Monday 15 February 2016

305. Rudra's dhyana

Verse 305
ஆச்சப்பா ருத்திரனை தியானஞ்செய்து
அரகரா அஞ்செழுத்தும் ஆயுதங்களோடு
காச்சப்பா குண்டலமுங் கிரீடம் வைத்து
கருணையுள்ள ருத்திரியும் வாமபாகம்
பேச்சப்பா தானிருத்தி மவுனமாக
பெருமையுடன் இருதயத்தில் பேணிப்பார்க்க
மூச்சப்பா அடங்கி நின்ற தியானமாச்சு
முத்தியுடனே தனித்து இருந்துபாரே

Translation:
Next, contemplate on Rudra
Araharaa!  With the five letters and weapons
Adorn the earrings and crown
With the merciful Rudri on the left side
Stopping speech, with silence
If contemplated in the heart
It will become the dhyana where the breath has been stopped
Remain alone, along with mukthi, and see this.

Commentary:
In the above two dhyana, that of Brahma and Maal, distraction of the external world are removed.  Agatthiyar mentions in Maal dhyana that that eye must be cut off, which means external distractions through the senses are eliminated.  The question, why bother about external senses when the previous steps of ashtanga yoga have brought them under prana’s control, arises.  Here Agatthiyar is referring to thoughts brought about based on sensual experience.  We should remember that dhyana is a mental process while the previous steps were physical processeses.  Thus, thoughts due to sensual experiences were stopped during Maal dhyana.  Here, in Rudra dhyana or contemplation on Rudra, the Lord of the manipuraka cakra, the breath is stopped on reaches the kumbaka state.  For this dhyana Rudra with his five letters of namasivaya, his ornaments and weapons and his consort Rudri are contemplated in the heart.  When this done effectively the breath stops by itself, speech (mental chatter) stops by itself.  Movement of breath initiates thoughts which manifest as mental and physical speech.  When breath stops in kumbaka speech also stops on its own.


முந்தைய இரு தியானங்களில், பிரம்ம தியானம், விஷ்ணு தியானங்களில் வெளியுலகின் தாக்கம் விலக்கப்பட்டது. மால் தியானத்தில் கண் அரியப்பட்டது, அதாவது புலன்களின் தாக்கம் விலக்கப்பட்டது என்று அகத்தியர் கூறினார்.  அஷ்டாங்க யோகத்தின் முந்தைய படிகளில் புலன்கள் பிராணனின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டனவே அவற்றைப் பற்றி மீண்டும் பேசுவானேன் என்ற கேள்வி நமக்கு இப்போது எழுகிறது.  இதற்குப் பதிலளிக்க நாம் இந்தப் படி எவ்வாறு முந்தைய படிகளிலிருந்து வேறுபடுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்.  முந்தைய படிகள் உடலளவில் நிகழ்த்தப்பட்டவை.  இப்படி மனத்தினால் நிகழ்த்தப்படுகிறது.  புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவந்தாலும் அவற்றின் தாக்கம் எழுப்பும் எண்ணங்கள் அதன் பிறகும் நமது மனதில் சுழலுகின்றன.  இப்பாடலில் அதையும் நிறுத்த வேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.  மூச்சுக்கும் எண்ணங்களுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது.  இந்த தியானத்தில் மூச்சு தானாகவே கும்பக நிலையை அடையும்போது எண்ணங்களும் நின்றுபோகின்றன.  இதைத்தான் அகத்தியர் பேச்சற்ற மௌன நிலை என்கிறார்.  பேச்சின் எல்லா நிலைகளும் இங்கு நிறுத்தப்படுகின்றன.  அதற்கு மூன்றாம் சக்கரமான மணிபூரகத்தின் அதிபதியான ருத்திரன் அவரது ஆபரணங்கள், ஆயுதங்கள், அவரது துணைவி ருத்திரி ஆகியோருடன் தியானிக்கப்படுகிறார்.  

No comments:

Post a Comment