Verse 184
கேளப்பா அவையடக்கஞ் சொல்லக் கேளு
கிருபையுள்ள வல்லபையுங் கணபதியு மைந்தா
ஆளப்பா பிரம்மாவுஞ் சரஸ்வதியுமானார்
அதின் பிறகு திருமாலும் லட்சுமியுமானார்
மேலப்பா ருத்திரனும் உருத்திரியுமானார்
மேன்புடனே மயேசுரனும் மயேஸ்பரியுமானார்
காலப்பா சதாசிவனும் மனோன்மணியுமாகி
காரணமெல்லாம் முடிந்து சத்தி சிவமாச்சே
Translation:
Let me tell
you about all that is included
The merciful
Vallabhai and Ganapathi, Son,
Became Brahma
and Sarasvathi
After that
they became Thirumal and Lakshmi
Over that,
Rudra and Rudri,
Above that,
they became Mahesvaran and Maheswari
The
time/breath, after becoming Sadasiva and Manonmani
With all the
causes terminating, it became Sakthi and Sivam.
Commentary:
This verse
shows us an interesting concept.
Kundalini yoga assigns different deities to the different cakras. They represent various principles. It is said
that consciousness ascends through the cakras.
Here Agatthiyar says that Vallabhai and Ganapathi transform into the
next set of deities, Vishnu and Lakshmi.
Crossing these deities, they transform into Rudra and Rudri and
sequentially until Sakthi and Sivam.
Thus, these deities represent different principles, one leading to the
next. This shows us the stupidity in
saying one deity is superior to the other!
The set of deities up to Sadasiva and Manonmani represent the manifested
universe. Crossing the Sadasiva
Manonmani state the cause for manifestation ends. Sakthi and Sivam represent the state
preceding manifestion.
இப்பாடலில் அகத்தியர் ஒரு முக்கியமான தத்துவத்தைக்
கூறுகிறார். குண்டலினி யோக நூல்கள்
ஒவ்வொரு சக்கரத்துக்கும் ஒரு தேவதையையும் அதன் துணையும் அதிபதிகளாகக்
கூறுகின்றன. உதாரணமாக மூலாதாரத்துக்கு பிரம்மாவும்
சரஸ்வதியும் அதிபதிகள், சுவாதிஷ்டானத்துக்கு விஷ்ணுவும் லட்சுமியும் அதிபதிகள். இப்பாடலில் அகத்தியர், கணபதியும் வல்லபையுமே
விஷ்ணு/லட்சுமியாக, ருத்திரன்/ருத்திரியாக மாறுகின்றனர் என்று குறிப்பிடுகிறார். இவ்வாறு இந்த தெய்வங்கள் தத்துவங்களை,
உணர்வுநிளைகளைக் குறிக்கின்றனர். இதனால்
தெய்வங்களில் ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் என்று சண்டையிடுவது எவ்வளவு முட்டாள்தனம்
என்று அகத்தியர் நமக்குக் காட்டுகிறார். இவ்வாறு கணபதியும் வல்லபையும் சதாசிவன் மனோன்மணி
நிலையை அடைந்தபிறகு காரண நிலைகள் கடக்கப்பட்டுவிடுகின்றன. அவர்களுக்கு மேலே உள்ள நிலைகளான சக்தியும்
சிவமும் காரண நிலைக்கு முற்பட்டவைகள் என்பது இதனால் தெரிகிறது.
No comments:
Post a Comment