Friday 12 February 2016

302. Dhyana- introduction

Verse 302
தியான விபரம்
பாரப்பா லோகத்தில் பிரமந்தாயென்று
பதிவாக நிச்சயித்து மனதுபூண்டு
நேரப்பா அறிவல்லோ தாரணை யுமாச்சு
நிலையான தியானமதின் நேர்மை கேளு
காரப்பா அகிலமெல்லாம் போதமாக
கண்கண்ட சடமெல்லாம் அகண்டமாகி
நேரப்பா வெளியெல்லாம் நிர்மலமாய்க்காண
நேர்மையுள்ள தியானமிது நினைவாய்க் காணே

Translation:
Details about dhyana
See son, Brahman in this world is the mother
Deciding so firmly in the mind
The awareness became dharana
See the universe as wisdom (bodham)
All the insentient entities visible as universes
To see the supreme space as nirmalam (faultless)
See about the dhayana with mental focus.

Commentary:
Dharana is terminating the influence of the senses and bringing them under prana’s control using awareness or “arivu” which can be interpreted as buddhi also.  Dhyana is see everything as nirmalam or faultless and as bodham or wisdom.  The world including its sentient and insentient entities are seen as bodham and the supreme space is perceived to be faultless or nirmalam.

Agatthiyar described the different types of dhyana in verses 255 and 256.  They are:
Deha dhyana, shat aadhaara dhyana, mandala dhyana, brahma dhyana, dhyana of maal, dhyana of rudra, devaadhi dhyana, visvam dhyana, pranava dhyana, niradhara dhyana,
Deha dhyana is seeing all the bodies as akanda and the space as light
Shat adhara dhyana includes the dhyana of Brahma, vishnu, rudra, maheswara, sadasiva and ajna.
Vishnu dhyana- as green color, with conch and disc, with flowers with Lakshmi on the left,
Rudra- with five letter, kundala, crown, rudri on the left, remaining in silence and perceiving in the heart, holding the breath.
Maheswara dhyana- feeling happy like the space that saw the darkness, kundala, crown, maheswari on left, with amritam, with sukha jeeva prana kalaa being pure, in the heart. 
Sadasiva dhyana- as a form with five colors, manonmani on the left, with deva gana surrounding, in the lotus of the heart.
Mandala dhyana is meditation of the three mandala- agni, surya and chandra mandala.
The above is also called devaadhi dhyanam.
Visva dhyana- considering the prapancha as Self

Pranava and niradhara dhyana- considering all the bhuvana, life forms, mantra, pancha kartha, param space, as silence, and as the entity within the macrocosm.


தாரணை என்பது புலன்களை பிராணனின் கட்டுப்பாட்டின்கீழ் அறிவினால் கொண்டுவருவது என்றால் தியானம் என்பது உலகை போதமாகவும் வெட்ட வெளியை நிர்மலமாகவும் பார்ப்பது என்கிறார் அகத்தியர்.  இதன் விவரங்களை அடுத்த பாடல்களில் கூறப் போகிறார். 

தியான வகைகளை அகத்தியர் பாடல்கள் 255, 256ல் பட்டியலிட்டார்.  அவை தேக தியானம், ஷட்ஆதார தியானம், மண்டல தியானம், தேவாதி தியானம், விஸ்வ தியானம் பிரணவ தியானம் மற்றும் நிராதார தியானம்.  
தேக தியானம் என்பது எல்லா உடல்களையும் அகண்டமாகவும் வெளியை ஒளியாகவும் தியானிப்பது.
ஷட் ஆதார தியானம் என்பது ஆறு சக்கரங்களை தியானிப்பது தேவாதி தியானம் என்பது அந்த சக்கரங்களுக்கு அதிதேவதைகளை தியானிப்பது.  
மண்டல தியானம் என்பது அக்னி, சூரிய சந்திர மண்டலங்களைத் தியானிப்பது.
விஸ்வ தியானம் என்பது பிரபஞ்சத்தைத் தான் என தியானிப்பது
பிரணவ தியானம் மற்றும் நிராதாரதியானங்கள் என்பவை புவனங்களையும் எல்லா உயிர்கள், மந்திரங்கள், பஞ்ச கர்த்தா , பரம் வெளி ஆகியவற்றை மௌனமாகவும் பேரண்டத்துள் இருக்கும் வஸ்துவாக தியானிப்பது.

No comments:

Post a Comment