Verse 182
பிரணவ மகிமை
நித்தமும் நீ புத்தியுடன் பார்த்து மைந்தா
நேர்மையுடன் அந்திசந்தி பூசைபண்ண
சுத்தமுடன் சொல்லுகிறேன் புலத்தியா கேள்
சோதிஎன்ற ஆதார மூலம் பார்த்து
பத்தியுடன் அங்கிலி ஓமென்று நீயும்
பதிலாக மானதமா உருவே செய்தால்
சித்தியுள்ள கணபதியும் வல்லபையும் மைந்தா
சிந்தைதனில் ஒளி விளக்காய்த் தெரிசிப்பாயே
Translation:
Glory of
Pranava
Son, seeing it
everyday through buddhi,
If you perform
the twilight, terminus (andhi-sandhi) puja,
Pulathiyaa! I am telling you completely and truthfully
Seeing the
effulgence the origin of substratum (aadhara mulam)
If you recite
aim kleem om
Mentally
Son, Siddhi
Ganapathi and Vallabhai
You will see
them as the lighted lamp in the chinthai.
Commentary:
Agatthiyar
begins a series of verses on the greatness and efficacy of Pranava from this
verse onwards. He gives the benefit of
reciting the pranava here. He advises
that one should perform the andhi.sandhi puja with buddhi. This may indicate the ritualistic stipulation
that any ritual should be performed only after sandhyavandhana. None of the rituals will be beneficial unless
it is performed by one who does the sandhyavandhanam. Andhi sandhi also refers to the state that
remains inbetween definite states. These
are states like kumbaka- the state between the end of one inhalation and one
exhalation, or between two inhalations or exhalations. This is also the state between manifested and
unmanifested state. The sandhi
represents the gap when one state ends and another begins. Thus it is a state without a specific
identity, not one without identity but one to which a specific identity cannot
be attached. This is quality of the Divine,
the nirguna, the one contains all the qualities but cannot be defined by a
specific quality.
After
performing andhi sandhi Agatthiyar advises Pulatthiyar to recite the mantra aim
kleem om, mentally. This is includes the
Siva and Sakthi beeja, the male and female aspects of the Divine. If one performs this chanting he says that
one will be blessed with the vision of Ganapathy and Vallabhai, the Divinities
associated with the muladhara (or adhara mulam- the origin of the adharas or
substrata that support various principles).
They will be seen as the flame of the lamp.
இப்பாடலிலிருந்து தொடங்கி இனி வரும் பாடல்களில் அகத்தியர்
பிரணவத்தின் மகிமையைக் கூற ஆரம்பிக்கிறார்.
அதற்கு முன்னுரையாக பிரணவத்தை உச்சரிப்பதனால் ஏற்படும் பயன் என்று
கூறுகிறார். அதற்கு முன் சடங்காக ஒருவர்
அந்திசந்தி பூசை செய்யவேண்டும் என்கிறார் அகத்தியர். அந்தி சந்தி என்பது சந்தியாவந்தனத்தைக் குறிக்கலாம். சடங்குகளை விவரிக்கும் நூல்களை அனைத்தும் எந்த
ஒரு விசேஷ சடங்கைச் செய்வதற்கும் ஒருவர் முதலில் சந்தியாவந்தனம் செய்துவிட்டே
ஆரம்பிக்கவேண்டும் என்று கூறுகின்றன.
சந்தியாவந்தனம் செய்யாத ஒருவர் ஒரு சடங்கைச் செய்தால் அந்த சடங்கால்
அவருக்கு பயன் ஏற்படாது.
அந்தி சந்தி என்பது இரு தத்துவங்கள் சந்திக்கும் இடத்தையும்
குறிக்கலாம். சந்தியாகாலம் என்பது பகலும்
இரவும் சந்திக்கும் நேரம். இந்த நேரத்தை
பகல் என்றும் கூற முடியாது இரவு என்றும் கூறமுடியாது. அந்த சந்திப்பு உள்மூச்சு வெளிமூச்சுக்கள்
சந்திக்கும்போதும் ஒரு சுவாசம் முடிந்து மற்றொன்று துவங்குவதற்கு இடையேயும், ஒரு
எண்ணம் முடிந்து மற்றொரு எண்ணம் தொடங்குவதற்கு முன்னும் என்று பல இடங்களில்
நிகழ்கின்றது. இவ்வாறு சந்தி என்ற
நிலைக்கு இதுதான் என்று குறிப்பிடக்கூடிய குணம் கிடையாது. இது இறைவனை நிர்குணன் என்று கூறுவதைப் போல
உள்ளது. நிர்குணன் என்றால் குணமற்றவன்
என்று பொருளல்ல, இதுதான் இது அல்ல என்று ஒரு குறிப்பிட்ட குணத்தைக் கொண்டவனல்ல
என்று பொருள், எல்லா குணங்களுக்கும் இருப்பிடமாக உள்ளவன் என்று பொருள். அதனால் அந்தி சந்தி பூசை என்பது இறைவழிபாடு
என்றும் பொருள் தருகிறது.
இவ்வாறு பூசையை முடித்துவிட்டு புலத்தியர் ஐம் கிலீம் ஓம்
என்று மானசீகமாக ஜெபிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர். அவ்வாறு செய்தால் சக்தியுடன் கணபதியும்
வல்லபையும் ஒளி விளக்காக மூலாதாரத்தில் காட்சியளிப்பர் என்கிறார் அவர். மூலாதாரம்
அல்லது ஆதார மூலம் என்பதனால் அதுவே எல்லா ஆதாரங்களுக்கும் மூலமாக உள்ளது என்று பொருள். அதனால் அகத்தியர் மூலாதாரத்துக்கு அதிபதிகளான
சித்தி கணபதி வல்லபை ஆகியோரை முதலில் குறிப்பிடுகிறார். கணபதியும் வல்லபையும் எவ்வாறு எல்லா
காரியங்களுக்கும் துவக்கமாக இருக்கிறார்களோ அதோ போல் பிரணவ ஜபம் ஆன்மீக
முன்னேற்றத்திற்கு துவக்கமாக இருக்கிறது.
அங்கிலி-ஐயும் கிலியும் என்று எதன் அடிப்படையில் எடுத்தீர்கள்
ReplyDelete