Verse 164
கேளடா பாலுடனே இளநீர் விட்டுக்
கிருபையுடன் தண்ணீரும் தேனுங் கூட்டி
சூளடா அபிஷேகம் நன்றாய்ச் செய்து
சுத்தமுடன் மேல்துவட்டிச் சமமாய் மைந்தா
ஆளடா அரை தனக்குப் பட்டு வஸ்த்திரம்
அன்பாகத் தான் அணிந்து அதின்மேற் கேளு
மேலடா பாதாதி கேசமட்டும்
மேன்மையுடன் விபூதி தூளிதமே செய்யே
Translation:
Listen son,
tender coconut water along with milk
Adding water
and honey
Perform abhisheka
well
Wipe the body
clean
Adorn silk
cloth on the waist
With love. Over it
From foot to
head
Sprinkle the
sacred ash
Commentary:
In the
previous two verses Agatthiyar described how to construct the Samadhi or the
tomb. Here he talks about how to handle
the body of the saint.
Sacred
ablution should be performed with water, honey, tender coconut water and milk.
The body
should be wiped clean, adorned with silk cloth and sacred ash should be spread
on it from head to toe.
முந்தைய இரு பாடல்களில் முக்தியடைந்த ஒரு ஆத்மாவின் சமாதியை
எவ்வாறு கட்ட வேண்டும் என்று அகத்தியர் கூறினார்.
இங்கு அவரது உடலை சமாதிக்கு எவ்வாறு பதனப்படுத்தவேண்டும் என்று கூறுகிறார்.
உடலுக்கு தண்ணீர், இளநீர், தேன், பால் ஆகியவற்றால் ஆனா
கலவையால் அபிஷேகம் செய்யவேண்டும். அதனை
சுத்தமாகத் துவட்டிய பிறகு அரைக்கு பட்டு வஸ்த்திரம் அணிவிக்க வேண்டும். அதன் பிறகு கால் முதல் தலை வரை விபூதியைப்
பூசவேண்டும்.
No comments:
Post a Comment