Sunday 7 February 2016

295. Prana pratyahara

Verse 295
பாரப்பா இந்திரியந் தன்தன் போக்காய்ப்
பதியைவிட்டு போகாமற் சமாதி தன்னில்
நேரப்பா பூட்டறுத்து நின்றால் மக்காள்
நேர்மையுடன் பிராண னென்ற பிரத்தியாகாரஞ்
சேரப்பா நாடிசுத்தி செய்தபின்பு
சிவசிவா உச்சிமுதற் உருவந் தொட்டு
காரப்பா தோத்திரமுந்  தொக்கு சச்சு
கருவான சுங்குடனே ஆக்கிராணங்காணே

Translation:
See son, the senses going in their own way
Without leaving their locus in Samadhi
If remaining cutting the locks
Truthfully by the prana, then it is prathyahara
Join after performing nadi suddhi
Sivasivaa, from the top in the form,
See son, ears, skin, eyes
The essence, tongue and nose

Commentary:
The senses, ears (srothram), skin (tvak), eyes (kshashu), tongue (jihva) and nose (aagraanam) go their own way in ordinary life.  In Samadhi they are brought under control and their influence is removed  This is made possible after nadi shuddhi and with the help of prana.  Agatthiyar says this is prana prathyahara. 


சாதாரண வாழ்வில் புலன்கள் எனப்படும் காதுகள் (ஸ்ரோத்ரம்), தோல் (த்வக்) கண்கள் (சட்சு), நாக்கு (ஜிஹ்வா) மற்றும் மூக்கு (ஆக்கிராணம்) என்ற ஐந்தும் தத்தம் வழியே போகின்றன.  ஆனால் சமாதியில் அவை உள்முகப்படுத்தப்பட்டு அவற்றின் தாக்கம் ஒழிக்கப்படுகிறது.  இது நாடி சுத்திக்குப் பிறகு பிராணனின் உதவியால் நடைபெறுகிறது.  இதுதான் பிராண பிரத்தியாகாரம் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment