Saturday 20 February 2016

318.Difficulty of these steps

Verse 318
தன்னைத்தான் தானறிந்து பார்க்கும்போது
தத்துவமாய் நின்றதொரு தொண்ணூற்றாறும்
எண்ணத்தான் துலையாது ஆசாபாசம்
என் சொல்வேன் பஞ்சகர்த்தாள் பஞ்சபூதம்
கண்ணைத்தான் தானறிந்து கண்ணில் காணும்
கலையான ரவி மதியும் சுடர்கள் மூன்று
உண்ணத்தான் உகந்தமணம் ஊனிப்பார்க்க
உண்மைஎன்ற நிச்சயத்தை உரைக்கொண்ணாதே

Translation:
Knowing Self by oneself
The ninety six principles
Desires and attachments will not leave by mere thinking
What can I say!  The five effectors, the five elements
Knowing the eye, will be seen in the eye
The three kalaa- ravi, madhi and flame
Wishing to consume, planting the mind and see it
The truth, the definitude- one cannot verbalise it.

Commentary:
Even though the steps of ashtanga yoga seem easy to achieve, Agatthiyar describes how difficult they actually are.  He says the ninety six princples which lead to desire and attachment will not leave a person easily.  The ninety six principles comprise of 36 tattva (24 atma tattva (5+5 senses, 5+5-elements and their actions, 4 modifications of the mind), 7 vidya tattva (kalaa, kaala, niyathi, raga etc) 5 siva tattva) and 60 thaathvika or derivatives of tattva.  For example, blood is a derivative of water principle.  These lead to soul’s experiences which lead to attachment and desires.  These principles are only instruments, the one who enjoys the experiences through the instruments is the soul.
The eye he refers to is the eye of discrimination.  There is a wrong notion that the material eye that we have will reveal us the truth about principles.  This is not correct.  Ravi, madhi and agni are generally interpreted as sun, moon and fire.  Actually they are not the material sun, moon and fire we see in nature.  They are instruments kalaai through which knowledge is acquired.  Agatthiyar finishes the verse stating that the experience at the pinnacle of Samadhi is beyond verbal description.

அஷ்டாங்க யோகத்தைப் பயிற்சி செய்யாமல் வெறுமே படிப்பவர்கள் அதன் படிகள் எவ்வளவு எளியவையாக இருக்கின்றன என்று எண்ணலாம்.  அத்தகைய கருத்து எவ்வளவு தவறு என்று அகத்தியர் இதில் உள்ள கஷ்டங்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் நமக்குப் புரிய வைக்கிறார்.  தொண்ணூற்றாறு தத்துவங்கள் என்பவை 36 தத்துவங்கள், மற்றும் 60 தாத்துவிகங்கள் என்பவற்றின் கூட்டாகும்.  முப்பத்தாறு தத்துவங்கள் என்பவை இருபத்து நான்கு ஆத்ம தத்துவங்கள், ஏழு வித்யா தத்துவங்கள் மற்றும் ஐந்து சிவதத்துவங்கள்.  இவற்றிலிருந்து தோன்றுபவை தாத்துவிகங்கள்.  உதாரணமாக ரத்தம் என்பது நீர்த்தத்துவத்திலிருந்து தோன்றுகிறது.  இந்த தத்துவங்களின் மூலம் ஆத்மா அனுபவங்களைப் பெறுகின்றது.  இந்த அனுபவங்கள் ஆசை பாசத்துக்கு வித்திடுகின்றன.  இந்த ஆசை பாசங்கள் எளிதில் ஒருவரை விட்டு விலகமாட்டா என்று அகத்தியர்  கூறுகிறார். 

அடுத்து அவர் கண்ணில் காணலாம் என்று கூறுகிறார். அவர் கூறுவது ஸ்தூல கண்ணல்ல.  மூன்றாவது கண் எனப்படும் உயருணர்வே இங்கு குறிப்பிடப்படும் கண்ணாகும்.  அதேபோல் ரவி, மதி மற்றும் அக்னி என்பவை வெளியுலகில் உள்ள சூரியன், சந்திரன் மற்றும் தீ அல்ல.  இவை அறிவைத் தரும் கலைகளாகும்.  சமாதியின் உச்சியில் பெரும் அனுபவத்தை வார்த்தைகளால் விளக்க முடியாதது என்று கூறி அகத்தியர் இப்பாடலை முடிக்கிறார்.

No comments:

Post a Comment