Verse 160
வானான வெளியோடே வெளியாய் நின்று
மகத்தான நாற்பதமும் வகையராய்ப் பெற்று
ஊனான பஞ்சகரத்தால் நிலையும் பெற்று
உகாந்தவரை திருநடன உண்மை கண்டு
கோனான குருபத்தில் மனதொடுங்கி
குறியான பூரணமாய்ச் சேர்ந்தோர்க்கப்பா
தானான சமாதியுடன் உண்மை கேளு
தன்மையுடன் நாற்பதமும் ஒன்றதாமே
Translation:
Remaining as
space along with space
Attaining the
glorious four positions (padha)
Attaining the
original status through panchaksharam
Seeing the
truth, the dance, until the end of the eon
Abiding in the
gurupadham, the royal position
For those ho
have reached the sign, the state of Poorna
Listen about
their Samadhi
The four
padham will lead to that single goal.
Commentary:
Agatthiyar
describes the ultimate state in this verse.
The yogin does not merge with the supreme space immediately. Agatthiyar describes how this happens. The
yogin remains firmly in the state of space with the help of the panchakshara or
namasivaya. He experiences Sakthi who is
represented by the sacred dance, the movement which is the cause of the
universe. This dance is experienced
until the terminus of the yuga. He then
abides in the gurupadham and becomes poornam or blemish-free.
Agatthiyar
then describes how the Samadhi should be constructed for such a soul
முந்தைய பாடலில் ஞானம் சாயுச்சிய பதவியைத் தரும் என்று
ஒருவர் வெளியோடு வெளியாவார் என்றும் கூறிய அகத்தியர் அது எவ்வாறு ஏற்படுகிறது
என்று இப்பாடலில் கூறுகிறார். வெளி நிலையை
அடைந்த யோகி பஞ்சாட்சரத்தின் மூலம் அதில் நிலைபெற்று இருக்கிறார். அப்போது அவருக்கு திருநடனம் அல்லது பரத்தின்
ஆதி அசைவு புலப்படுகிறது. இந்த ஆதி அசைவே
யுக முடிவு வரை, உலகம் அழியும் வரை தொடருகிறது.
இந்த நடனத்தைக் கண்ட யோகி குருபத்தில் ஒடுங்குகிறார். குரு என்றால் அஞ்ஞானமற்ற ஒளி என்று
பொருள். இவ்வாறு அவர் ஒளி நிலையை
அடைகிறார். இந்த பராபர நிலையில் அவர்
குற்றமற்றவராக பூரணமாக இருக்கிறார்.
இதனை அடுத்து இந்த நிலையை அடைந்த யோகியை எவ்வாறு
சமாதிபடுத்த வேண்டும் என்று அகத்தியர் கூறுகிறார்.
No comments:
Post a Comment