Wednesday, 9 September 2015

155. Emergence of Tattva and taatvika

Verse 155
பாரப்பா வுலகமெல்லாம் பரத்தினுட் கூத்து
பரிவான கூத்ததுவும் வாசி நேர்மை
நேரப்பா வாசியது வன்னியுடன் கூடி
நிசமான பூதவகை ஐந்துண்டாச்சு
பேரப்பா ஐந்துவகை ஐந்துண்டாச்சு
பெருகி நின்ற தத்துவங்கள் தொண்ணூற்றாறாய்
வீறாப்பா கொண்ட செடந்தான் தானாக
வேதாந்த முறைமை நெறி ஒன்று கேளே

Translation:
See son, all the worlds within Param.  The kootthu (movement)
The merciful action is the truthful vasi,
When the vasi joins with the fire (of kundalini)
The true five elements (bhuta) occurred
The five other categories emerged so
The prolific principles as 96
The insentient entity (jada) with force
Hear about one of the rules of Vedanta.

Commentary:
Agatthiyar says that all the manifested are within Param.  Param is the state of Supreme that initiates manifestation.  He says the movement of the worlds is due to vaasi or life force.  The five true bhuta types are the five Siva tattva or Siva, Sakthi, Sadasiva, Isvara and Suddha vidhya.  Agatthiyar calls them “nijam” as they are untainted by asuddha maya.
The paraparam mentioned in the previous verse indicates the unmanifested state of the Divine while the Param referred to here represents the state just before manifestion.  The five Siva, Sakthi etc emerge from Param.  Thus, all the manifestations are contained within the Param. 

All the categories of five, the elements, their qualities or thanmatra, five karmendriya, jnanendriya etc were created from the five siva tattva.  Thus the total number of principles became ninety six.  We have already seen what these 96 are. 

For those who missed it before- 96=36+60.  36- tattva and 60 thaatvika or derivatives of tatva.  36 tatva are 5 siva tatva, 7 vidya tatva including purusha (kala, kaala, raga, vidya, niyati, maya and purusha), and 24 atma tattva- 5 elements, 5 tanmatra, 5+karmendriya and jnendriya and 4 modifications of mind(manas, buddhi, chittham and ahamkara). 

The 60 tattvika emerged from the 36 tattva.  They are:
From earth- hair, bone, skin, nerves, flesh (5)
Water- saliva/urine/chile, blood, semen, brain, marrow (5)
Tejas- hunger, sleep, sex, fear, laziness (5)
Air- walking, running, remaining, sleeping and getting up (5)
Akasa- hatred (krodha), greed (loba), desire (moha), pride (madha) and jealousy (maascharyam) (5)
Ten nadi- idai, pingalai, sushumna, gandhari, atthi, asvani, aalam, purusha, sootham, singuvai(10)- they occur from earth principle.
Ten types of vital air- prana, apana, udhana, samana, vyana- due to a combination of tejas and vayu (teyuvayu), nagan, koorman, kirikaran, devadatthan, dhananjayam (10)- they are (bhuta vayu). They are the dynamic aspects of air principle.
Three desires (edanai)- arttha edanai, ulaga edanai and putra edanai (3). They contain the dynamic aspect of akasa.
Vak- vachanam, gamanam, visargam, anandham, aadhanam (5)
Three gunas- raajasam, taamasam and saathvikam (3) from the dynamic aspect of prakriti.
Four types of vaak- paishanthi, madhyama, vaikari, sukshma (4) due to bindhu.

All these constitute the jada or our body.
உலகமனைத்தும் பரத்தினுள் அடக்கம் என்கிறார் அகத்தியர்.  அதன் இயக்கம் வாசி அல்லது உயிர்சக்தி என்கிறார்.  முந்தைய பாடலில் குறிப்பிட்ட பராபரம் வெளிப்பாட்டுக்கு முற்பட்ட இறைமையின் நிலை.  பரம் என்பது வெளிப்பாட்டுக்கு முற்பட்ட நிலை.  வாசியும் அக்னி எனப்படும் குண்டலினி சக்தியும் கூடுவதால் நிசமான  ஐம்பூதங்கள் தோற்றுவிக்கப்பட்டன என்று அகத்தியர் கூறுகிறார்.  இங்கு ஐந்து என்று குறிப்பிடப்படுவது சிவன், சக்தி, சதாசிவன், ஈஸ்வரன், சுத்த வித்யா என்ற ஐந்து தத்துவங்கள்.  அவற்றை “நிசமான” என்று கூறுவதற்குக் காரணம் அவை அசுத்த மாயையின் கலப்பு இல்லாமல் இருப்பதுதான்.  இந்த ஐந்து சிவ தத்துவங்களிலிருந்து ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரங்கள், கர்மேந்திரியம் போன்றவை தோன்றின.இவ்வாறு 96 தத்துவங்கள் தோன்றின என்று அகத்தியர் கூறுகிறார்.

இந்த தத்துவங்கள் எவை என்று முன்னம் பார்த்தோம்.  அவை 36- ஐந்து சிவ தத்துவம் ஏழு வித்யா தத்துவங்கள், இருபத்து நான்கு ஆத்ம தத்துவங்கள் (ஐந்து பூதங்கள், ஐந்து தன்மாத்திரங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள் ஐந்து ஞானேந்திரியங்கள் மனஸ் புத்தி சித்தம் அகங்காரம்)
இவை தவிர உள்ள அறுபது தத்துவங்கள் தாத்விகங்கள் எனப்படுகின்றன.  அவை:

காற்று
ஓடுவது, நடப்பது, கிடப்பது, உறக்கம், எழுவது
5
பூமி
முடி, எலும்பு, தோல், நரம்புகள், தசை

5
நீர்
எச்சில்/மூத்திரம், ரத்தம், சுக்கிலம், மூளை, மச்சை
5
நெருப்பு
பசி, தூக்கம், உடலுணர்வு, பயம், சோம்பல்
5
ஆகாசம்
கிரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம்
5
பூமி
நாடிகள்- இடை, பிங்கலை, சுழுமுனை, காந்தாரி, அத்தி, அஸ்வனி, ஆலம், புருடன், சூதம், சிங்குவை
10
காற்றின் அசைவுத் தன்மையிலிருந்து
பிராணன்- பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன் (நெருப்பு+வாயு), நாகன், கூர்மன், கிரிகரன், தே`வதத்தன் தனஞ்சயன்- பூத வாயு
10
ஆகாயத்தின் செயல்பாட்டு நிலையிலிருந்து
ஏடணை- அர்த்த, உலக, புத்திர
3
செயல்கள்
வசனம், கமனம், விசர்கம், ஆனந்தம், ஆதனம்
5
குணம்
ராஜசம், தாமசம், சத்துவம்
3
வாக்கு
பரா, பஷ்யந்தி, மத்தியமா, வைகரி
4

இவ்வாறு ஜடம் என்னும் உடல் தோன்றுகிறது என்கிறார் அகத்தியர்

No comments:

Post a Comment