Wednesday, 3 February 2016

291. Stage 5,6,7 and 8 of Pranayama

Verse 291
பட்சமுடன் தன்னறிவே சாட்சியானால்
பரிந்து பிரகாசிக்கும் ஐந்தாம் பட்சம்
இச்சையுடன் குண்டலியிற் சத்தங் கொள்ளும்
என்மகனே சொல்லுகிறேன் ஆறாம் பட்சம்
அச்சமற ஏழுக்குள் மைந்தா கேளு
ஆகாச கெவுனமடா அதிகமாகும்
மெச்சவே தூரதிஷ்டி அறியப் பண்ணும்
மெய்ஞ்ஞானம் எட்டினுள் மேன்மைதானே

Translation:
Along with these stages if the self becomes the witness
It will glow in the fifth stage
The kundalini will become activated
My son!  I will tell you  (this is) the sixth stage
For fear to go away, listen son, about the seventh stage
Astral travel (awareness of the space) will increase
It will make distant perceptions possible
Meijnana (truth wisdom) within the eighth, only glory.

Commentary:
Agatthiyar is describing the stages five, six, seven and eight of pranayama here.  After perception of atmajyothi or the self in stage four, this self becomes the witness, the yogin reaches the stage of witness.  Then kundalini is stirred up and this is stage six.  The seventh stage is described as increase in aakasa kevunam.  This is usually described as astral travel.   However, these words have another interesting meaning.  Aakasa is the substratum on which all the manifestations exist.  If awareness of this substratum is increased in the seventh stage one becomes of everything that exists on this substratum.  One need not physically travel to these far off places to know about them. One knows them because one knows about the base on which they exist.  Thus kevunam becomes awareness, the awareness of the soul.  Aakasha is not the sky alone, it is the space principle.  When manifestation begins the first principles to occur is space.  Time emerges after space.  Thus space is the first step in manifestion.  As per the principle, “what is in kariya or effect should be present in the karana or the cause” by knowing aakasha one knows all the manifestations.  Thus, the yogin attains completely expanded knowledge/awareness.
Thus, kevuna maargam is kavana margam or path of awareness.

பிராணாயாமத்தின் ஐந்து, ஆறு, ஏழு மற்றும் எட்டு நிலைகளை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர்.  ஆத்மஜோதியை நான்காம் நிலையில் பார்த்த பிறகு ஆத்மா சாட்சி நிலையை ஐந்தாம் படியில் அடைகிறது.  இதனை அடுத்த ஆறாம் நிலையில் குண்டலினி சக்தி எழுப்பப்படுகிறது.  ஏழாம் நிலை என்பது ஆகாச கெவுனத்தின் அதிகரிப்பு என்கிறார் அகத்தியர். இது பொதுவாக ஆகாசத்தில் பிரயாணிப்பதாகக் கருதப்படுகிறது.  இந்தத் தொடர் மற்றொரு சுவாரஸ்ஸியமான பொருளையும் தருகிறது.  ஆகாசம் என்பது வானம் அல்ல.  இது space principle அல்லது வெளி.  இந்த வெளி பிற தத்துவங்கள் இருக்க இடமளிக்கிறது.  உதாரணமாக நாம் ஒன்றை நினைக்கிறோம் என்றால் அது இருக்கும் ஒரு இடமே வெளி,  அது பருப்பொருள் சார்ந்த இடமல்ல.  ஒன்றைக் குறிக்க பயன்படுத்துப்படும் ஒரு அடையாளம்.  இவ்வாறே வெளியும் காலமும் செயல்படுகின்றன.  இந்த வெளி அனைத்துக்கும் இடமளிப்பதால் இதைப் பற்றிய அறிவு ஏற்படும்போது அது உள்ளடக்கும் எல்லா பொருள்களைப் பற்றிய அறிவு ஏற்படுகிறது.  இந்த வெளியே அனைத்துத் தத்துவங்களுக்கும் ஆதியாக இருப்பது.  காரணத்தில் உள்ளதே காரியத்தில் உள்ளது என்ற தத்துவத்தை மனத்தில் கொண்டால் வெளியைப் பற்றிய அறிவு அதன் காரியமான பிறவற்றைப் பற்றிய அறிவைக் கொடுக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
கெவுனம் என்றால் கவனம்.  ஆங்கிலத்தில் awareness எனப்படுவது.  இந்த குவிந்த கவனத்தால் ஒரு யோகி எல்லாவற்றைப் பற்றியும் அறிகிறார்.  இவ்வாறு கெவுன மார்க்கம் என்றால் கவனத்தினால் ஒரு இடத்தில் இருப்பதைத்தான், பருப்பொருளால் ஆன உடலைத் தூக்கிக்கொண்டு அங்கு போகவேண்டும் என்பதில்லை, கவனத்தால் அங்கு இருக்கலாம் என்று சித்தர்கள் குறிப்பிடுகிறார்களோ என்று தோன்றுகிறது. 

இதனை அடுத்த நிலை மெய்ஞ்ஞானம் என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment