Monday, 22 February 2016

329. Worship the niranjanam

Verse 329
ஓதுவது புருவநடு சுழியில் நின்று
உத்தமனே நூற்றெட்டு உருவே செய்தால்
மாதுவளர் ஆதார பூசைதானும்
மார்க்கமுடன் சுத்தமதாய் சித்தியாச்சு
கோதுபழு தில்லாத ஆறாதாரம்
குருவான மூலமடா மேலாதாரம்
நீதியுள்ள ஆதாரம் ஈராறுக்கும்
நிரஞ்சனமாய் நின்ற பூரணந்தான் பாரே

Translation:
Remaining at the whorl in the middle of the brow
The Supreme One!  If it is chanted hundred and eight times
The adhara puja which makes the lady grow
Will be accomplished perfectly
The faultless six adhara
Guru of them is the adhara on the top, it is the origin
For the adhara of twelve/dvadasantha
See the poornam which is niranjanam (nirguna).

Commentary:
Agatthiyar continues the previous verse on ajna worship.  One has to recite the mantra om reeng am 108 times while remaining at the ajna.  This worship will rise the lady, kundalini who travels through the adhara.  Ajna or the top adhara is the guru of all other adharas.  The twelve adhara that he talks about are the six within the body and six beyond.  It may also mean the dvadasnatha or the adhara that is twelve finger spans above the crown.

Niranjana means devoid of objectivication, that is not ascribing a character to something.  This way one will see the poorna or the Supreme in its original state, not in a state of objectification such as Sadasiva or Maheswara. 

முந்தைய பாடலில் துவக்கிய ஆக்ஞை பூஜையை இப்பாடலிலும் தொடருகிறார் அகத்தியர்.  ஓம் ரீங் அம் என்ற மந்திரத்தை ஆக்னையில் இருந்துகொண்டு ஜெபிக்க வேண்டும் என்று கூறிய அவர் அதை நூற்றிஎட்டு முறை செபிக்க வேண்டும் என்கிறார்.  இவ்வாறு செய்தால் மாது எனப்படும் குண்டலினி, வாலை எழுவாள், வளருவாள் ஏனெனில் ஆக்னையே பிற ஆதாரங்களுக்குக் குரு என்றும் அவள் ஆதாரம் பன்னிரண்டு எனப்படும் துவாதசாந்தத்தை அடைவாள் என்றும் அவர் கூறுகிறார்.

நிரஞ்சனம் என்றால் ஒரு பொருளை ஒரு தன்மையதாகக் கருதுவது.  நிரஞ்சனமாக நின்று பூஜை செய்வது என்றால் குறிப்பிட்ட குணங்கள் கொண்டதாக வழிபடாமல் நிர்குண ரூபமாக வழிபடுவது.

328. Mantra for ajna worship

Verse 328
பண்ணப்பா பூசைவிதி கண்ணே சூக்ஷம்
பாலகனே சூக்ஷமென்றசுடரில் நின்று
நண்ணப்பா ஆதார மூல பாடம்
நாதாந்த மூலமடா நந்திவீட்டில்
மோக்ஷமென்ற அகாரத்தைச் சொல்லக் கேளு
விண்ணப்பா நிறைந்திருந்த புருவ மேவி
மேன்மை பெற ஓம் ரீங் அம் என்று ஓதே.

Translation:
Perform worship son, the eye is the subtlety
The young one!  Remaining the flame, the subtlety
Seek the lesson of adhara mula.
In the house of Nandhi, it is the origin of terminus of nadhantha
Listen to akara, the moksha, being uttered
Going to the brows, the place filled by sky
Recite Om reeng am.

Commentary:
Following Ashtanga yoga Agatthiyar is describing mantra yoga here.  After raising the consciousness to ajna cakra the yogin remains in the state of awareness, the triple flames, and seeks the state beyond nadhantha.  He seeks the lesson about the adhara mula.  At the ajna, the house of Nandi, he listens to akara, the letter for nirguna brahman, being uttered and he recites om reeng am.


அஷ்டாங்க யோகத்தை விளக்கிய பிறகு இப்பாடலில் அகத்தியர் மந்திர யோகத்தை விளக்குகிறார்.  ஆக்ஞையை அடைந்த ஒரு யோகி அங்கு சுடர் நிலையில், அறிவு நிலையில் நின்று நாதாந்த மூலத்தையும் ஆதார மூலங்களைப் பற்றிய பாடங்களையும் தேடுகிறார்.  நந்தியின் வீடான ஆக்ஞையில் மோக்ஷ அட்சரமான அகாரம் உச்சரிக்கக் கேட்கிறார்.  தான் ஓம் ரீங் அம் என்று ஓதுகிறார் என்கிறார் அகத்தியர்.

327. Worship of Ajna

Verse 327
ஆச்சப்பா அருள் நிறைந்த புருவ மத்தி
அண்டபகி ரண்டமென்ற ஆதிவீடு
பேச்சப்பா பெருகிநின்ற ஆதி வீட்டில்
பிலமான பஞ்ச கரத்தாள் பஞ்ச சத்தி
மூச்சப்பா நிறைந்ததொரு சுடர்கள் மூன்று
 முனையான சுழிமுனைதான் மோக்ஷ மென்று
போச்சப்பா அந்திடமே சொந்தமாக
புத்தியுடன் அந்திடத்தைப் பூசை பண்ணே
Translation:
Yes son the middle of the brow
Is the primal house of universes
Within the primal house
The support- the five performers and five energies (Sakthi)
The breath- the triple flames
The tip- that of the whorl as moksha
It went there as the original place
Worship that place with buddhi (discrimination).

Commentary:
Agatthiyar is talking about the greatness of the ajna cakra.  He says it the primary locus of manifestation- the unierses, the pancha kartha and their sakthis, the triple flame of agni, surya and Chandra, the breath.  It is the terminus of the whorld-kundalini.  Thus the ajna is the origin and end of everything.  He tells Pulatthiyar to worship this locus as one’s own house, with buddhi or discrimination f permanent and temporary entities.


ஆக்ஞா சக்கரத்தை இப்பாடலில் போற்றுகிறார் அகத்தியர்.  அதுவே அனைத்துக்கும் மூலம், அனைத்தும் ஒடுங்கும் இடமும் அதுவே என்கிறார் அவர்.  அங்குதான் எல்லா அண்டங்கள் (வெளி), பஞ்ச கர்த்தாக்களும் அவர்களது சக்திகளும் (செயல்பாட்டை ஏற்படுத்துபவர்கள்), முச்சுடர்களும் (அறிவு என்னும் விளக்கு), சுழிமுனையின் உச்சி (முடியும் இடம் துவக்க இடம்) ஆகியவை உள்ளன என்றும் அந்த இடத்தை ஒருவர் தனது சொந்த வீடாக எண்ணி புத்தியுடன் பூசை செய்யவேண்டும் என்கிறார் அகத்தியர்.

Sunday, 21 February 2016

326. Three mandala, triple flame- explained

Verse 326
தன்னுள்ளே தானறிந்து தன்னைப் பார்க்க
தனதான மண்டலங்கள் மூன்றினுள்ளே
கண்ணுள்ளே பொரிதனிலே தன்னைக் கண்டேன்
கருணைவர வெளிதனிலே தின்னக் கண்டேன்
விண்ணுள்ளே முச்சுடரைக் கண்டே அந்த
வேதாந்த முச்சுடரின் ஒளியைப் பார்க்கில்
எண்ணுள்ளே இருளதனில் நின்று பார்க்கில்
ஏகாந்த நிராமயமாம் அருள் தானாச்சே

Translation:
Knowing the self within oneself and seeing oneself so
Within the three mandala
I saw the self in the spark in the eye
With mercy occurring, I saw it eat in space
I saw the triple flame in the sky
When the light of that triple flame was perceived
While standing within me in the darkness
It became Ekantha niramaya arul (the singular self-supported grace).

Commentary:
The three mandala, agni, surya and Chandra mandala, represent the space or veLi.  Agatthiyar says that he says the self in the spark of the eye, which is the light of awareness.  The triple flames of surya, Chandra and agni were seen in the space.  He saw the awareness consuming the concept of space or space merged with light.  Then the light from the triple flame was perceived while remaining in the darkness, the original state which is untainted by light, awareness.  Then Agatthiyar says that he realized it to be ekantha niramaya arul or grace which is singular and unsupported by anything.  Support is not a physical entity that holds another.  Support is the basis on which something exists.  For example, a thought has a support, a space where it exists.  Thus thought is supported by space.  To remain self supported or unsupported means there is no space component at all.  As a previous verse mentioned there was darkness from which emerged arul or grace.  From this emerged light or awareness which led to the emergence of space.  Thus, Agatthiyar is saying that he perceived the state beyond awareness, he saw the state of grace. We should remember that this state is one step below the supreme state of darkness or iruL.


மூன்று மண்டலங்கள் என்பவை அக்னி மண்டலம், சூரிய மண்டலம் மற்றும் சந்திர மண்டலம்.  இவை வெளியைக் குறிக்கின்றன.  இந்த மூன்று மண்டலங்களையும் கண்ணின் பொறியில் பார்த்தேன் என்கிறார் அகத்தியர்.  கண்ணின் பொறி என்பது அறிவு என்று முன்னமே பார்த்தோம். அதாவது ஒளி அளவுக்குட்பட்ட வெளியைத் தின்னக் கண்டேன் என்கிறார் அவர்.  அதன் பிறகு மூன்று சுடர்களை விண்ணில் பார்த்தேன் என்கிறார் அவர்.  விண் என்பது பரவெளி.  முச்சுடர்கள் அக்னி, சூரியன், சந்திரன்.  இவ்வாறு இவை இப்போது அறிவு என்பதைக் குறிக்கின்றன.  இந்த அறிவு பரவெளியில் உள்ளது.  இவற்றை அவர் இருள் என்னும் நிலையிலிருந்து அதாவது தனது உண்மையான நிலையிலிருந்து அறிவின் பாதிப்பு இல்லாத நிலையிலிருந்து பார்த்தேன் என்கிறார்.  அப்போது அவை மூன்றும் ஏகாந்த நிராமய அருளாகத் தெரிந்தன என்கிறார் அவர்.  நிராமயம் என்றால் ஒன்றால் தாங்கப்படாமல் இருப்பது.  தாங்குவது என்றால் அது ஒரு இடத்தைப் பெற்றிருப்பது. நமக்கு எதிரே ஒரு நாற்காலி இருக்கிறது என்றால் அதை அங்குள்ள ஆகாய தத்துவம், வெளி தாங்குகிறது.  அதனால் ஒன்றாலும் தாங்கப்படாமல் இருப்பது என்றால் வெளி என்ற தத்துவம் நீங்கிய நிலையைக் குறிக்கிறது.  இந்த நிலை அருள் நிலை.  முந்தைய பாடல்களில் அகத்தியர் முதலில் இருள் இருந்தது.  அதில் அருள் தோன்றி ஒளியைத் தோன்றச் செய்தது.  அந்த ஒளியிலிருந்து வெளி தோன்றியது என்று கூறினார். இவ்வாறு அருள் நிலை என்பது அறிவைக் கடந்த நிலை ஆனால் அது இருள் நிலை அல்ல.  அதற்கு ஒரு படி கீழ்நிலையாக உள்ளது.

325. Abidance of light and space

Verse 325
 காணப்பா இருளதினால் ஒளிவுதான் தோன்றும்
கருவான ஒளியதினால் வெளிதான் தோற்றும்
பேணப்பா வெளியொளியும் எதனாலாச்சு
பெருகி நின்ற இருளதிலே உண்டாச்சப்பா
ஊணப்பா தானொடுங்கும் வகையைக் கேளு
உத்தமனே வெளியதுவும் ஒளியாய்ச் சேரும்
பூணப்பா ஒளியதுவும் இருளில் சேரும்
புத்தியுடன் கண்டறிவாய்த் தன்னுள்தானே

Translation:
See son, because of darkness concealment occurs
Due to the essence, light, space is revealed
Now think, what caused the emergence of light and space
They occurred due to/from the darkness
Plant this (idea) firmly. Now listen about the method of abidance
The supreme one!  The space joins the light
The light joins the darkness.
See these with buddi/discrimination, within you.

Commentary:
This is an important verse that needs contemplation.  Let us understand these concepts with an example.  Let us consider a light source and an object.  When the light is on, it reveals the object, its presence, its qualities.  Thus, the nature of the object is that which light reveals. We all know that an object may look as two entirely different things depending on the light source. Thus, what is known about an object depends on the light source, and it may or may not be the true nature of the object. The object has a true existence in the darkness which is absence of light. The light and space came from darkness which is the original entity.  One has to think about this carefully and understand within oneself.

Now the question why does Agatthiyar call the supreme state as darkness while Kashmir Saivam calls it prakasha, arises.  This also needs thinking.  In the presence of very bright light even objects that have light appear dark.  This is similar to stars disappearing when the sun is up, even though they have their own light.  Thus darkness and light are the same in that both conceal. 

இப்பாடலில் அகத்தியர் ஒரு முக்கியமான கருத்தை விளக்குகிறார்.  இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ள முயலுவோம்.  ஒளி என்பது இருக்கும்போது பொருள்கள் கண்ணுக்குத் தென்படுகின்றன.  அவை இத்தகைய தன்மையை உடையவை என்று ஒளியே காட்டிக்கொடுக்கிறது.  ஒளியின் நிலையைப் பொருத்து பொருள்களின் தோற்றமும் மாறுபடுகிறது.  ஒளிதரும் விளக்கை மாற்றி வைத்தால் ஒன்றாகத் தெரியும் பொருள் மற்றொன்றாகத் தெரிகிறது.  இவ்வாறு விளக்கினால் காட்டப்படும் பொருள் அதன் உண்மையான தன்மையுடன் இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.  ஆனால் அவை உண்மையான இருப்பைப் பெற்றுள்ளன, இந்த நிலை இருட்டில், அறிவின் பாதிப்பு நீங்கிய நிலையில், இருக்கிறது. அதனால் ஒளியும் அதனால் காட்டப்படும் வெளியும் இருளில் ஒடுங்குகின்றன.


அகத்தியர் உச்ச நிலை இருள் என்கிறாரே காஷ்மீர சைவம் அதை பிரகாசம் என்கிறதே என்ற கேள்வி இப்போது நமக்குள் எழுகிறது.  இதையும் ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்.  மிகப் பிரகாசமான ஒரு ஒளி இருக்கும்போது அதன் அருகில் இருக்கும் பொருள்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை.  சூரியன் வானில் இருக்கும்போது நட்சத்திரங்கள் இருளடிக்கப்படுகின்றன.  இவ்வாறு பிரகாசம் இருளை ஏற்படுத்துகிறது.  இவ்வாறு அகத்தியர் கூறும் இருளும் காஷ்மீர சைவம் கூறும் பிரகாசமும் ஒன்றாகின்றன.  இதை ஒருவர் புத்தியினால் சிந்தித்து அறியலாம்.

324. Darkness, light and space explained

Verse 324
பாரப்பா இருளொளியும் வெளி மூன்றப்பா
பதிவான தேகமதில் கண்டுகொள்ளு
சாரப்பா இம்மூன்றின் நிலையைச் சொல்வேன்
சரீரமென்ற சத்தியடா இருள்தானப்பா
நேரப்பா அறிவான ஒளியின் கண்ணு
நிசமான வெளியத்த மாயாமாயம்
காரப்பா மாய்கை வெளி கண்ணோசூக்ஷங்
கருவான கண்மறைந்தால் இருள் தான்காணே

Translation:
See son, darkness, light and space are the three
See them in the locus, the body
I will tell you about the status of these three, you associate with them
The body, the sakthi, is the darkness
The eye is the light of awareness
Truthful space is the wonder created by maya
See son, the space of maya, the eye is subtle
If the eye hides then it is only darkness.

Commentary:
Agatthiyar is describing three very important concepts in this verse.  They are darkness, light and space.  This would explain the order of emanation he listed in the previous verses.  He says, the body which is sakthi is the darkness.  The common method of reference is the body is sakthi and the soul is siva. The body has the truth, Siva present in it but it is not obvious.  Hence, it is said to be dark.  One does not know the truth about the sakthi who appears as the body.  The light is light of consciousness, awareness.  When this light is present sakthi becomes visible.  If the light is switched off there is only darkness.  Space, according to Agatthiyar, is the effect of maya.  Thus, space is gross, awareness or eye is subtle and sakthi is causal.

இப்பாடலில் அகத்தியர் மூன்று முக்கியமான கருத்துக்களை விளக்குகிறார்.  அவை இருள், ஒளி, வெளி என்பவை.  இருள் என்பது உடலாக உள்ள சக்தி.  சித்த சம்பிரதாயத்தில் சக்தி உடல் சிவன் உயிர் என்று கருதுவது வழக்கம்.  உடல் என்பது ஒரு உருவம், ஒரு நிலை.  இந்த நிலையை அறிய உதவுவது அறிவு என்ற ஒளி, அதுவே கண்.  இதைத்தான் மனக்கண் ஞானக் கண் என்று கூறுகிறோம்.  இந்தக் கண் திறந்திருக்கும்வரை, ஒளி இருக்கும்வரை சக்தி தெரிகிறது.  வெளி என்பது மாயை.  சுத்த மாயையும் அசுத்த மாயையும் ஏற்படுத்தும் தோற்றம் என்று கூறுகிறார் அகத்தியர். 

இங்கு நாம் ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.  கண் என்பது அறிவு என்று கூறும் அகத்தியர் அது பரநிலை என்று கூறவில்லை.  ஒன்றை அறிவது என்பது வேறு அதுவாகவே ஆவது என்பது வேறு.  அறியும் நிலையில் கண் திறந்திருக்கிறது.  அதுவாகவே ஆகும் நிலையில் அறிவு தேவையில்லை,  அதனால்தான் உச்ச நிலையான பர நிலையும் இருள் தாழ்ந்த அறிவற்ற நிலையான கேவலமும் அருள்.  ஒன்று அனைத்தையும் அறிந்த அனைத்துமாகவே ஆன இருள் மற்றது ஒன்றையும் அறியாத அஞ்ஞான இருள்.

323. See the self in the darkness

Verse 323
தானேதான் ஆகிநின்ற எழுவர் தானும்
தனித்து நின்ற பராபரமாஞ் சுழியினுள்ளே
வானேதான் கெதிஎனவே சகலசித்தும்
வரிந்துவிளை யாடி மிக வானமுட்டி
ஊனேதான் தானேவே முப்பாழுக்கப்பால்
ஒடுங்கி நின்ற பாழ் வீட்டுக்குள்ளே சென்று
நானேதான் நீயென்று அந்தகாரம்
நலமான இருளதனில் நாடிப்பாரே

Translation:
The seven who are nothing but self
Within the whorl, the paraparam
As the sky as the path/refuge, all the mystical accomplishments
Playing them, knocking on the sky
Beyond the three paazh,
Going into the house of paazh
As I am you, in the darkness/ in the sense of self
Seeking them in the darkness and see it.

Commentary:
Suzhi means whorl.  This whorl is Paraparam, the Supreme Being.  The seven are Brahma, Vishnu, Rudra, Maheswara, Sadasiva, Sakthi and Siva.  They are all nothing but Self.  All the seven manifestations reached the space, paazh, beyond the triple paazh- the paazh of maya, paazh of bodha or awarenss and paazh of upasantha or tranquility.  They reached the supreme state which is also paazh.  Agatthiyar advises Pulathiyar to go this house and seek them in the darkness described before, with a feeling “I am you all”.


சுழி என்றால் பராபரம் என்று தொடங்கும் அகத்தியர் எழுவரான பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன், சக்தி, சிவன் ஆகியோர் தான் தான் என்கிறார்.  வானத்தைப் பயணிக்கும் வழியாகக் கொண்டு பல சித்துக்களை விளையாடி முப்பாழ் எனப்படும் மாயப்பாழ், போதப்பாழ் உபசாந்தப்பாழ் என்பவற்றைக் கடந்து துவாதசாந்தத்தில் உள்ள பாழை அடைந்து அங்கு “நானே நீ” என்பதாக அதாவது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்ற கருத்துடன் அந்த நிலையை இருளில் தேடவேண்டும் என்கிறார் அகத்தியர். 

322. Ravi madhi explained

Verse 322
பாரப்பா ருத்திரனார் தவத்தாலந்த
பக்குவமாய் அக்கினியை படைத்து நின்றார்
பேரப்பா பெற்றதொரு பிரம்மாவுந்தான்
பெருகிநின்ற பூமிதனைப் படைத்தாரப்பா
நேரப்பா திருமால்தான் கருணையாலே
நிச்சயமாய்ச் சலமதனை படைத்து நின்றார்
காரப்பா முன்சொன்ன சத்திசிவன் ரெண்டும்
கருணையுடன் ரவிமதியு மானார்தானே

Translation:
See son, Rudra with tapas
Created the fire
Then Brahma
Created the earth
Then Tirumal, through mercy
Created water
See son, the Siva and Sakthi mentioned before
Became Ravi and madhi.

Commentary:
The order of creation is described further in this verse.  Rudra created fire, Brahma created earth, Vishnu created water and Siva and Sakthi became Ravi and Madhi.


ஸ்ருஷ்டி கிராமம் இங்கு மேலும் விளக்கப்படுகிறது.  ருத்திரன் அக்னியைப் படைத்தார், விஷ்ணு நீரைப் படைத்தார், பிரம்மா பூமியைப் படைத்தார், சிவனும் சக்தியும் ரவியும் மதியுமாக நின்றார்கள் என்கிறார் அகத்தியர்.

Saturday, 20 February 2016

321. Relationship between darkness, grace, light and creation

Verse 321
மேவுகின்ற ஆதியந்த மூர்த்திக்கு முன்னே
மெய்ஞ்ஞான இருளதிலே அருளுண்டாச்சு
தாவுகின்ற அருளதிலே ஒளியுண்டாச்சு
தண்ணொளிவு தானதனால் வெளியுண்டாச்சு
கூவுகின்ற பரவெளியால் சதாசிவனே
கூர்மையுடன் பேரண்டம் படைத்து நின்றார்
பாவுகின்ற மயேசுர னார் சத்தத்தோட
பதிவான வாய்வுதனை படைத்தார் பாரே

Translation:
Before the origin and terminus form
In the darkness of true wisdom (meijnana) grace (arul) occurred
In the spreading grace the light emerged
Due to its cool, light/self induced concealment of self, space emerged
In the”hu”(nadha) supreme space Sadasiva
Remained creating universes
Maheswara, with noise
Created air, see it.

Commentary:
Agatthiyar is describing creation in this verse.  Before the Supreme took a form which he calls aadhi andha moorthy or the origin-terminus form, remained the meijnana irul or darkness of true wisdom.  In this wisdom emerged arul or grace which led to the emergence of light.  The concealment or the light of self led to the emergence of space or veLi.  In this veLi, from the nadha principle Sadasiva created the universes.  The thanmatra or subtle quality of space is sound.  This led to the next element air, which has the subtle quality of touch sensation or sparsha.


சிருஷ்டிக்கும் இந்த இருள் அருளுக்கும் உள்ள தொடர்பை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர்.  அனைத்துக்கும் ஆதியாக, ஆதி அந்த மூர்த்தி அல்லது ஆதி உருவுக்கும் முன்பாக இருந்தது மெய்ஞ்ஞான இருள். இந்த இருளில் அருள் தோன்றியது.  அருளிலிருந்து ஒளி தோன்றியது.  இந்த ஒளி தான் எனப்படும் இறைவனை மறைத்தனால் வெளி தோன்றியது.  இந்த வெளியில் கூ அல்லது ஹூ எனப்படும் நாத தத்துவத்திலிருந்து சதாசிவன் உலகங்களைப் படைத்தார்.  அதனைத் தொடர்ந்து மகேஸ்வரர் வாயு தத்துவத்தைப் படைத்தார் என்கிறார் அகத்தியர்

320. Arul Perumjyothi- Grace, the great effulgence

Verse 320

இருளான இருளினிட ஒளியைப் பார்க்க
என்ன சொல்வேன் அதனுடைய இன்பந்தன்னை
மருளான மனம் நிறுத்தி மனக்கண் கொண்டு
மாசற்ற இருளொளியை மகிழ்ந்தார் தானும்
அருளான பொருளிலே தானேதானாய்
அமர்ந்து வெளி தனையறிந்து ஒளியைப் பற்றி
வெகுளாமல் இரு அருளில் தானேதானாய்
விளங்கும் அருள் பொருளெனவே மேவிப்பாரே

Translation:

To see the light of the supreme darkness
How will I describe the bliss
Stopping the manas, the delusion, with mental eye
They enjoyed the faultless light of the darkness
As Self, the grace (arul)
Remaining in it, knowing about space, holding to the light
With any hurry/anger, in the two/ darkness grace, as Self
See the entity, grace.  Experience it by embracing it.

Commentary:
The darkness described in the previous verse as the supreme state is the indescribable grace, bliss.  Agatthiyar explains it saying stopping the manas which causes delusion, using the mental eye or mental perception the effulgence of the darkness is seen as grace or arul.  This grace is indescribable.  Vallalar describes it at arul perumjyothi- grace the great effulgence, thani perum karunai- the unique great mercy.
 

முந்தைய பாடலில் கூறிய இருள் என்பது உண்மையில் அருள்தான், ஆனந்தம்தான் என்று இப்பாடலில் அகத்தியர் கூறுகிறார்.  இதை ஒரு யோகி தனது மருளான மனத்தை நிறுத்தி, மனக்கண் கொண்டு இருளின் ஒளியாக அருள் பொருளாகப் பார்த்து அனுபவிக்கிறார். இந்த அருள் விளக்க முடியாதது.  இதைத்தான் வள்ளலார் அருள் பெரும்சோதி, தனிப் பெரும்கருணை என்கிறார்.

319. Describing the indescribable- the samadhi

Verse 319
ஒண்ணான நிச்சயத்தை உரைக்கவென்றால்
உண்ணாக்கும் அண்ணாக்கும் ஒன்றுங் காணேன்
கண்ணான பேரொளியை என்ன சொல்வேன்
கறுப்பல்ல வெளுப்பல்ல சிகப்புமல்ல
விண்ணான நீலமல்ல பச்சையல்ல
விளம்புதற்கு அரிதான அண்டத்துள்ளே
பண்ணான பாழ்வீட்டு ஈராருக்குள்ளே
பாய்ந்து தன்னை பார்க்க எல்லா மிருளாய்ப் போச்சே

Translation:
The singular definitude- if should be described
The uvula and the region above became one
The great effulgence, the eye, how can I describe it?
It is not black, white or red
It is not the sky blue, green
Within the difficult-to-describe universe
Within the house of “paazh”  twelve
Rushing within and if seen, everything will become dark.

Commentary:
Agatthiyar begins this verse saying that he will try to describe something which is indescribable and goes ahead to say that in the supreme state the “unnaakku annaakku” will become one.  In the physical world these words correspond to the uvula and the region in the skull above it.  Philosophically it means akara and ukara, the nirguna and saguna brahman become one.  It is the supreme effulgence, supreme consciousness, prakasha, which cannot be described in words.  He says that it is not black, white of red.  These colors correspond to various principles, They represent ida, sushumna and pingala nadi, tamas-satva-rajas, apara-para and parapara state of Sakthi etc.  Thus Agatthiyar indicates that this state is beyond any distinction.  Paazh is generally explained as complete destruction.  Here it means destruction of all distinctions.  Tamil Siddhas use this term to represent a zone between principles.  For example there is a paazh where atma tattva end and vidya tattva exist.  Thus it represents a zone which cannot be described.  The paazh refered to here corresponds to the zone beyond the dvadasantha where all distinctions terminate, the place where there is supreme existence.  Agatthiyar says that beyond the dvadasantha it is darkness. 

வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்றை இப்போது விளக்கப்போகிறேன் என்று கூறி இப்பாடலைத் தொடங்கும் அகத்தியர் சமாதியின் உச்ச நிலையில் அண்ணாக்கும் உண்ணாக்கும் ஒன்றாகும் என்கிறார்.  பொதுவாக இந்தச் சொல் சிறு நாக்கையும் அதற்கு மேல் இருக்கும் இடத்தையும் குறிக்கும்.  இந்த வார்த்தைகளைக் கூர்ந்து பார்த்தோமானால் அது அகாரமும் உகாரமும் ஒன்றாகும் என்பதாகவும் தோன்றுகிறது.  அகாரம் நிர்குணப் பிரம்மனையும் உகாரம் சகுணப் பிரம்மனையும் குறிக்கின்றன.  இவ்வாறு உச்ச நிலை என்பது சகுணப் பிரம்மனும் நிற்குணப் பிரம்மனும் ஒன்றாகும் நிலையைக் குறிக்கிறது.  இந்த நிலை பேரொளி நிலை என்றும் அது கருப்பு, சிவப்பு, வெளுப்பு அல்ல என்றும் அவர் கூறுகிறார்.  பேரொளி என்பது பரவுணர்வு.  மேலே கூறிய நிறங்கள் பல தத்துவங்களைக் குறிக்கின்றன.  அவை முறையே இடை, பிங்கலை மற்றும் சுழுமுனை நாடி, தமஸ், ரஜஸ் மற்றும் சத்துவ குணங்கள், அபரா பராபரா மற்றும் பரா சக்தி நிலைகளைக் குறிக்கின்றன.  இவ்வாறு அது நிறமற்றது என்று குறிப்பிடுவது அது வித்தியாசங்களற்ற ஒருமை நிலை என்பதை விளக்குகிறது.  இது பண்ணிரண்டைக் கடந்த பாழ் என்றும் அங்கு இருப்பது இருள் என்றும் அகத்தியார் கூறுகிறார்.  பாழ் என்பது பொதுவாக சர்வ நாசம் என்பதைக் குறித்தாலும் இங்கு நாசம் அடைவது பாகுபாடுகளே.  பாழ் என்ற சொல்லை விளக்க முடியாத ஒரு நிலையைக் குறிக்க சித்தர்கள் பயன்படுத்துகின்றனர்.  உதாரணமாக ஆத்மதத்துவங்களுக்கும் வித்யா தத்துவங்களுக்கும் இடையே ஒரு பாழ் உள்ளது.  இங்கு குறிப்பிடப்படும் பாழ் துவாதசாந்தத்தைக் கடந்த நிலை.  ஒருமை நிலை. அது இருள் என்கிறார் அகத்தியர்.   

318.Difficulty of these steps

Verse 318
தன்னைத்தான் தானறிந்து பார்க்கும்போது
தத்துவமாய் நின்றதொரு தொண்ணூற்றாறும்
எண்ணத்தான் துலையாது ஆசாபாசம்
என் சொல்வேன் பஞ்சகர்த்தாள் பஞ்சபூதம்
கண்ணைத்தான் தானறிந்து கண்ணில் காணும்
கலையான ரவி மதியும் சுடர்கள் மூன்று
உண்ணத்தான் உகந்தமணம் ஊனிப்பார்க்க
உண்மைஎன்ற நிச்சயத்தை உரைக்கொண்ணாதே

Translation:
Knowing Self by oneself
The ninety six principles
Desires and attachments will not leave by mere thinking
What can I say!  The five effectors, the five elements
Knowing the eye, will be seen in the eye
The three kalaa- ravi, madhi and flame
Wishing to consume, planting the mind and see it
The truth, the definitude- one cannot verbalise it.

Commentary:
Even though the steps of ashtanga yoga seem easy to achieve, Agatthiyar describes how difficult they actually are.  He says the ninety six princples which lead to desire and attachment will not leave a person easily.  The ninety six principles comprise of 36 tattva (24 atma tattva (5+5 senses, 5+5-elements and their actions, 4 modifications of the mind), 7 vidya tattva (kalaa, kaala, niyathi, raga etc) 5 siva tattva) and 60 thaathvika or derivatives of tattva.  For example, blood is a derivative of water principle.  These lead to soul’s experiences which lead to attachment and desires.  These principles are only instruments, the one who enjoys the experiences through the instruments is the soul.
The eye he refers to is the eye of discrimination.  There is a wrong notion that the material eye that we have will reveal us the truth about principles.  This is not correct.  Ravi, madhi and agni are generally interpreted as sun, moon and fire.  Actually they are not the material sun, moon and fire we see in nature.  They are instruments kalaai through which knowledge is acquired.  Agatthiyar finishes the verse stating that the experience at the pinnacle of Samadhi is beyond verbal description.

