Thursday, 18 February 2016

315. Aarooda samadhi- crossing suddha maya

Verse 315
காணவே ஆரூட சமாதிதன்னை
கருணையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு
பூணவே தத்துவலய சமாதிபெற்று
பேணவே நிருவிகற்ப சமாதிபெற்று
பிலமதாக சஞ்சார சமாதியாக
தோணவே ஆரூட சமாதிகொண்டால்
சுத்தமென்ன அசுத்தமென்ன ரெண்டுமொன்றே

Translation:
To see the aarooda Samadhi
The merciful Pulathiya!  Listen to me say it
Attaining the tattva laya Samadhi
Attaining the nirvikarpa Samadhi
Becoming sanchara Samadhi
If aarooda Samadhi is attained
There is no distinction as pure and impure.

Commentary:
Agatthiyar lists the steps of the five types of Samadhi.  One attains the tattva laya Samadhi first, then savikarpa Samadhi, nirvikarpa Samadhi and then sanchara Samadhi.  When one reaches the last stage, aarooda Samadhi Agatthiyar says that there is no distinction as pure and impure.  Here this may correspond to the impure and pure maya.  Thus the yogin reaches the state beyond suddha maya.  In this stage the yogin crosses siva tattva that suddha maya creates.


இப்பாடலில் அகத்தியர் சமாதிகளின் வரிசையை மீண்டும் கூறுகிறார்.  ஒரு யோகி முதலில் தத்துவ லய சமாதியை அடைகிறார்.  அதன் பிறகு சவிகற்ப சமாதி, நிர்விகற்ப சமாதி மற்றும் சஞ்சார சமாதியை அடைகிறார்.  இதன் பிறகு அவர் ஆரூட சமாதியை அடையும்போது சுத்தம் அசுத்தம் என்று இரண்டு இல்லை என்கிறார் அகத்தியர்.  இது சுத்த மாயை அசுத்த மாயையைக் குறிக்கும்.  இவ்வாறு அந்த யோகி சுத்த மாயையையும் கடக்கிறார்.  இந்த நிலை சுத்த மாயை தோற்றுவிக்கும் சிவதத்துவங்களைக் கடந்த நிலையாகும். 

No comments:

Post a Comment