Wednesday, 10 February 2016

298. Kaamya pratyahara and Sarvasanga pratyahara

Verse 298
நன்றான காரியந்தான் பிரத்தியாகாரம்
நன்மையுடன் தனதான்னியம் பொன்னும் மண்ணும்
நின்றாடும் புத்திரருஞ் சகலவித்துங்கண்டால்
நேர்மையுடன் நாகம்போல் காணு மக்காள்
ஒன்றான வைராக்யம் வந்துதானால்
உத்தமனே விடுதல் மெத்த உசத்தி நன்று
பன்றான சருவங்க பிரத்தியாகாரம்
பதிவித்து வாம வேதாந்த பலனைக்காரே

Translation:
Pratyaharam is a good action
Wealth, crops, gold and land
Offspring and all other wealth- if they are seen
People! Consider them like snake
If such a mental resolution occurs
The Supreme One!  Leaving them all is very good
Pratyaharam of everything (sarvanga pratyahara)-
Do so and see the benefits of the reversal of benefits, of Vedanta.

Commentary:
Agatthiyar says that through pratyahara one should develop the mental resolution to forsake all material gains and attachments.  This is kaamya pratyahara or giving up desires. One should look at them like a snake, ready to bite and cause death.  He also adds that one should practice pratyahara and enjoy the benefits of vaama.  This is sarvasangha pratyahara. This term “vaama” means opposite or reverse.  Vedanta means terminus of Veda, the last part.  The first part of Veda are the karma kanda that gives procedures for worldly benefits.  So by this term Agatthiyar means that the benefits of the Vedanta should be placed first and that of the karma kanda should be placed last, that is, Vedanta should be given higher priority than karma kanda.



பிரத்தியாகாரத்தின் மூலம் ஒருவர் மன வைராக்கியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் அகத்தியர்.  அவ்வாறு வைராக்கியம் ஏற்பட ஒருவர் தனது பற்றுக்கள், விருப்பங்கள் ஆசைகள் ஆகிய அனைத்தையும் ஒரு பாம்பைப்போலக் கருத வேண்டும் என்கிறார் அவர்.  இதுவே காமிய பிரத்தியாகாரம். இவ்வாறு அனைத்தையும் விட்டுவிட்டு வாம வேதாந்த பலனை அனுபவிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர். இதுவே சர்வ சங்க பிரத்தியாகாரம்.  வாம என்றால் எதிர்மறை.  வேதத்தில் முதல் பாகம் கர்ம காண்டம் எனப்படுகிறது.  இதில் சம்சாரத்தில் வளமையுடன் இருப்பதற்கான வழிகள் கூறப்படுகின்றன.  வேதத்தின் கடைசி பாகம், அந்தம், வேதாந்தம்.  வாமம் என்றால் கடைசியில் உள்ள வேதந்தாந்தை முதலாவதாக, அதாவது, கர்ம காண்டத்தைத் தள்ளிவிட்டு வேதாந்தபாகத்தின் பலனை அனுபவிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment