Wednesday 10 February 2016

292. Pranayama-conclusion, benefits

Verse 292
காணவே எட்டினிலே திட்டமானால்
கர்மமென்ற தீவினைகள் காணாதோடும்
பூணவே ஆதாரஞ் சித்தியாகும்
பூரணமும் காரணமும் பொருந்துமையா
தோணவே சொரூபமதாய் சோதியாகும்
சுக சீவ பிராணகலை சோபிக்கும்பாரு
பேணவே பிராணாயம் பெலத்துதானால்
பேரண்டஞ் சித்தண்டந் தான் தானாச்சே

Translation:
If the eight are firmed up
The ill effects, karma will run away from sight
The substrata (adhara) will become activated
Fully complete (poornam) and primary cause (kaaranam) will fit together
The form will become that of effulgence
The pranakala of blissful soul will become glorious
If pranayama becomes strong
The macrocosm and microcosm will become one.

Commentary:
Agathiyar describes the effects of the eight stage pranayama.  He says that karma that give ill effects will run away.  The adhara or chakra will attain siddhi, that is, they will start giving an effect.  The Supreme Self and the limited self will become one.  The form will become that of effulgence.  The pranakala will become prominent.  If this becomes strong then the microcosm and macrocosm will be in harmony.

எட்டு நிலைகளைக் கொண்டபிராணாயாமத்தைச் செய்தால் ஏற்படும் பயன்களை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர்.  இந்த பிராணாயாமத்தினால் கர்மம் என்னும் தீவினைகள் விலகி ஓடிவிடும், ஆதாரங்கள் எனப்படும் சக்கரங்கள் சித்தியடையும் அதாவது செயல்பட்டு தமது விளைவுகளைத் தரும், சீவ பிராண கலை தனது பெருமையுடன் விளங்கும் என்கிறார் அவர்.  மேலும், இந்தப் பிராணாயம் வலுத்தால்  அண்டம் எனப்படும் பிரபஞ்சமும் பிண்டம் எனப்படும் உடலும் சேர்ந்திசைந்து ஒன்றாகும் என்கிறார் அவர்.


No comments:

Post a Comment