அஷ்டாங்க யோகத்தைப் பயிற்சி செய்யாமல் வெறுமே படிப்பவர்கள் அதன் படிகள் எவ்வளவு எளியவையாக இருக்கின்றன என்று எண்ணலாம்.  அத்தகைய கருத்து எவ்வளவு தவறு என்று அகத்தியர் இதில் உள்ள கஷ்டங்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் நமக்குப் புரிய வைக்கிறார்.  தொண்ணூற்றாறு தத்துவங்கள் என்பவை 36 தத்துவங்கள், மற்றும் 60 தாத்துவிகங்கள் என்பவற்றின் கூட்டாகும்.  முப்பத்தாறு தத்துவங்கள் என்பவை இருபத்து நான்கு ஆத்ம தத்துவங்கள், ஏழு வித்யா தத்துவங்கள் மற்றும் ஐந்து சிவதத்துவங்கள்.  இவற்றிலிருந்து தோன்றுபவை தாத்துவிகங்கள்.  உதாரணமாக ரத்தம் என்பது நீர்த்தத்துவத்திலிருந்து தோன்றுகிறது.  இந்த தத்துவங்களின் மூலம் ஆத்மா அனுபவங்களைப் பெறுகின்றது.  இந்த அனுபவங்கள் ஆசை பாசத்துக்கு வித்திடுகின்றன.  இந்த ஆசை பாசங்கள் எளிதில் ஒருவரை விட்டு விலகமாட்டா என்று அகத்தியர்  கூறுகிறார். 

அடுத்து அவர் கண்ணில் காணலாம் என்று கூறுகிறார். அவர் கூறுவது ஸ்தூல கண்ணல்ல.  மூன்றாவது கண் எனப்படும் உயருணர்வே இங்கு குறிப்பிடப்படும் கண்ணாகும்.  அதேபோல் ரவி, மதி மற்றும் அக்னி என்பவை வெளியுலகில் உள்ள சூரியன், சந்திரன் மற்றும் தீ அல்ல.  இவை அறிவைத் தரும் கலைகளாகும்.  சமாதியின் உச்சியில் பெரும் அனுபவத்தை வார்த்தைகளால் விளக்க முடியாதது என்று கூறி அகத்தியர் இப்பாடலை முடிக்கிறார்.

Friday, 19 February 2016

316. Aarooda samadhi

Verse 316
ஒன்றான ஆரூட சமாதி கேளு
உண்மையுள்ள புலத்தியனே யருமையாக
கண்டதொரு காக்ஷிஎல்லாமனத் தீபமென்று
கால்பிடித்து நடுவேறி முடிமேலாக
விண்டதொரு பஞ்சரிவை யறிவால் நீக்கி
வேதாந்த தருமவெளி ஒளித்தன்னோடே
நின்றாடிக் கொண்டு சிவஜோதியாகி
நின்றதினால் ஆரூட சமாதியாச்சே

Translation:
Listen about the singular aarooda Samadhi
The truthful Pulathiya!  As the most special
As all the scenes observed as the lamp of the mind
Holding on to the leg/air, climbing in the middle up to top/head
Removing the knowledge through the five through awareness
Along with Vedanta dharma space effulgence
Remaining there dancing, becoming Siva jyothi
Remaining so is aarooda Samadhi.

Commentary:
Agatthiyar explains aarooda Samadhi as remaining as Siva jyothi, the flame of awareness.  This occurs when everything perceived through the five- senses, elements, their subtle qualities, principles or tattva are considered as the flame of consciousness Agatthiyar says remaining in that state dancing as siva jyothi is aarooda Samadhi. 
When we look at the verse carefully it becomes clear that aarooda Samadhi is remaining with awareness as the mode of perception, the yogin remaining in a pure awareness state.  However, we also realize that this is not the ultimate state as the yogin has not “become” that state.  This is the supreme goal.  Thus, Samadhi gives a taste of the ultimate.

ஆரூட சமாதியை இப்பாடலில் விளக்குகிறார் அகத்தியர்.  காணும் காட்சிகள் அனைத்தும் மனத்தினால் ஏற்படுகின்றன என்று உணர்ந்து, ஐந்தான கருவிகள், கரணங்கள், பூதங்கள், தன்மாத்திரங்கள், தத்துவங்கள் என்பவற்றினால் அறிவு பெறுவது என்பதை விலக்கி தூய அறிவினால் அனைத்தையும் அறிவது, மற்றும் அந்த அறிவினுடன் சிவ சோதி அல்லது பரவுணர்வுடன் இருப்பதே ஆரூட சமாதி என்கிறார் அகத்தியர். 

இப்பாடலைக் கூர்ந்து நோக்கினால் ஆரூட சமாதி என்பது தூய அறிவு நிலையில் இருப்பது என்பது புரிகிறது.  இதனால் சமாதி என்பது உச்ச நிலையல்ல, அது உச்ச நிலையின் ஒரு துளி என்பது புரிகிறது.  ஆரூட சமாதியை அடையும் யோகி “அதுவாகவே” மாறுவதே உச்ச நிலை.  சமாதி, இந்த உச்ச நிலை எவ்வாறு இருக்கும் என்பதைக் காட்டுகிறது.