Thursday 4 February 2016

293. Prathyahara

Verse 293
பிரத்தியாகார வகை
ஆச்சப்பா சொல்லுகிறேன் பிரத்தியாகாரம்
அப்பனே வாசினையின் வழியிற் சென்று
மூச்சப்பா நடத்தி வைக்கும் இந்திரியப் பாம்பு
முனையறிந்து மரிக்கிறதே பிரத்தியாகாரம்
நீச்சப்பா நிலையான பிரத்தியாகாரம்
நிசமாகும் ஆறுவிதம் உண்டுபாரு
பேச்சப்பா பேச்சறிந்து ஆறுவிதந்தன்னைப்
பிலமான புலத்தியனே சொல்லக் கேளே

Translation:
Types of Prathyahara
Yes, Son, I will tell you about prathyahara
Son, going in the path of vaasi
The breath will direct. The snake, the indriya
Knowing their terminus and dying is prathyahara
The firm prathyahara
There are six types, see.
Speech, let us speak about the six types
Pulathiya, listen to me describe them.

Commentary:
Agatthiyar is beginning to describe prathyahara from this verse onwards.  Prathyahara is using the prana and killing the effects of the senses.  For this the yogin uses vaasi or life force that was raised in the previous step, pranayama.  In other words, prathyahara is removing the control of senses over a person.  He calls the indriya or senses as snakes as they cause experiences that are life threatening, they make one lose the knowledge about oneself.   He says that there are six types of prathyahara.

இப்பாடலிலிருந்து அகத்தியர் பிரத்தியாகாரத்தை விளக்கத் தொடங்குகிறார். பிரத்தியாகாரம் என்பது வாசியின் துணையோடு பிராணனைப் பயன்படுத்தி இந்திரியங்கள் நம்மேல் கொண்டுள்ள கட்டுப்பாட்டை விலக்குவது.  இந்திரியங்களைப் பாம்பு என்கிறார் அகத்தியர்.  அவை தரும் அனுபவங்கள் பாம்பின் விஷத்தைப் போல அபாயகரமானவை, ஒருவரைத் தனது உண்மை நிலையை மறக்கச் செய்பவை.  இந்த இந்திரியங்களின் முனையை அறிந்து அவற்றை மரிக்கச் செய்ய வேண்டும் என்கிறார் அகத்தியர்.  இந்த பிரத்தியாகாரம் ஆறு விதமாகும் என்று கூறுகிறார் அவர்.

No comments:

Post a Comment