Wednesday, 17 February 2016

311. Savirkarpa samadhi

Verse 311
ஆச்சப்பா தத்துவலய சமாதிசொன்னேன்
அரகரா சவிகற்ப சமாதிகேளு
நீச்சப்பா நிலையறிந்து வாசியாலே
நிறைந்தபரி பூரணமாய்த் தீபம் பார்க்கில்
காச்சப்பா கருவிகர ணாதிஎன்ற
கசடறுத்து வெளியொளி யாய்க் கண்டுகொண்டால்
பேச்சப்பா சவ்விகற்ப சமாதியாச்சு
பிலமான நிறுவிக ற்ப சமாதி கேளே

Translation:
I told you about tattva laya Samadhi
Araharaa! Hear about savikarpa Samadhi
Knowing the status, through vaasi
If the light is seen, as fully complete
The senses and sense organs
Cutting them as dregs, if it is seens as light of space
It became the savirkarpa Samadhi
Next hear about nirvikarpa Samadhi.

Commentary
In the previous verse Agatthiyar described tattva laya Samadhi as seeing the knowledge obtained through senses as fallacy and focusing on consciousness, which appears as smoky light.  In this verse he describes the savikarpa Samadhi.  For this, the true status of the senses and their instruments is perceived as dregs or dirt.  Consciousness is perceived as veLi oLi or space light, with the help of vaasi.  The space and light are expressions of consciousness.

Let us see Konkanar’s explanation of this Samadhi.

He says that there are two types of savikarpa Samadhi.  They are satthaanu vidya and thriya vidya or thrisaanu vidya.  Satthaanu Samadhi is hearning the noise of birds within while remaining in tattva laya Samadhi.  Thrisaanu Samadhi is remaining merged in self.

முந்தைய பாடலில் அகத்தியர் தத்துவ லய சமாதியை விளக்கும்போது பத்து வித கருவிகள் அல்லது பொறிகளை பொய் என்று கண்டு ஆத்மா அல்லது உயருணர்வை கற்பூரப் புகையாகக் காண்பது என்றார்.  இப்பாடலில் கருவிகளை மட்டுமல்லாமல் காரணங்களையும் பொய் என்று பார்க்கவேண்டும் என்றும் வாசியினால் உயருணர்வை வெளி ஒளி என்று, பரிபூரணமாய்ப் பார்க்க வேண்டும் என்றும் அதுவே சவிகற்ப சமாதி என்றும் அவர் கூறுகிறார்.
இதனை அடுத்து அவர் நிர்விகற்ப சமாதியை விளக்கப்போகிறார்.

கொங்கணவர் சவிகற்ப சமாதியில் இருவகை உள்ளன என்றும் அவை சத்தானு சமாதி என்றும் திரைய அல்லது திரிசானு சமாதி என்றும் கூறுகிறார். சத்தானு சமாதி என்பது தத்துவலய சமாதியில் இருக்கும்போது உள்ளே பட்சிகளின் ஓசையைக் கேட்பது என்றும் திரிசானு சமாதி என்பது ஆத்மாவை எண்ணியவாறு இருப்பது, அனுசந்தானம் செய்வது என்றும் அவர் கூறுகிறார்.

No comments:

Post a Comment