Verse 174
கேளடா எட்டெழுத்தைக் கால்தலையாய் மாறி
கிருபையுடன் நெற்றிதனிற் பட்டங் கட்டி
ஆளடா தூபமுடன் தீபஞ் செய்து
அருள்பெருக ரதமதின்மேல் அன்பாய் வைத்து
வாளடா மணியோசை சங்கினோசை
மகத்தான ஜெயகண்டி நாதஞ் செய்து
மேலடா சமாதி வலஞ் செய்து நல்ல
வேதாந்தமான நடுக் குகையில் வையே
Translation:
Listen son,
reversing the order of the eight letters
Tie the foil
on the forehead, with mercy
Wave the
fragrant smoke and lamp
Place it over
a chariot, with love
Sound the
bell, conch
The victory
plate,
Circumambulate
the Samadhi
Place in the
middle of the cave, the vedantha.
Commentary:
The rituals
described in this verse are similar to those of the male yogi except that the
body is place in the cave created in the west instead of the middle.
முன்னே ஆண் யோகிக்குக் கூறியதைப் போலவே பெண் யோகிக்கும்
அபிடேகம் தூப தீபம் ஆகியவற்றைக் காட்டி ரதத்தில் வைத்து சமாதி இடத்துக்கு அழைத்து
வரவேண்டும். பிறகு சமாதியில் மேற்குப்
புறம் அமைத்த குகையில் வைக்கும் முன் சமாதியை மங்கள வாத்தியங்கள் முழங்க வலம் வரவேண்டும்
என்கிறார் அகத்தியர்.
No comments:
Post a Comment