Tuesday 16 February 2016

309. Dhyana at the dvadasantha


Verse 309
அத்தோயுதம்
ஆச்சப்பா அத்தோய தியானங்கேளு
அண்டரண்ட புவனமெல்லாம் தாமென்றெண்ணி
மூச்சப்பா சகலவுயிர் தாமென்றெண்ணி
முடிவில்லா மந்திரமுந் தாமென்றெண்ணி
நீச்சப்பா பஞ்ச கர்த்தாள் தாமென்றெண்ணி
நிசமான பரம்வெளிதான் தாமென்றெண்ணி
பேச்சப்பா பேசாத மவுனந் தானாய்
பேரண்டத் துட்பொருளாய்த் தியானஞ் செய்யே

Translation:
Atthoyutham
Next hear about atthoya dhyana
Considering all the universes as self
The breath, all the life forms as self
Considering all the endless mantras as self
Considering all the five that act as self
The truthful param space as self
As the speechless silence as self
As the entity of the supreme universe, contemplate so.

Commentary:
This verse describes the dhyana at the dvadasantha, the param veli.  The yogin contemplates self as all the universes, all life forms, all mantras, the pancha kartha- the deities that perform the five acts, creation, sustenance, dissolution, grace and concealment, silence, the entire supreme universe.


இப்பாடலில் அகத்தியர் பரம் வெளி தியானத்தைக் கூறுகிறார். இந்த தியானத்தில் அந்த யோகி தானே பிரபஞ்சமாக, மந்திரங்களாக, எல்லா உயிர்களாக, ஐந்து செயல்களான சிருஷ்டி, ஸ்திதி, லயம், மறைத்தல், அருளால் என்பவற்றைச் செய்யும் தேவர்களாக, பேச்சற்ற மவுனமாகத் தியானிக்கிறார்.  தானே பேரண்டவஸ்து என்று தியானிக்கிறார்.   

No comments:

Post a Comment