Friday, 11 September 2015

157. Charya, kriya, yoga and jnana- a summary

Verse157
பாரப்பா சரியை வழி அகார தீக்ஷை
பாலகனே தேகசுத்தி அனுஷ்டானங்கள்
காரப்பா கிரியை வழி உகார தீக்ஷை
கருவான சிவலிங்க சக்தி பூஜை
சாரப்பா யோகவழி மகார தீக்ஷை
சகலகலை காலரிந்து தன்னைக் காண
நேரப்பா ஞானவழி பூரணமாந்தீக்ஷை
நிராதார சொரூப நிலை தீபமாச்சே

Translation:
See son, the path of charya is akaara diksha
The young one!  Purity of the body and austerities
See the path of kriya as ukaara diksha
Worship of siva linga, sakthi
Associate with the path of yoga, the makaara diksha
Knowing the nature of prana and the kala, to see the self
It is the direct path, the path of jnana is poorna diksha
The state of niradhara svaroopa, the flame.

Commenntary:
Agatthiyar explains the four steps of charya, kriya, yoga and jnana here.  Charya is external disciplines.  Agatthiyar calls it the akaara diksha.  It is external disciplines such as purity of body and anushtana or austerities that are followed.  Kriya is the ukaara diksha.  It is inner disciplings and prayer.  Yoga is the makaara diksha.  It is knowing the nature of prana, the nature of kala or first limitation due to vidya tattva.  Crossing this step one perceives the self.  The fourth step, jnana or wisdom is poorna diksha.  One attains the niradhara svaroopa or unsupported form, one that has no basis.  It is the state of flame, light of consciousness.


சரியை, கிரியை, யோகம் ஞானம் என்ற நான்கு படிகளை இப்பாடலில் அகத்தியர் விளக்குகிறார்.  சரியை என்பது அகார தீட்சை என்றும் அது வெளி ஒழுக்கங்களான உடல் தூய்மை அனுஷ்டானங்கள் என்கிறார் அகத்தியர்.  கிரியை என்பது உகார தீட்சை.  அது உள்ளொழுக்கங்கள், பூசை முதலியவை.  யோகம் என்பது மகார தீட்சை.  அது பிராணனின் நிலையையும் கலையைப் பற்றியும் அறிந்து தன்னை உணர்தல்.  கடைசி படியான ஞானம் என்பது நிராதார சொரூப நிலை.  ஒன்றையும் அடித்தளமாகப் பெறாமல் இருக்கும் தீப நிலை.  இங்கு தீபம் என்பது அறிவு ஒளி.

2 comments: