Wednesday, 10 February 2016

300. Dhaarana

Verse 300
தாரணை விபரம்
கேளப்பா சரீரத்தில் பஞ்ச பூதம்
கிருபையுடன் சூடுகிற தாரணத்துள்ளே
சூளப்பா மண்டலத்தில் வர்ண மூர்த்திச்
சுகமாகத் தானிருக்க பிராண தாரை
வாளப்பா பதிவான மூலத்துள்ளே
வணக்கமுடன் பிராணனைத்தான் தரிசிக்கப் பணி
ஆளப்பா சிரமத்தோடு உண்ணப்பண்ணும்
அப்பனே ராப்பகலாய்க் காணுங் காணே

Translation:
Details about Dharana
Listen son, the five elements in the body
Within the dhaarana
The multi color form that remains in the mandala
Being there comfortably, the flow of prana
Within the muladhara
Making them see the prana with humility
Make it consume them with difficulty
Night will appear as day, see it.

Commentary:
Agatthiyar described prathyahara as offering the sensual functions to prana.  The sensual functions are effects of the cause, the five elements.  Dharana is offering the causes to prana.  The five elements have their own color.  They remain in the body as various entities.  Offering the five elements to be consumed by the prana is dharana.  Agatthiyar says that this is a difficult process.  It is easy to get rid of the effects, the causes are more difficult to deal with.  If this is done Agatthiyar says night will appear as day, that is, it will be bright effulgence.  Thus, through these steps of ashtanga yoga Agatthiyar is describing how to convert a sthula deha into prana deha or the body of prana.

பிரத்தியாகாரம் என்பது புலன்களை, இந்திரியங்களை பிராணனுக்கு அர்ப்பணிப்பது.  அதாவது அவற்றின் செயலைப் பிராணனைச் செய்ய வைப்பது.  புலன்கள் இந்திரியங்கள் என்பவை காரியங்கள்.  அவற்றின் காரணங்கள் பஞ்ச பூதங்கள்.  இந்த பஞ்ச பூதங்களிலிருந்து தோன்றியவையே இந்திரியங்கள், புலன்கள்.  சித்தர்கள் சம்பிரதாயத்தில் தத்துவங்கள் 36, தாத்விகங்கள் அல்லது தத்துவங்களிலிருந்து தோன்றியவை 60.  இவையே ஒரு உடலாக நிற்கின்றன. பஞ்ச பூதங்கள் தத்துவங்கள்.  இந்த தாரணை என்னும் படியில் இந்த பஞ்ச பூதங்கள் பிராணனிடம் விடப்படுகின்றன.  இவ்வாறு செய்யும்போது இரவு பகலாகத் தெரியும் என்கிறார் அகத்தியர், அதாவர் எங்கும் பிரகாசமாகும் என்கிறார் அவர்.  இவ்வாறு மேற்கூறிய படிகளில் அகத்தியர் பருவுடலை பிராண தேகமாக மாற்றும் வழியைக் கூறுகிறார்.

No comments:

Post a Comment