்ப மெல்லாம்
ஆசுவென்ற மரைப்பித்து விராணதாரை
அங்கமுடன் பண்ணுகிற யோகந்தன்னில்
வீசுகிறேன் ஆகமென்ற வேதாந்தத்தை
விபரமுடன் ஞானமதில் நிறுத்தல்நன்றே

Translation:
I will speak.  The anthakarana
The prapancha maya- removing it, son
The tejas, the entity, the karya (effect)
Knowing about it and sankalpa, vikalpa
Hiding them as faulty, the flow of prana
In its union with the body parts
I am expanding the Vedanta, tha agama
Stopping it carefully in jnana is good.

Commentary:
Agatthiyar says that the union of the flow of prana with the body parts and removing the influence of the anthakarana or the internal senses (the modifications of mind-manas, buddhi, chittham and ahamakara) as prapancha maya, as the effect of the cause the thejas or fire element and knowing about the original effects and its transformation (senses collect the data and it is processed by the mind and its modifications) is karana prathyahara.  This is the extension of Vedanta and Agama the textual knowledge into experiencial knowledge and this should be stopped at the jnana or wisdom stage.  Jnana is the the stage of realizing, experiencing the textual knowledge and making it one’s own experience.


பிராணதாரை அல்லது பிராணனின் பெரும் ஓட்டத்தை முன் பாட்டில் கூறிய அங்கங்களுடன் கூட்டி அந்தக்கரணம் எனப்படும் மனத்தின் பகுதிகளான மனஸ், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவற்றை பிரபஞ்ச மாயையின் காரியம், தேஜஸ் அல்லது தீ தத்துவத்தின் காரியம் என்று விலக்கி வேதாந்த ஆகமங்களை அனுபவபூர்வமாக உணர்ந்து ஞான நிலையில் நிறுத்துவதே கரண பிரத்தியாகாரம் என்கிறார் அகத்தியர்.  அறிவு என்பது நூல்களிலிருந்து பெறுவது, ஞானம் என்பது அந்த அறிவை அனுபவமாக்கித் தனதாக்கிக்கொள்வது.  புத்தங்களில் கொடுக்கப்பட்டுள்ள அறிவான புலன்களின் தாக்கத்தை விலக்குவது என்பதை இங்கு அகத்தியர் கூறியபடி செய்வது அதை ஞான நிலைக்கு உயர்த்துகிறது. 

No comments:

Post a Comment